தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பரதன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இவருடன் கீர்த்தி சுரேஷ், அபர்ணா, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஆனால் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என பெயர் வைக்கவுள்ளதாக செய்திகள் தொடர்ந்து வருகின்றன.
எனவே, இதனையறிந்த எம்ஜிஆர் பொதுநல சங்கத்தினர் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், எம்.ஜி.ஆரின் தொண்டர் படை சார்பில் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி விஜய் வீட்டின் முன் போராட்டம் நடத்த போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் என தலைப்பிடப்படலாம் என தெரிகிறது.
இதுவும் எம்ஜிஆர் படத்தலைப்பு என்பதால், இதற்கு எதிர்ப்பு வரும் முன்பே அஜித் அலர்ட் ஆவாரா? என்பதை பார்ப்போம்.