எம்ஜிஆர் ரஜினி கமல் விஜய் படங்களுக்கு பாடல் எழுதிய கவிஞர் புலமைப்பித்தன் மரணம்..; அவரைப் பற்றிய தகவல்கள்

எம்ஜிஆர் ரஜினி கமல் விஜய் படங்களுக்கு பாடல் எழுதிய கவிஞர் புலமைப்பித்தன் மரணம்..; அவரைப் பற்றிய தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கவிஞர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 85.

அவரது உடல் மருத்துவமனையிலிருந்து நீலாங்கரையில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘புலமைப்பித்தன்’ பற்றி சில தகவல்கள்…

1935ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் பிறந்தவர் புலமைபித்தன்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் அரசவைக் கவிஞராகவும், அதிமுக அவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்து பெரிய வெற்றி பெற்ற ‘குடியிருந்த கோயில்..’ திரைப்படத்தில் இடம்பெற்ற நான் யார்.. நான் யார்.. நீ யார்… என்ற பாடலின் மூலம் புகழ் பெற்றவர் புலமைப்பித்தன்.

மேலும் அடிமைப்பெண், குமரிக்கோட்டம், நல்லநேரம், நினைத்ததை முடிப்பவன், நீதிக்கு தலைவணங்கு, உலகம் சுற்றும் வாலிபன் என படங்களுக்கும் பாடல்களை எழுதி உள்ளார்.

ரஜினியின் பணக்காரன், சிவா உள்ளிட்ட பல படங்களுக்கும் தங்கமகன் படத்தில் இடம்பெற்ற “ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ” பாடலையும் எழுதியிருக்கிறார்.

கமல் நடித்த நாயகன் படத்தில் நிலா அது வானத்து மேலே பாடலை தவிர மற்ற அனைத்து பாடல்களையும் (“நான் சிரித்தால் தீபாவளி”… “நீ ஒரு காதல் சங்கீதம்) எழுதியவர் இவர்தான் தான்.

இவர் 1000க்கும் மேற்பட்ட எண்ணற்ற பாடல்களை எழுதியுள்ளார்.

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் அறிமுக பாடலான ஆயிரம் நிலவே வா… என்ற பாடலையும் இவர் தான் எழுதினார்.

பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு படத்தில் இடம் பெற்ற “அம்மாடி இது தான் காதலா” மற்றும் “காமதேவன் ஆலயம்” ஆகிய சூப்பர் ஹிட் பாடலையும் இவர்தான் எழுதினார்.

விஜய்யின் தெறி படத்தில் இடம்பெற்ற (வளைகாப்பு பாடலான) தாய்மை வாழ்கென… என்ற பாடலை எழுதியவரும் புலமைப்பித்தன் தான் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lyricist Pulamaipithan passes away at 85

தமிழ்நாட்டின் முதல் திரையரங்க உரிமையாளரின் பேத்தி அறிமுகமாகும் ‘யுத்த சத்தம்’

தமிழ்நாட்டின் முதல் திரையரங்க உரிமையாளரின் பேத்தி அறிமுகமாகும் ‘யுத்த சத்தம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kallal Global Entertainment சார்பாக D.விஜயகுமரன் வழங்கும், இயக்குநர் எழில் இயக்கத்தில், ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “யுத்த சத்தம்” படத்தில், நடிகை சாய் பிரியா தேவா நாயகியாக நடிக்கிறார் !

சினிமாவின் மரபணுக்கள் இரத்தத்தின் வழியாகவே ஓடும் குடும்பங்களிலிருந்து, சிறந்த திறமைகள் திரைப்படத் தொழிலுக்கு வருவது தடுக்க முடியாததாகவே உள்ளது.

தமிழ் திரையுலகம் அத்தகைய சிறந்த திறமையான நடிகர்கள் பலரை கொண்டாடி ஏற்றுக்கொண்டிருக்கிறது.

அவர்களிடம் தன்னிச்சையாகவே நடிப்பு திறமை அதிகமாக இருக்கிறது, பார்வையாளர்களின் இதயங்களை அவர்கள் எளிதில் வென்றுவிடுகின்றனர்.

இந்த வரிசையில் தமிழ் சினிமா உலகில் நாயகியாக நடிகை சாய் பிரியா தேவா புதிதாக இணைந்திருக்கிறார்.

இயக்குனர் எழில் இயக்கிவரும், மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமான “யுத்த சத்தம்” படத்தில் நாயகி கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.

தமிழ் சினிமா திரையரங்கு வர்த்தகத்தில் கொடிகட்டி பறந்த புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், நடிகை சாய் பிரியா தேவா தனது முந்தைய தலைமுறையினரின் கலைத்திறமையை இயல்பிலேயே பெற்றுள்ளார்.

நடிகை சாய் பிரியா தேவா இது குறித்து கூறியதாவது….

எனது தாத்தா தமிழ்நாட்டின் முதல் திரையரங்கான முருகன் டாக்கீஸ் (மிண்ட், சென்னை), உரிமையாளர் என்பதில் எனக்கு எப்போதுமே பெருமை உண்டு.

நான் வளரும்போது திரைப்படங்களின் ஈர்ப்பு மட்டுமல்லாது, பார்வையாளர்கள் படங்களை எப்படி ரசிக்கிறார்கள் என்பதையும் பார்த்தே வளர்ந்தேன்.

இது பார்வையாளர்களிடமிருந்து பாராட்டு வாங்க வேண்டும் என்கிற ஆர்வத்தை என்னுள் ஏற்படுத்தியது. அப்படியாகத்தான் நடிப்பு துறையை என் தொழிலாக நான் தேர்ந்தெடுத்தேன்.

முதலில் சினிமாவில் நடிப்பதை என் குடும்பத்தினர் விரும்பவில்லை. ஆனால் என் ஆர்வத்தை கண்டு, என்னை புரிந்துகொண்டு, பின்னர் எனக்கு ஆதரவளித்தனர்.

நான் நடிப்பை முறையாக கற்றுக்கொண்டு மாடலிங்க் செய்து என்னை படிப்படியாக தயார் செய்து கொண்டேன்.

இயக்குநர் பி வாசு சாரின் ‘சிவலிங்கா’ திரைப்படத்தில் இரண்டாவது நாயகி கதாபாத்திரத்தில் நடித்ததுதான் எனது முதல் திரைப்பட அறிமுகம், அதன் பிறகு நான் ஒரு மலையாள படத்தில் டோவினோ தாமஸுக்கு ஜோடியாக நாயகி கதாபாத்திரத்தில் நடித்தேன்.

இயக்குநர் எழில் சாரின் “யுத்த சத்தம்” படத்திற்காக ஆடிஷன் அழைப்பு வந்தபோது நான் மிக மிக மகிழ்ச்சியடைந்தேன்.

என்னால் முடிந்தளவு மிக சிறப்பாக ஆடிஷனில் நடித்து காட்டினேன். மூன்று நாட்களுக்குப் பிறகு, நான் தான் இப்படத்தின் நாயகி என்ற தகவல் கிடைத்தது.

இந்த சிறந்த வாய்ப்புக்காக எழில் சார் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இயக்குநர் எழில் சார் எந்த வகை திரைப்படங்களை உருவாக்கினாலும், அவரது படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அவரது படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது எனது அதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன்.

அதிலும் மிகசிறந்த நடிகர்களான இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இருவருடனும் நடிப்பது பெருமை என்றார்.

“யுத்த சத்தம்” திரைப்படத்தில் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இயக்குநர் எழில் திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார்.
தமிழகத்தின் முன்னணி குற்ற நாவலாசிரியர்களில் ஒருவரான ராஜேஷ்குமார் எழுதியுள்ளார்.

சாய் பிரியா தேவா நாயகியாக நடிக்க பிச்சைக்காரன் புகழ் மூர்த்தி, மிதுன் மகேஸ்வரன், முத்தையா கண்ணதாசன், , ரோபோ சங்கர், காமராஜ், மது ஸ்ரீ, மனோபாலா, சாம்ஸ், வையாபுரி, கும்கி அஷ்வின் மற்றும் மற்றும் பல முக்கிய கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

டி இமான் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

கனல் கண்ணன் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார். சுகுமார் கலை இயக்கம் செய்ய, முருகேஷ் பாபு வசனங்கள் எழுதுகிறார். யுகபாரதி பாடல் வரிகள் எழுத, தினேஷ், தினா மற்றும் அசோக் ராஜா நடன இயக்கம் செய்துள்ளனர்.

Kallal Global Entertainment சார்பாக D.விஜயகுமரன் “யுத்த சத்தம்” படத்தை தயாரிக்கின்றார். இப்படத்தை வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Sai Priya Deva plays female lead in Yuddha Saddham

க்ரைம் த்ரில்லர் மூவிக்காக இணையும் அர்ஜூன் & ஐஸ்வர்யா ராஜேஷ்

க்ரைம் த்ரில்லர் மூவிக்காக இணையும் அர்ஜூன் & ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GS ARTS தயாரிப்பாளர் G. அருள் குமார் வழங்கும், தினேஷ் லக்ஷ்மணன் இயக்கும் ஆக்‌ஷன் கிங் அர்ஜீன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகிறது, புத்தம் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம்.

ஆக்சன் கிங் அர்ஜூன் ஆக்‌ஷன், க்ரைம் படங்களுக்கு பெயர் பெற்றவர்.

அவர் நடித்த க்ரைம் ஆக்‌ஷன் படங்களின் பிரமாண்ட வெற்றிகளை தொடர்ந்து, ஆக்‌ஷன் கிங் பட்டத்தை பெற்றவர்.

அவரது தொடர் திரில்லர் படங்களின் வெற்றிகளை தொடர்ந்து, புதிதாக மீண்டும் ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

GS ARTS தயாரிப்பாளர் G. அருள்குமார் படம் குறித்து கூறியதாவது …

இது ஒரு க்ரைம் -த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார்.

இது மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட திரைப்படம்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திரத்திம் படத்தில் மிகவும் முக்கியத்துவம் மிகுந்த கதாப்பாத்திரமாகும்.

இயக்குனர் தினேஷ் லக்ஷ்மணன் திரைக்கதையை முதன்முதலில் விவரித்தபோது, நான் பார்வையாளராக மிகவும் ரசித்தேன்.

திரையரங்குகளில் இப்படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு, நீண்ட காலத்திற்குப் பிறகு க்ரைம்-த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் வகைகளில் ஒரு புதிய அனுபவத்தை இப்படம் தரும்.

நடிகர் அர்ஜுன் இந்த வகையைச் சேர்ந்த திரைப்படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், இப்படம் அதிலிருந்து மாறுபட்டு, தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் என்றார்.

இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை, GS ARTS சார்பில் தயாரிப்பாளர் G. அருள்குமார் தயாரிக்கிறார்.

சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவாளர், பரத் ஆசீவகன் இசையமைப்பாளர், லாரன்ஸ் கிஷோர் எடிட்டர், அருண் சங்கர் துரை கலை இயக்குநர், விக்கி ஸ்டண்ட் மாஸ்டர், சுரேஷ் சந்திரா மக்கள் தொடர்பு பணிகளை செய்கிறார்.

ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் இன்னும் பல முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர்.

GS ARTS PRODUCER G. ARUL KUMAR PRESENTS DINESH LAKSHMANAN DIRECTORIAL ACTION KING ARJUN-AISHWARYA RAJESH STARRER CRIME-THRILLER INVESTIGATION

Arjun and Aishwarya Rajesh joins for a crime thriller movie

ரசிகர் வீட்டில் ஒருவராகவே மாறி நிக்காஹ் செய்து வைத்த விஜய் ஆண்டனி

ரசிகர் வீட்டில் ஒருவராகவே மாறி நிக்காஹ் செய்து வைத்த விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் தீவிர ரசிகர் பீர் முகமது.

விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களின் துவக்க விழா, வெளியீடு என்று எந்த விழாவாக இருந்தாலும் முதல் ரசிகராக பட போஸ்டர் ஒட்டுவது, திரையரங்கத்தின் முகப்பை அலங்கரிப்பது என்று வரிந்துகட்டிக்கொண்டு களப் பணியாற்றக் கூடியவர்.

இவருடைய மகள் (நிக்காஹ்) திருமணம் சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்றது.

இந்த விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.

இந்த விழாவில் முக்கிய பிரமுகர் போல் இல்லாமல் திருமண வீட்டார் போல் வெகு நேரம் அங்கிருந்து விழாவுக்கு வந்த விருந்தினர்களிடம் சகஜமாக பேசி விழாவை சிறப்பித்தார்.

Actor Vijay Antony took part in the marriage event of his fan daughter

Vijay Antony
Vijay Antony
‘நான் சிவப்பு மனிதன்’ பாணியில் விஜய் தந்தையின் அடுத்த அதிரடி படம்

‘நான் சிவப்பு மனிதன்’ பாணியில் விஜய் தந்தையின் அடுத்த அதிரடி படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சட்டத்தின் நுணுக்கங்களை வைத்தே பரபரப்பான படங்களை இயக்கியவர் எஸ் .ஏ. சந்திரசேகர். அவரது இயக்கத்தில் 71வது படமாக உருவாகி இருக்கிறது ‘நான் கடவுள் இல்லை’ திரைப்படம்.

இப்படத்தை ஸ்டார் மேக்கர்ஸ் சார்பில் எஸ்.ஏ. சந்திரசேகர் தயாரிக்கிறார்.

சமுத்திரகனி, பருத்திவீரன் சரவணன், எஸ்.ஏ. சந்திரசேகர், இனியா, சாக்ஷி அகர்வால், அபி சரவணன், யுவன் மயில்சாமி, ரோகினி, இமான் அண்ணாச்சி, மதுரை மாயக்கா, சிறுமி டயானா ஸ்ரீ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு மகேஷ் K தேவ்,
இசை சித்தார்த் விபின்,
எடிட்டிங் பிரபாகர். கலை வனராஜ்.

இப்படத்தில் ஒரு தைரியமான போலீஸ் அதிகாரியாக சமுத்திரகனி நடித்திருக்கிறார்.

அவரது பாத்திரம் வழக்கமானதாக இல்லாமல் புதுமையாக அதிரடியாக இருக்கும். அவரது மனைவியாக இனியாவும் மகளாக டயானா ஸ்ரீயும் நடித்திருக்கிறார்கள்.

அழுத்தமான வித்தியாசமான வில்லனாகப் பருத்திவீரன் சரவணன் நடித்துள்ளார்.ஒரு காலத்தில் சட்டத்தின் நுணுக்கங்களை கையில் எடுத்துக்கொண்டு பரபரப்பான படங்களை இயக்கியவர் .

அந்தக் காலத்தில் ‘நான் சிவப்பு மனிதன்’ என்ற பரபரப்பான படம் இயக்கி பெயர் பெற்றார். அதே பாணியில் இந்த ‘நான் கடவுள் இல்லை’ படத்தையும் இயக்கியிருக்கிறார்.

படத்தின் ஆடியோ விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று 5 மணிக்கு வெளியாகி வைரலாகி வருகிறது.

Director SA Chandra Sekar’s next film like Naan Sigappu Manithan

நர்ஸ்களுடன் ‘சத்ரியன்’ பார்த்த விஜயகாந்த்..; பழைய பன்னீர் செல்வமா வரணும் என நெட்டிசன்கள் வாழ்த்து

நர்ஸ்களுடன் ‘சத்ரியன்’ பார்த்த விஜயகாந்த்..; பழைய பன்னீர் செல்வமா வரணும் என நெட்டிசன்கள் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உடல் நலக்குறைவால் வருடந்தோறும் மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்வது தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வழக்கம்.

இந்த வருடமும் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி துபாய் சென்றார். அவருடன் அவரது இளைய மகன் சண்முகபாண்டியனும் சென்றுள்ளார்.

இந்நிலையில், சிகிச்சைக்காக துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த், தான் நலமுடன் இருப்பதாக புகைப்படத்துடன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,.

“நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சத்ரியன் படத்தில் வரும் வசனம் போல… பழைய பன்னீர் செல்வமா வரணும் என நெட்டிசன்கள் கேப்டனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜயகாந்த் நடித்த படங்களில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் ‘சத்ரியன்’. இந்த படத்தை தான் விஜய் நடிப்பில் ‘தெறி’யாக இயக்கினார் அட்லி என்பது குறிப்பிடத்தக்கது.

Am doing well. Watching ‘Satriyan’ movie, with Sisters who taking care of me.

நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம். https://t.co/QekthdQNz2

DMDK founder Vijayakanth health update

More Articles
Follows