தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோலிவுட் முதல் பாலிவுட் வரை ரஜினிக்கு இருக்கும் செல்வாக்கு நாம் அறிந்ததே.
ஆனால் விரைவில் வெளியாகவிருக்கும் கபாலி முதன்முறையாக மலாய் மொழியில் டப் செய்யப்பட்டுள்ளதால் மலேசியாவில் இதன் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதற்கு முன்பு எம்.ஜி.ஆர் நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திற்கு இப்படி ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்ததாம்.
அதன்பின்னர் 42 ஆண்களுக்கு பின்னர் ‘கபாலி’ படத்திற்குதான் இப்படி ஒரு மாபெரும் வரவேற்பு உள்ளதாம்.
கபாலி ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் அங்குள்ள ரசிகர்கள் தங்கள் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் கபாலி டிசைனை வரைந்து அசத்தி வருகின்றனர்.
இவையில்லாமல் பெரிய பெரிய பேனர்கள், கட்அவுட்களை மலேசிய தலைநகர் கோலாம்பூர் மற்றும் பினாங்கு பகுதிகளிலும் அதிகம் காண முடிகிறதாம்.
இதில் ஹைலைட்டாக ரசிகர்கள் கூறியது என்ன தெரியுமா? இந்த வருடம் ரெண்டு தீபாவளியாம்.
அதாவது கபாலி வரும் நாள் அவர்களின் மற்றொரு ‘தீபாவளி” என்றே குறிப்பிடுகின்றனர்.
இந்த கபாலி இன்னும் எத்தனை ஆச்சரியங்களை தரப்போகிறதோ?