‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..; புதிய தொழில் நுட்பத்துடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ரீ-ரிலீஸ்!

‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..; புதிய தொழில் நுட்பத்துடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ரீ-ரிலீஸ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ulagam Suttrum Vaalibanஎம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம், உலகம் சுற்றும் வாலிபன்.

ஆம்… தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க., துவங்கிய பின், இப்படம், அக்கட்சி கொடியுடன், படம் வெளியானது.
இப்படத்தல், எம்.ஜி.ஆருக்கு, இரட்டை வேடம். விஞ்ஞானியான முருகன், மின்னலை பிடித்து, அதை ஆக்கபூர்வ பணிக்கு பயன்படுத்த நினைப்பார்.

அத்திட்டத்தின், ‘பார்முலா’வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும். இதை, விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வுத் துறை அதிகாரியுமான ராஜூ, எதிரிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கிறார் என்பது தான், கதை.
முருகன், ராஜூ என இரண்டு கதாபாத்திரங்களையும் எம்.ஜி.ஆர்., ஏற்று நடித்திருப்பார். லதா, மஞ்சுளா, சந்திரகலா என, மூன்று கதாநாயகியர்.

நாடு, நாடாக பயணிக்கும் சர்வதேச கதை, அதை திறமையாக கையாண்டு இருப்பார், இயக்குனர் எம்.ஜி.ஆர்.
விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர், பாடல்களை எழுதினர்.

‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், பச்சைக்கிளி முத்துச்சரம், நிலவு ஒரு பெண்ணாகி, சிரித்து வாழ வேண்டும்’ உட்பட, அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்த்தால், எம்.ஜி.ஆர், எவ்வளவு பெரிய திறமைசாலி உண்பது அனைவருக்கும் தெரியும்.

இப்படம் தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் டால்பி அட்மாஸ் சவுண்டுடன் தியேட்டரில் வெளியாக இருக்கிறது.

ரிஷி மூவிஸ் சார்பில் சாய் நாகராஜன் வழங்க, உலகம் முழுவதும் சரோஜா பிக்சர்ஸ் வெளியிட, தமிழகம் முழுவதும் 7 ஜி பிலிம்ஸ் மற்றும் சரோஜா பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து
வெளியிடுகிறார்கள்.

MGR’s this film re release in this summer

கமலுக்கு 154.. சரத்துக்கு 40.. ரவிக்கு 40..; மநீம சமக ஐஜேகே கூட்டணி தொகுதி பங்கீடு ஓவர்

கமலுக்கு 154.. சரத்துக்கு 40.. ரவிக்கு 40..; மநீம சமக ஐஜேகே கூட்டணி தொகுதி பங்கீடு ஓவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் திமுக, அதிமுக, கமல், சீமான் மற்றும் தினகரன் ஆகிய ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன.

(தேமுதிக தேர்தல் நிலைபாடு விரைவில் தெரிய வரும்..)

சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் மற்றும் (வேந்தர்) ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சியும் ‘மாற்றத்திற்கான கூட்டணி’யை அமைத்தனர்.

சமீபத்தில் இவர்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்துக் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்படி இவர்கள் மூவருக்கும் இடையே கூட்டணி ஏற்பட்டது.

மேலும் விசிக திருமாவளவனை.. “வா தம்பி.. வா தம்பி” என அழைத்து பார்த்தார் கமல்.

ஆனால் திமுக – காங் கூட்டணி கொடுத்த கொடுத்த 6 தொகுதிகளே போதும் என திருமாவளவன் அங்கேயே தங்கிவிட்டார்.

இந்த நிலையில் மநீம & சமக & ஐஜேகே ஆகிய 3 கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு ஏற்பட்டு தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு விட்டது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் சரத்குமார் (சமக) மற்றும் ஐஜேகே ஆகிய இரண்டு கட்சிகளும் தலா 40 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதனையடுத்து கமல்ஹாசன் சரத்குமார் ரவி பச்சமுத்து ஆகிய மூவரும் தங்களது தொகுதிகளில் பிரசாரம் செய்ய தயாராகிவிட்டனர்.

சீமானின் நாம் தமிழர் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணியும் இல்லாமல் 234 தொகுதிகளிலும் தனியாக போட்டியிடவுள்ளது.

தினகரனின் அமமுக அணியில் ஒவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Makkal Needhi Maiam to contest in 154 seats in TN elections

JUST IN அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்..; வீராப்புடன் வெளியேறிய விஜயகாந்த் என்ன செய்ய போகிறார்.?

JUST IN அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்..; வீராப்புடன் வெளியேறிய விஜயகாந்த் என்ன செய்ய போகிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2021 சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தையை நடத்தியது தேமுதிக.

தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்துவிட்டது அதிமுக.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் இன்று (மார்ச் 09) தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கட்சி தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவைத் தலைவர் இளங்கோவன், துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இதில், அதிமுக ஒதுக்கும் தொகுதிகளை ஏற்பதா, வேண்டாமா,? என்பது குறித்து விஜயகாந்த் ஆலோசனை நடத்தி உள்ளார்.

அப்போது கட்சித் தலைவர் விஜயகாந்த் எடுக்கும் முடிவை ஏற்போம் என, மாவட்டச் செயலாளர்கள் ஒருமனதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிக்கு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக, விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில்…

“நடைபெறவுள்ள 2021 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்தின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலையும், 2019 மக்களவைத் தேர்தலையும் அதிமுக கூட்டணியில் இருந்து எதிர்கொண்டது தேமுதிக.

தற்போது அங்கிருந்து விலகியுள்ள நிலையில், இந்தத் தேர்தலில் அக்கட்சி தனித்துப் போட்டியிடுமா? அல்லது வேறு கட்சி கூட்டணியில் இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

DMDK walks out of AIADMK-led alliance for Tamil Nadu elections

JUST IN எலெக்சன் நேரத்துல டாக்டர கண்டுக்க மாட்டாங்களே..; ரிலீஸை தள்ளி வைத்த சிவகார்த்திகேயன் டீம்

JUST IN எலெக்சன் நேரத்துல டாக்டர கண்டுக்க மாட்டாங்களே..; ரிலீஸை தள்ளி வைத்த சிவகார்த்திகேயன் டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்துள்ள படம் ‘டாக்டர்’.

இப்படம் மூலமாக தெலுங்கில் ‘கேங்ஸ்டர்’ பட நாயகி பிரியங்கா மோகன் தமிழில் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் யோகிபாபு, வினய் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் சில பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் தயாரித்துள்ளது.

இந்த மாதம் மார்ச் 26ம் தேதி டாக்டர் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என முன்பே அறிவித்து இருந்தனர்.

தற்போது தமிழகம் புதுச்சேரி கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது.

ஏப்ரல் 6ல் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நேரத்தில் டாக்டர் படத்தை ரிலீஸ் செய்தால் ரசிகர்கள் நிச்சயம் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதால் மறு ரிலீஸ் தேதி அறிவிக்காமல் படத்தின் ரிலீஸை ஒத்தி வைத்துவிட்டனர்.

அந்த அறிவிப்பு இதோ…

Sivakarthikeyan’s Doctor release postponed

IMG-20210309-WA0067

தம்பி அஜித்தின் சாதனைகள் தொடர சீமான் வாழ்த்து

தம்பி அஜித்தின் சாதனைகள் தொடர சீமான் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது.

சென்னை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன் இந்தப் போட்டிகளை நடத்தினார்.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து சுமார் 900-க்கும் மேற்பட்டோர் இந்தப் போட்டியில் பங்கேற்றற்றனர்..

60-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பல்வேறு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. சென்னை ரைஃபிள் கிளப், மதுரை ரைஃபிள் கிளப், கோயம்புத்தூர் ரைஃபிள் கிளப் உட்பட 52 கிளப்கள் இந்தப் போட்டிகளில் பங்கெடுத்தன.

இதில் சென்னை ரைஃபிள் கிளப் அணி பல்வேறு பதக்கங்களைக் குவித்தது. சென்னை ரைஃபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித் அவர்கள் 6 பதக்கங்களை வென்றார்.

அவருக்கு கிளப்பின் இதர உறுப்பினர்கள் தங்களுடையப் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் அவர்கள் வென்றுள்ள பதக்கங்களின் விவரம்:

* ஏர் பிஸ்டல் 10 மீ – தங்கம்

* சென்டர் ஃபயர் பிஸ்டல் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) (25 மீ) – வெள்ளி

* சென்டர் ஃபயர் பிஸ்டல் (என்.ஆர்) – (25 மீ) – தங்கம்

* ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) – (25 மீ) – தங்கம்

* ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (என்.ஆர்) – (25 மீ) – வெள்ளி

* ஃப்ரீ பிஸ்டல் (50 மீ) – தங்கம்

இந்த நிலையில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற நடிகர் அஜித்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

“சென்னை ரைஃபிள் கிளப்’ அணிக்காக தம்பி அஜித்குமார் அவர்கள் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

தம்பி அஜீத் திரைப்பட நடிகராக மட்டுமின்றி, துப்பாக்கி சுடுதல், இரண்டு, நான்கு சக்கர வாகனப் பந்தயங்களில் பங்கெடுத்தல், நவீன எந்திரப் பொறிகளை உருவாக்குதல் உள்ளிட்டப் பன்முகத் திறமைகளைக் கொண்டவராக விளங்குவது பாராட்டுக்குரியது.

இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் தனது தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கேற்பத் திகழும் தம்பி அஜீத் அவர்கள் தொடர்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் எனவும் கூறியுள்ளார் சீமான்.

NTK leader Seeman wishes to Ajith

மீண்டும் இணையும் 100 பட கூட்டணி..; Pramod Films நிறுவனத்தின் 25வது திரைப்படம்

மீண்டும் இணையும் 100 பட கூட்டணி..; Pramod Films நிறுவனத்தின் 25வது திரைப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரையுலகில் மிகவும் மதிப்புமிகு, தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக, தமிழ், இந்தி,தெலுங்கு, பெங்காலி என பல மாநில மொழிகளிலும் எண்ணற்ற வெற்றிபடங்களை தொடர்ந்து தந்து வரும் நிறுவனம் தான் Pramod Films.

இதுவரை பல மொழிகளில் 24 படங்களை Ziddi, Love in Tokyo, Tumse Achha Kanu hai, Naya Zamana, Jugnu (மிகபெரும் வெற்றிப்படம்), Warrant, Dream Girl, Azaad, Patita, Jyoti, Nastik, Jagir, Teen Murthi, Shatru, Birodh, Deedar, Barood, From Sydney with love, Tuzhya Vin Marjawaan, Jomer Raja Dilo Bor, Deva, Lakshmi, Sweater மற்றும் Maara போன்ற படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த நிறுவனமான Pramod Films தனது 25 வது படைப்பாக நடிகர் அதர்வா முரளி நடிப்பில் இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கும் படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு 2021 மார்ச் 8 ஆம் தேதி படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் துவங்கியது.

தயாரிப்பாளர் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா கூறியதாவது..

எங்களது 25 வது படைப்பாக ஒரு தமிழ் படத்தை தயாரிப்பது பெரும் மகிழ்ச்சி. திரைப்படங்கள் மீது தீவிரமான காதலுடன், தனித்தன்மை மிக்க நேர்த்தியான கதைகளை ரசிர்கள் கொண்டாடும் வண்ணம் தருவதில் கவனமுடன் இயங்கிவருகிறது எங்கள் நிறுவனம்.

எங்கள் நிறுவனத்தில் உருவான “மாறா” படமே அதற்கு சாட்சி.

இப்படத்திற்கு ரசிகர்கள் தந்த பேராதரவு தான் மேலும் தமிழில் படங்கள் செய்ய பெரும் ஊக்கமாக அமைந்திருக்கிறது.

உங்கள் அனைவரின் ஆசியுடன் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கும் எங்கள் நிறுவனத்தின் 25 வது படைப்பை துவங்கியுள்ளோம்.

அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் வெவ்வேறு வகையான ஜானர்களில் படங்களை முயற்சித்து பார்ப்பவர்கள். முன்னதாக அவர்கள் கூட்டணியில் உருவான 100 படம் பெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

ஆக்சன் கமர்ஷியல் திரைப்படமாக அனைவரும் ரசிக்கும் படைப்பாக இப்படம் இருக்கும்.

Atharvaa’s next with 100 the movie director

More Articles
Follows