உங்கள மைண்ட்ல வச்சுருக்கேன்.. ஓவியாவுக்காக காத்திருக்கும் சிரிஸ்

உங்கள மைண்ட்ல வச்சுருக்கேன்.. ஓவியாவுக்காக காத்திருக்கும் சிரிஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Metro Shirish and Oviyaமெட்ரோ படத்தில் நாயகனாக நடித்தவர் சிரிஷ்.

இவர் தற்போது ராஜா ரங்குஸ்கி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவரின் ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் ஓவியா பற்றி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில்… என்னுடைய படத்தில் நிச்சயம் ஓவியாவுக்கு ரோல் இருக்கு. அவர் நல்ல மனம் படைத்த பெண்மணி என பதிவிட்டுள்ளார்.

இந்த டயலாக்க பார்த்தா, உங்களுக்கு காதல் பட வசனம் ஞாபகம் வந்திருக்குமே..

Metro Shirish‏ @actor_shirish
I’m strongly considering Oviya for one of my projects in the future. good hearted female

குற்றவாளி சசிகலாவின் ஆட்சித்தானே நடத்துறீங்க.. கமல் அண்ணன் சாருஹாசன் கேள்வி

குற்றவாளி சசிகலாவின் ஆட்சித்தானே நடத்துறீங்க.. கமல் அண்ணன் சாருஹாசன் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal brother charuhassanதமிழகத்தில் ஊழல் அதிகமாகிவிட்டது என கமல் பேசியதால், முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் கமலை திட்டியும் மிரட்டியும் வருகின்றனர்.

இந்நிலையில் கமலுக்கு ஆதரவாக அவரது அண்ணன் சாருஹாசன் தன் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

அதில்…

மாண்புமிகு அமைச்சர் ஜெயகுமார் அவர்களுக்கு… ’60 கோடி லஞ்ச ஊழல் குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட்ட அம்மா அவர்கள் பெயரால் ஆட்சி செய்கிறீர்கள்?

குற்றவாளியாக சிறையிலிருக்கும் சசிகலா அவர்கள் சொல்படி ஆட்சி நடத்தவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டால் உங்களை ஊழல் அற்றவர் என்று ஒப்புக்கொள்வோம்.

கையாடல் குற்றவாளியாக தீர்ப்பு முடிவான அம்மா ஆட்சியை நடத்துகிறோம் என்று சொல்லும் நீங்கள் அது இல்லை என்று சொல்லுங்களேன் பார்ப்போம். “ என கேட்டுள்ளார்.

Kamal brother Charuhassan question to TN Admk Ministers

எல்லாரும் இந்நாட்டு மன்னர்களே… தமிழ் தலைவா(ஸ்) கமல் பேச்சு

எல்லாரும் இந்நாட்டு மன்னர்களே… தமிழ் தலைவா(ஸ்) கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sachin kamal ramcharan Tamil Thalaivaas5வது புரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ் தலைவாஸ் அணியின் உடை அறிமுக விழா சென்னை கிண்டி அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் கலந்துக் கொண்டார்.

மேலும் அல்லு அரவிந்த், அல்லு அர்ஜீன், ராம்சரண் தேஜா உள்ளிட்டோரும், இந்த அணியின் பிராண்ட் அம்பாஸ்டர் கமல்ஹாசனும் கலந்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில்…

“கபடி, தமிழகத்தில் தோன்றிய விளையாட்டு என்கிற கூற்றும் உண்டு. நம் நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக விளையாடிய விளையாட்டு இது.

நான் சிறுவயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டேன். எனவே பரமக்குடியில் கபடி விளையாடவில்லை.

இளைஞன் ஆகியும் விளையாட முடியாமல் போய்விட்டது. ஒருமுறை என் முகத்தில் அடிப்பட்டதால், இயக்குனர் கபடி ஆட கூடாது என தடைப் போட்டார்.

இந்த கபடி அணிக்கு தமிழ் தலைவா என்று பெயரிடாமல் தலைவாஸ் என்று பன்மையில் பெயரிட்டுள்ளனர்.

தலைவன் என்றால் அது ஒருவரை மட்டுமே குறிக்கும்.

எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதால் தலைவாஸ் பொருத்தமாக இருக்கிறது.

இந்த அணி வெற்றி பெற்று, இறுதி ஆட்டம் விளையாட இங்கு வரவேண்டும்” என்று பேசினார்.

அண்மையில் கமல்ஹாசனை அமைச்சர் ஒருவர் ஒருமையில் பேசியிருந்தார். எனவே கமல் இப்படி பன்மையில் பேசியது குறிப்பிடத்தக்கது.

Kamalhassan speech at Tamil Thalaivaas Jersey launch

மீண்டும் நிவின்பாலியுடன் இணையும் அமலாபால்

மீண்டும் நிவின்பாலியுடன் இணையும் அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nivin Pauly romance with Amala Paul for Kayamkulam Kochunniபிரேமம் படத்தை தொடர்ந்து மலையாளத்தில் நிவின்பாலியின் மார்கெட் சூடுபிடித்துள்ளது.

தென்னிந்தியாவின் பிரபல நாயகிகளான த்ரிஷா மற்றும் நயன்தாராவுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்த படத்தில் அமலாபாலுடன் இணைகிறார்.

இவர்கள் இருவரும் இதற்கு முன்பு மிலி என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த புதிய படத்திற்கு காயகுளம் கொச்சுன்னி என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தை ரோஷன் ஆண்ட்ரூ இயக்கவுள்ளார். இவர்தான் ஜோதிகா நடித்த 36வயதினிலே என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nivin Pauly romance with Amala Paul for Kayamkulam Kochunni

ஹிந்தியை எதிர்த்த கமல் ஏன் ஹிந்தி படத்தில் நடித்தார்..? – ஜெயக்குமார்

ஹிந்தியை எதிர்த்த கமல் ஏன் ஹிந்தி படத்தில் நடித்தார்..? – ஜெயக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal haasan and Minister jayakumarஇந்தி மொழியை தமிழகத்தில் திணித்தபோதே எதிர்ப்பு தெரிவித்து, நான் அன்றே அரசியலில் பங்கு பெற்றேன் என கமல் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருந்ததாவது…

இந்தி மொழியை எதிர்த்தேன் என்று கூறும் கமல், ஏக் துஜே கேலியே என்ற இந்திப் படத்தில் நடித்து ஏன் இந்தியை பரப்பினார்.

இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை, கர்நாடக தண்ணீர் பிரச்சினை என குரல் கொடுக்காதவர் கமல்.

முக. ஸ்டாலின் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்துடன் கமல் கூட்டணி வைத்துள்ளார்.” என்று தெரிவித்தார்.

திமுக விழாவில் பங்கேற்க ரஜினி-கமலை அழைத்த ஸ்டாலின்

திமுக விழாவில் பங்கேற்க ரஜினி-கமலை அழைத்த ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK Stalinவருகிற ஆகஸ்ட் 10ஆம்தேதி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முரசொலி நாளிதழின் பவளவிழா நடைபெறவுள்ளது.

இதில் பல அரசியல் பிரமுகர்கள் கலந்துக் கொள்ளவிருக்கிறார்கள்.

இந்நிலையில் இதில் கலந்துக் கொள்ள ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு முக.ஸ்டாலின் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

இருவரும் கலந்துக் கொள்வார்கள் என்றே சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினியும், தமிழக அரசியலில் ஊழல் பெருத்துவிட்டது என கமலும் கூறி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுகவின் எதிரிக்கட்சியான திமுக விழாவில் இவர்கள் கலந்துக் கொள்ள இருப்பதால், இவ்விழா பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது

More Articles
Follows