எம்ஜிஆர் – சிவாஜி இணைந்த ஒரே படம் ‘கூண்டுக்கிளி’ 69 ஆண்டுகள் நிறைவு

எம்ஜிஆர் – சிவாஜி இணைந்த ஒரே படம் ‘கூண்டுக்கிளி’ 69 ஆண்டுகள் நிறைவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் 1950 1960 ஆண்டுகளை தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று கூட சொல்லலாம். இந்த காலகட்டத்தில் தான் மக்கள் திலகம் எம்ஜிஆர் & நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகிய இரு பெரும் துருவங்களை தமிழ் சினிமா பெற்றது.

இவர்கள் மறைந்து 20 30 வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்றும் தமிழக மக்களால் இருவரும் கொண்டாடப்பட்டு வருகின்றனர். அத்தகைய சாதனைகளை இருவரும் தமிழ் சினிமாவில் படைத்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ஆரம்ப காலகட்டங்களில் நடித்து தொடங்கிய போது இருவரும் ஒரே ஒரு படத்தில் மட்டும் இணைந்து நடித்திருந்தனர்.

எம்ஜிஆர் மற்றும் சிவாஜி ஆகிய இருவரும் இணைந்து நடித்த படம் தான் ‘கூண்டுக்கிளி’. இந்த படம் திரைக்கு வந்து இன்று ஆகஸ்ட் 26 ஆம் தேதியுடன் 69 ஆண்டுகளை நிறைவு செய்கிறது

ஆகஸ்டு 26

‘கூண்டுக்கிளி’ படம் திரைக்கு வந்து இன்றுடன் 69 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

1954 ஆகஸ்டு 26ம் தேதி திரைக்கு வந்தது. பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான விந்தன் கதை, திரைக்கதை, வசனத்தில் டி.ஆர்.ராமண்ணா இயக்கினார்.

அவரும், அவரது சகோதரியும் மற்றும் நடிகையுமான டி.ஆர்.ராஜகுமாரி இணைந்து தயாரித்தனர். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், டி.ஆர்.ராமண்ணாவின் மனைவி பி.எஸ்.சரோஜா, டி.ஆர்.ராஜகுமாரி சித்தி மகள் டி.டி.குசலகுமாரி நடித்த இப்படத்துக்கு தஞ்சை ராமய்யா தாஸ், கவிஞர் கா.மு.ஷெரீப், மருதகாசி பாடல்கள் எழுதினர். கே.வி.மகாதேவன் இசை அமைக்க, எம்.ஏ.ரஹ்மான் ஒளிப்பதிவு செய்தார்.

எம்ஜிஆர் - சிவாஜி

MGR and Sivaji starrer Koondukili completed 69 years

தலைவர் நிரந்தரம் கேக் டிசைன்.; ‘ஜெயிலர்’ வெற்றியை கொண்டாடிய ரஜினி – நெல்சன் – அனிருத்

தலைவர் நிரந்தரம் கேக் டிசைன்.; ‘ஜெயிலர்’ வெற்றியை கொண்டாடிய ரஜினி – நெல்சன் – அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

(இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இமயமலைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார் ரஜினிகாந்த்.)

ரஜினியின் ஸ்டைல்.. சூப்பர் ஹிட் பாடல்கள்.. நெல்சனின் பிளாக் காமெடி.. மோகன்லால் மற்றும் சிவராஜ் குமாரின் ஆக்‌ஷன்.. வில்லன் விநாயகனின் வெறித்தனமான நடிப்பு என அனைத்தையும் கலந்து இந்த படத்தை ரசிகர்களுக்கு படக்குழு வழங்கியிருந்தனர்.

இந்த படத்திற்கு பெரிய பிரமோஷன் இல்லை.. ரிலீஸ் நாளில் விடுமுறை இல்லை.. பண்டிகை தினம் இல்லை ஆனாலும் தொடர்ந்து இரண்டு வாரங்களாக பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது ‘ஜெயிலர்’.

வார நாட்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

உலகளவில் இதுவரை ரூ. 525 கோடியை ‘ஜெயிலர்’ வசூல் செய்துள்ளது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ரஜினிகாந்த் ரெக்கார்ட் மேக்கர் எனவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன் சென்னையில் ஜெய்லர் படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய இயக்குனர் நெல்சன்.. “ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை முடித்துவிட்டு திரும்பி உடன் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று ஆகஸ்ட் 25ஆம் தேதி *தலைவர் நிரந்தரம் ஜெயிலர்..* என்ற டிசைன் செய்யப்பட்ட கேக்கை ரஜினிகாந்த் வெட்டினார். இவருடன் நெல்சன் அனிருத் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் பங்கேற்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர்

Jailer success celebrated by Rajini Nelson and Anirudh

விஜய்யின் சரக்கு சாங் டைட்டிலாச்சே.; காமெடியன் செந்தில் ஹீரோவானார்.!

விஜய்யின் சரக்கு சாங் டைட்டிலாச்சே.; காமெடியன் செந்தில் ஹீரோவானார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் – அமலாபால் நடித்த ‘தலைவா’ படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் ‘வாங்கண்ணா.. வணக்கங்கண்ணா.. என்ற பாடல் இடம்பெற்றிருக்கும்.

சரக்கு அடித்து விட்டு பாடும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

வாங்கண்ண வணக்கங்கண்ணா

தற்போது இந்தப் பாடல் வரிகளே செந்தில் நடிக்கும் படத்தின் தலைப்பானது. அதன் விவரம் வருமாறு…

Rock & Role production & A.P.Production இணைத்து தயாரிக்கும் படம் “வாங்கண்ண வணக்கங்கண்ணா” (Vanganna Vanakkanganna)

வாங்கண்ண வணக்கங்கண்ணா

ஓரு எம். எல். ஏக்கும் ஓரு யூடியுபருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை.

அதிலிருந்து யூடுபர் தப்பினானா? என்பதே கதை.

காமெடி நடிகர் செந்தில் கதையின் நாயகனாக இப்படத்தில் நடிக்கிறார்.ஒரே நாளில் நடக்கும் முழுக்க முழுக்க காமெடி கதை.

வாங்கண்ண வணக்கங்கண்ணா

Story of the Hero – Comedy Actor Senthil

Hero – Sundar Mahasri
Heroine – Vijayalashmi
Comedy – Sunny Babu
Direction – Raj Kannayiram
Story, Screenplay, dialogues – Sundar Mahasri
Camera man – Deepak Tamilchelvan
Editing – Ramesh Mani
Music – Joseph Chandra sekar
Sounds – Sathish Shanthivasan
Posters – Selva
DI – Pavan
PRO-SIVAKUMAR
Producers- Yasmeen Begam , Manimagalai Lakshmanan

வாங்கண்ண வணக்கங்கண்ணா

Vijay song Vanganna Vanakkanganna became title of Senthil movie

மோகன் படத்தின் பாடல் விஜயகாந்த் மகனின் படத்தலைப்பானது

மோகன் படத்தின் பாடல் விஜயகாந்த் மகனின் படத்தலைப்பானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VJ கம்பைன்ஸ் ஜெகநாதன் பரமசிவம் மற்றும் சுமீத் ஆர்ட்ஸ் சுமீத் சாய்கல் வழங்க, Directors Cinemas தயாரிப்பில் அன்பு இயக்கத்தில் விஜயகாந்த் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படம் “படை தலைவன்”.

இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் விடியோவை கேப்டன் விஜயகாந்த் தனது பிறந்தநாள் தினமான ஆகஸ்ட் 25ல் வெளியிட்டார்.

நிகழ்வின் போது திருமதி பிரேமலதா விஜயகாந்த், திரு விஜய பிரபாகரன், “படை தலைவன்” படத்தின் நாயகன் சண்முக பாண்டியன், இயக்குனர் U அன்பு மற்றும் படக்குழுவினர் உடனிருந்தனர்.

“படை தலைவன்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் விடியோ தற்போது ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் “படை தலைவன்” படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

“வால்டர்” மற்றும் “ரேக்ளா” பட இயக்குநர் U அன்பு கதையில், “நட்பே துணை” இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை வசனத்தில், இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை, இப்படத்தில் பதிவு செய்யப்படவுள்ளது.

‘மதுரை வீரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.

கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர், ரிஷி ரித்விக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப குழு விபரம்..

கதை இயக்கம் – U அன்பு
இசை – இசைஞானி இளையராஜா
திரைக்கதை வசனம் – பார்த்திபன் தேசிங்கு
ஒளிப்பதிவு – S R சதீஷ்குமார்
படத்தொகுப்பு – இளையராஜா
ஸ்டண்ட் – மகேஷ் மேத்யூ
கலை இயக்கம் – P ராஜு
ஸ்டில்ஸ் – சக்திபிரியன்
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா AIM
பப்ளிசிட்டி டிசைனர் – தினேஷ் அசோக்

கூடுதல் தகவல்…

‘வெள்ளிவிழா நாயகன்’ மோகன் நடித்து வரும் ‘ஹரா’ படத்தை இயக்கி வருகிறார் விஜய் ஸ்ரீ ஜி.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் செப்டம்பர் 15ஆம் தேதி மலேசியாவில் ‘படைத்தலைவன்’ என்ற பாடல் வெளியாகும் என சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த ‘படைத்தலைவன்’ என்ற பாடல் தான் தற்போது விஜயகாந்த் மகனின் படத்தின் தலைப்பு ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Haraa song became title for Vijayakanth son movie title

கீரவாணி.. இந்திய இசையின் கீர்த்தியே நீ.; ஆஸ்கர் நாயகனுக்கு வைரமுத்து பாராட்டு கவிதை

கீரவாணி.. இந்திய இசையின் கீர்த்தியே நீ.; ஆஸ்கர் நாயகனுக்கு வைரமுத்து பாராட்டு கவிதை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் பிரம்மாண்டமான பட தயாரிப்பாளர் என்றால் கே.டி.குஞ்சுமோன் அவர்களை சொல்லலாம்.

ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம் உள்ளிட்ட பல பிரம்மாண்ட படங்களை தயாரித்திருந்தார். சினிமா தியேட்டர்களில் ஒரு தயாரிப்பாளருக்கே கட் அவுட் வைத்தது இவர்தான்.

கடந்த 20 வருடங்களாக பிரம்மாண்ட படங்களை தயாரிக்காமல் இருந்து வந்த அவர் தற்போது ‘ஜென்டில்மேன் 2’ என்ற படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தை கோகுல் கிருஷ்ணா இயக்க கீரவாணி இசையமைக்க பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.

இந்த படத்தில் பிரம்மாண்ட தொடக்க விழா ஆகஸ்ட் 19ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் ஆஸ்கார் விருது வென்ற கீரவாணியை பாராட்டி கவிஞர் வைரமுத்து கவிதை எழுதி இருக்கிறார்.

அந்த கவிதை இதோ….

Mega Producer @KT_Kunjumon #Gentleman2Launch விழாவில்
ஆஸ்கர்-நேஷ்னல் அவார்ட் வின்னர் இசையமைப்பாளர் @mmkeeravaani யை பாராட்டி @Vairamuthu எழுதிய வைர வரிகள்…

“கீரவாணி கீரவாணி
இந்திய இசையின் கீர்த்தியே நீ!
கீரவாணி கீரவாணி
சுந்தரத் தெலுங்கின் மூர்த்தியே நீ!

ஏழு ராகங்கள் கண்டவனே
ஏழு கண்டங்கள் வென்றவனே
தேசியம் வாழ்த்தும் திராவிடன் நீ
ஆசியா போற்றும் அதிசயம் நீ

தமிழில் முதல்படம் வானமே எல்லை – நீ
வாங்கும் புகழுக்கு வானமே எல்லை
பாகுபலிபோல் ஒன்று காணவே இல்லை
RRR உனது திறமைக்கு எல்லை

உன்
பாட்டணி வாழ்க
கூட்டணி வெல்க

பசைக்கு ஒருவன் ‘கே.டி.கே’
இசைக்கு ஒருவன் ‘எம்.எம்.கே’
ஜென்டில்மேன் – 2 வெற்றிக்’கே’..”

Vairamuthu praises Oscar Award winner MM Keeravaani

வாரிசை தொடர்ந்து வரிசை கட்டும் ஷாம் படங்கள்.; பவர்ஸ்டாருடன் கூட்டணி

வாரிசை தொடர்ந்து வரிசை கட்டும் ஷாம் படங்கள்.; பவர்ஸ்டாருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் 12 பி என்கிற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம்.

அதைத்தொடர்ந்து இயற்கை, 6 மெழுகுவர்த்திகள் என இன்றும் ரசிகர்களிடம் பேசப்படும் அருமையான படங்களில் நடித்துள்ள ஷாம், நல்ல கதை அம்சம் கொண்ட படங்களாக மட்டும் தேர்ந்தெடுத்து வருவதால் தான் தனது 20 வருட திரையுலக பயணத்தில் சீரான வேகத்தில் பயணித்து வருகிறார்.

இந்த வருட துவக்கத்திலேயே விஜய்யின் சகோதரராக ஷாம் நடித்திருந்த ‘வாரிசு’ படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது.

இதைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஷாம். இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அடுத்தததாக தமிழில் இன்னும் இரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார் நடிகர் ஷாம்.

இந்த படங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

இன்னொரு பக்கம் தெலுங்கில் ‘சாஹோ’ இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் உருவாக்கி வரும் படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ஷாம்.

அந்தவிதமாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகராக படங்களில் நடித்து வருகிறார் ஷாம்.

Actor Shaam join hands with Pawan Kalyan

More Articles
Follows