சில்மிஷம் செய்ய வைத்தவரே.. கருப்பு எம்ஜிஆரே..; விஜயகாந்த் நலம் பெற மன்சூர் அலிகான் கடிதம்

சில்மிஷம் செய்ய வைத்தவரே.. கருப்பு எம்ஜிஆரே..; விஜயகாந்த் நலம் பெற மன்சூர் அலிகான் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடவுளுக்கு வேண்டுகோள்..

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. அவர் இன்னும் சில தினங்கள் சிகிச்சையில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவமனை கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே விஜயகாந்த் நலம்பெற வேண்டி பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்த் நலம் பெற வேண்டி கடவுளிடம் கோரிக்கை வைத்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.

அந்த அறிக்கையில்…

அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை.? உங்கள் மன்சூரலிகான் அழுகிறேன். நன்றாகி வாங்கண்ணே!!

கேப்டன் நடனக்காரனான என்னை நாடறியச்செய்த திருமலை நாயக்க நாயகனே! எதிர்நாயகனை அடிக்கவே விடாது பில்டப் செய்தும் டூப் போட்டும் சூப்பர்மேனாய் கதாநாயகர்கள் வலம் வந்த காலத்தில், திருப்பி அடி, பறந்து அடி, என தாங்களை உதைக்க வைத்து, திருப்பி காற்றிலே பறந்து ஒரு கழுதை உதை உதைப்பீர்களே.

அண்ணே! இனி எப்ப வந்து உதைப்பீர்கள்? மதுரை மீனாட்சி அம்மன் தூண்கள் போன்று இருக்கும் கால்கள் மெலிந்ததேனோ மன்னவனே! நாயகிகளை, துரத்த வைத்து, கடத்த வைத்து, சில்மிஷம் செய்ய வைத்து. ஓடி. ஆடி … உழைப்பை பிழிய வைத்தவனே!

சாப்பிடுகிற சோறு உடம்பில் ஒட்ட வைத்தவனே! நீவீர் வாழ்வீர் நூறாண்டு. யாரோ தவறாக வீடியோவை கட் செய்து அனுப்பிவிட்டனர் கடவுளிடம். தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இங்குளர் நிறைய.

கருப்பு எம்.ஜி.ஆரே. ஆயிரக்கணக்கானரை வாழவைத்த ஆலவிருட்சமே! மக்களோடுதான் கூட்டணி என்றாய் ! மகராசி அம்மாவுடன் கூட்டணி வைத்து எதிர்கட்சி தலைவரானாய் ! மகராசியை மரணிக்கச் செய்துவிட்டனர். எங்கள் மாநகர காவலனை, பூந்தோட்ட காவல்காரனை. வேதனைக்கு உள்ளாக்காதீர் இறைவா. இன்னல்களை இலகுவாக்கு !!

கேப்டனை மருத்துவத்தில் மீட்டு புரட்சிக் கலைஞராய் ஒப்படை! நண்பன் ராவுத்தருக்காக தர்கா சென்றவரை, அவரின் ரசிக, ரசிகையர் பக்தர்களுக்காக பத்திரமாக தா …100வது படம் எந்த நாயகர்களுக்கும் ஓடியதில்லை.

தாங்களது 100வது படத்தில் முதல் வாய்ப்பளித்து வெற்றி திருமகளை மாலையிட வைத்த பிரபாகரனே|வாழிய வாழிய நூறாண்டு ‘!! தாங்களிடம் அடிவாங்க காத்திருக்கும் தம்பி.

Mansoor Alikhan letter to God to recover Vijayakanth

RATHNAM 1st SHOT முதன்முறையாக விஷால் படத்திற்கு இசையமைக்கும் பிரபலம்

RATHNAM 1st SHOT முதன்முறையாக விஷால் படத்திற்கு இசையமைக்கும் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் தற்போது தனது 34 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹரி இயக்கி வருகிறார். இதற்கு முன்பு இவர்களது கூட்டணி தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய இரு படங்களில் இணைந்தது.

தற்போது மூன்றாவது முறையாக இந்த படத்திற்கு இணைந்து பணிபுரிந்து வருகின்றனர்.

விரைவில் இந்த படத்தின் தலைப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் படத்தின் இசையமைப்பாளரை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

விஷால் படத்திற்கு முதன்முறையாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இது தொடர்பான வீடியோ ஒன்றில்.. எனது 19 வருட சினிமா வாழ்க்கையில் தற்போது தான் முதன்முறையாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் நடிக்கிறேன்.

பல காரணங்களால் அவருடன் இணைந்து பணி புரியாமல் போய்விட்டது. ராக்கிங் ஸ்டார் உடன் இணைந்து சிறந்த பாடல்களை கொடுக்க காத்திருக்கிறோம் என விஷால் தெரிவித்துள்ளார்.

விவேகா பாடல்களை எழுத நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை தயாரித்து வருகிறார். சண்டை பயிற்சிகளை திலீப் மற்றும் பீட்டர் ஹெயின் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது இந்த படத்திற்கு ‘ரத்தினம்’ என்ற தலைப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளது படக்குழு.

First time Devi Sri Prasad music for Vishal movie

லோகேஷ் – விஜயகுமார் இணைந்த ‘ஃபைட் கிளப்’-ஐ வாங்கிய சக்திவேலன்

லோகேஷ் – விஜயகுமார் இணைந்த ‘ஃபைட் கிளப்’-ஐ வாங்கிய சக்திவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இதுவரை ஐந்து தமிழ் படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த ஐந்தும் தமிழக ரசிகர்கள் அதிக அளவில் ஈர்க்கப்பட்டு கொண்டாடப்பட்டது.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ ஆகிய 5 படங்களை தொடர்ந்து அடுத்ததாக ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் லோகேஷ் கனகராஜ்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க ரஜினி நடிக்க ‘தலைவர் 171’ படத்தை இயக்க தயாராகி வருகிறார் லோகேஷ்.

இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கம் ஜீஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி முதல் படத்தை வெளியிடவும் தயாராகிவிட்டார்.

‘உறியடி’ நாயகன் விஜயகுமார் நடிக்க அப்பாஸ் ஏ.ரஹ்மத் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.

‘பைட் கிளப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வெளியிட்டு உரிமையை பிரபல விநியோகஸ்தர் சக்திவேலன் பெற்றிருக்கிறார். இந்த மாதம் டிசம்பரில் பைட் கிளப் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பைட் கிளப்

Vijayakumar starrer Fight Club movie produced by Lokesh Kanagaraj

‘ஜெய்பீம்’ மணிகண்டனின் ‘லவ்வர்-க்கு கை கொடுத்த சிம்பு

‘ஜெய்பீம்’ மணிகண்டனின் ‘லவ்வர்-க்கு கை கொடுத்த சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவை தாண்டி மிமிக்ரி கலைஞராக தமிழக ரசிகர்களால் அறியப்பட்டவர் நடிகர் மணிகண்டன்.

இதுபோல ஒருவரால் பேச முடியுமா என்ற வகையில் அஜித் & ரகுவரனின் பல வயது கேரக்டர்களையிம் பேசி அசத்தியவர் இவர்.

‘ஜெய்பீம்’ படத்தின் மூலம் கவனிக்கப்பட வைத்தவர் ‘குட் நைட்’ படத்தின் மூலம் மக்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் மணிகண்டன்.

இந்த நிலையில் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் ஒரு படம் நடித்துள்ளார் மணிகண்டன். இதில் கௌரி பிரியா நாயகியாக நடிக்க ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு ‘லவ்வர்’ என்று டைட்டில் வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரை நடிகர் சிம்பு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வெளியிட்டுள்ளார்.

லவ்வர்

Manikandans Lover first look launched by STR

‘முதல் 3டி – பேசும் படம்’ வரிசையில் ‘ஆயிரம் பொற்காசுகள்’ ஆஃபர் கொடுக்கும் கே ஆர்

‘முதல் 3டி – பேசும் படம்’ வரிசையில் ‘ஆயிரம் பொற்காசுகள்’ ஆஃபர் கொடுக்கும் கே ஆர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் என பல்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் கே ஆர், பல புதுமையான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

அவரது வித்தியாசமான முயற்சிகளில் சில பின்வருமாறு: உலகப் புகழ் பெற்ற ‘மை டியர் குட்டிச்சாத்தான்’.

இந்தியாவின் முதல் 3டி திரைப்படமான இது மாபெரும் வெற்றி பெற்றது.

குழந்தைகளுக்கான 3டி படமான ‘ஸ்பை கிட்ஸ்’ அனகிலிஃப் (Anaglif) தொழில்நுட்பத்தில் வெளியாகி பாராட்டுதல்களையும் வெற்றிகளையும் குவித்தது.

‘எங்களையும் வாழ விடுங்கள்’ படம் விலங்குகளை பேச வைத்ததோடு விலங்குகளுக்காகவும் பேசியது. ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்த ‘பேசும் படம்’ வசனங்களே இல்லாமல் வாழ்த்துகளை அள்ளியது.

மாற்றுத் திறனாளிகளின் திறமைகளை பறைசாற்றிய ‘டான்சர்’ உள்ளூர் முதல் சர்வதேச விருதுகளை பெற்றது.

இந்த வரிசையில், கே ஆர் வழங்கும் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், சரவணன், அருந்ததி நாயர் உள்ளிட்டோர் நடிக்கும் ‘ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்படத்தை புதுமையான முறையில் வெளியிட கே ஆர் தயாராகி வருகிறார்.

டிசம்பர் 22 அன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் ரெட் ஜெயண்ட் செண்பகமூர்த்தி மூலமாக இப்படம் வெளியாக உள்ளது.

கலகலப்பான நகைச்சுவை திரைப்படமான ‘ஆயிரம் பொற்காசுகள்’ படத்தின் ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம், முதல் நாள் முதல் காட்சிக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கே ஆர் அறிவித்துள்ளார். இலவச டிக்கெட்டுக்கான கட்டணத்தை விநியோகஸ்தரே ஏற்றுக்கொள்வார்.

*இது குறித்து பேசிய அவர்…

“ஒரு படத்தின் தலையெழுத்தை நிர்ணயிப்பதே முதல் நாள் முதல் காட்சி தான். பெரிய படங்கள் வியாபார ரீதியில் வசூலை அள்ளும் நிலையில், சிறு பட்ஜெட் படங்கள் நல்ல கதையம்சத்துடன் இருந்தாலும் கடந்த ஒரு வருடத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள‌ன. ஒரே வாரத்தில் அதிகளவில் படங்கள் வெளியாவதும் இதற்கு ஒரு காரணம்.

சிறு பட்ஜெட் படங்களே எடுக்க வேண்டாம் என்று சிலர் கூறி வரும் நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு இதுவல்ல. ஏதாவது செய்து பார்வையாளர்களை எப்படி திரையரங்குகளை வர வைப்பது என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும். அதற்கு ஒரு தீர்வாகத் தான் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன்,” என்றார்.

தொடர்ந்து பேசிய கே ஆர், “பெரிய படங்கள் வந்து மாபெரும் வெற்றி பெறுவது ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும் சிறு திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்றால் தான் திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று பெரிய இடத்தில் உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சிறிய படங்களின் மூலம் தங்களது பயணத்தை தொடங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிறு பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்களை புதுமையான முறையில் ஊக்குவிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தின் விளைவாக இந்த முடிவை எடுத்துள்ளேன்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்…

“தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்கு உரிமையாளர்களுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளதால் இந்த திட்டத்திற்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களும் தங்களது மேலான ஆதரவை ‘ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்படத்திற்கு வழங்கி திரையரங்குகளில் இப்படத்தை கண்டு ரசித்து மகிழ்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் :ஆயிரம் பொற்காசுகள்’ உருவாகியுள்ளது,” என்று தெரிவித்தார்.

ஜார்ஜ் மரியான், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, பவுன்ராஜ், பாரதி கண்ணன், செம்மலர் அன்னம், ஜிந்தா மற்றும் ராஜா ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜோகன் இசையமைக்க, பானு முருகன் ஒளிப்பதிவை கவனிக்க, ராம்-சதீஷ் படத்தொகுப்பை கையாள, அசோக் ராஜ் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

கலை இயக்கம்: பி சண்முகம், சண்டை பயிற்சி: ஃபயர் கார்த்திக், சவுண்ட் மிக்ஸிங்: ஏ எஸ் லட்சுமி நாராயணன், சவுண்ட் எஃபெக்ட்ஸ்: ஏ சதீஷ்குமார், பாடல் வரிகள்: நந்தலாலா, கபிலன், தனிக்கொடி, முத்துவேல், டப்பிங்: வெங்கட் சி, பலராம், ஜெமினி ஸ்டுடியோ, ஸ்டில்ஸ்: மோதிலால், டிசைன்ஸ்: சபிர், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

கே ஆர் வழங்கும் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், சரவணன், ஜார்ஜ் மரியான், அருந்ததி நாயர் உள்ளிட்டோர் நடிக்கும் ‘ஆயிரம் பொற்காசுகள்’ டிசம்பர் 22 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், முதல் நாள் முதல் காட்சியில் இத்திரைப்படத்தை பார்க்க விரும்புபவர்கள் ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என்ற புதுமையான திட்டத்தை முதல் முறையாக கே ஆர் வெளியிட்டுள்ளார்.

Producer K R introduces Buy 1 Get 2 Movie tickets offer

திகிலுடன் ‘ட்ரெயின்’-ல் பயணிக்கும் தாணு – மிஷ்கின் – விஜய்சேதுபதி

திகிலுடன் ‘ட்ரெயின்’-ல் பயணிக்கும் தாணு – மிஷ்கின் – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபகாலமாக வெற்றிப் படங்களை கொடுத்து மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் *விஜய் சேதுபதி* முதன்முறையாக இயக்குனர் *மிஷ்கினுடன்* கைகோர்த்தி உள்ளார். *ட்ரெயின் (Train)* திரைப்படத்தை தமிழ்த் திரையுலகின் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு* இந்த ட்ரெயின் (Train) படத்தை தயாரிக்கிறார்.

இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது.

எனவே *ட்ரெயின் (Train)* என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்காக *விஜய் சேதுபதி* வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார், மேலும் அவரது தோற்றத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார்.

டிம்பிள் ஹயாதி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .

இப்படத்தில் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள் .

ட்ரெயின்

தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் மிஷ்கின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

பௌசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்தை V.மாயபாண்டி மேற்கொள்கிறார்.

*ட்ரெயின் (Train)* படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கியது.

பூஜையில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் திரு முரளி ராமசாமி, திரு ராதாகிருஷ்ணன், S கதிரேசன், தயாரிப்பாளர் அன்புச்செழியன் ,
கல்யாணம் (Knack Studios)
ஆகியோர் கலந்து கொண்டனர்.

*நடிகர்கள்:*
விஜய் சேதுபதி
டிம்பிள் ஹயாதி
ஈரா தயானந்த்
நாசர்
வினய் ராய்
பாவனா
சம்பத் ராஜ்
பப்லு பிருத்விராஜ்
கே.எஸ்.ரவிக்குமார்*
செல்வா சந்திரசேகர்
யூகி சேது
கணேஷ் வெங்கட்ராமன்
கனிஹா
தியா சீதிபள்ளி
சிங்கம் புலி
ஸ்ரீரஞ்சனி
அஜய் ரத்னம்
திரிகுன் அருண்
ராச்சல் ரபேக்கா

*தொழில்நுட்ப குழு:*

இயக்கம் மற்றும் இசை: மிஷ்கின்
தயாரிப்பாளர்: ‘கலைப்புலி’ எஸ் தாணு
நிர்வாக தயாரிப்பு : எல்.வி.ஸ்ரீகாந்த்
ஒளிப்பதிவு: பௌசியா பாத்திமா
படத் தொகுப்பு: ஸ்ரீவத்சன்
கலை இயக்குனர்: வி.மாயபாண்டி
ஆடை வடிவமைப்பாளர்: ஷைமா அஸ்லாம்
படங்கள்: ஜெ.ஹரிசங்கர்
ஒலி வடிவமைப்பாளர்: ஜெஸ்வின் மேத்யூ
நிர்வாக தயாரிப்பாளர்: ஆர். உதயகுமார்
தயாரிப்பு நிறுவனம்: வி கிரியேஷன்ஸ்
மக்கள் தொடர்பு : *ரியாஸ் K அஹ்மத் (V4U மீடியா), Team AIM*

ட்ரெயின்

Thanu Mysskin Vijaysethupathi new combo movie titled Train

More Articles
Follows