நான் யாருன்னு தெரியுமா..? மார்ச் 15ல் விடை சொல்லும் சிம்பு

நான் யாருன்னு தெரியுமா..? மார்ச் 15ல் விடை சொல்லும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Naa Yaarunnu theriyuma single track launch updates‘மெட்ரோ’ பட புகழ் சிரிஷ் மற்றும் சாந்தினி தமிழரசன் ஜோடியாக நடித்து வரும் படம் ‘ராஜா ரங்குஸ்கி’.

குற்றப் பின்னணியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சிரிஷ் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

‘ஜாக்சன் துரை’ படத்திற்கு பிறகு தரணிதரன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

சக்தி வாசன் மற்றும் பர்மா டாக்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று நாளை வெளியாகவுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் `நான் யாருன்னு தெரியுமா’ என்ற ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.

அந்த பாடலைதான் நாளை வெளியிடவுள்ளனர்.

Naa Yaarunnu theriyuma single track launch updates

raja ranguski

நட்பும்-காதலும் இல்லை; த்ரிஷாவுடன் ஒரு வகையான அன்பே உள்ளது.. சிம்பு

நட்பும்-காதலும் இல்லை; த்ரிஷாவுடன் ஒரு வகையான அன்பே உள்ளது.. சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and trishaஅலை மற்றும் விண்ணை தாண்டி வருவாயா ஆகிய படங்களில் சிம்புவும் திரிஷாவும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த ஜோடிக்கு ரசிகர்களிடையே எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் ஒரு தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் திரிஷா பற்றி சிம்பு பேசும்போது…

“த்ரிஷாவை சிறுவயதில் இருந்தே எனக்கு தெரியும். அவர் நடிக்க வருவார் என எதிர்பார்க்கவில்லை. ஒரு நாள் திடீர் என ஹீரோயின் ஆகிவிட்டார்.

அவரிடம் பந்தா எதுவும் கிடையாது. எதுபற்றி வேண்டுமானாலும் நாங்கள் பேசுவோம்.

எங்களிடம் இருப்பது நட்பு அல்ல. காதலும் அல்ல. ஆனால் அது ஒருவகையான அன்பு. ஆதரவு” என்று பேசினார்.

பெண்களை அசிங்கப்படுத்துகிறார்; ஆர்யாவின் பெண் வேட்டைக்கு மாதர் சங்கம் எதிர்ப்பு

பெண்களை அசிங்கப்படுத்துகிறார்; ஆர்யாவின் பெண் வேட்டைக்கு மாதர் சங்கம் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ladies association oppose for Aryas Enga Veetu Maappillai showகலர்ஸ் டிவி என்ற தமிழ் சேனலின் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவுக்கு பெண் பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியை நடிகை சங்கீதா தொகுத்து வழங்கி வருகிறார்.

இதில் 16 பெண் போட்டியாளர்கள் பங்கு பெற்று உள்ளனர்.

இதில் தேர்வாகும் ஒரு பெண்ணைத்தான் ஆர்யா தன் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்யப்போவதாக கூறப்படுகிறது.

அதில் பங்கு பெறும் பெண்களும் ஆர்யாவை கவர பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நடைபெறும் சூட்டிங்கில் கலந்து கொள்ள ஆர்யா சென்றிருந்தார்.

கும்பகோணம் கல்லூரி சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அவர் தங்கியிருந்தார்

இதுபற்றி தகவல் அறிந்த கும்பகோணம் துர்கா மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் அந்த ஓட்டலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்யா பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், தமிழக கலாசாரத்தை சீரழிப்பதாகவும் இருப்பதால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த பெண்கள் போராட்டத்தின் போது வலியுறுத்தினர்.

Ladies association oppose for Aryas Enga Veetu Maappillai show

ரஜினியுடன் நடிச்சா பெரிய நடிகையா.?; நிர்வாணமாக கூட நடிப்பேன்… : ஆண்ட்ரியா

ரஜினியுடன் நடிச்சா பெரிய நடிகையா.?; நிர்வாணமாக கூட நடிப்பேன்… : ஆண்ட்ரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

andrea jeremiahபெரும்பாலும் இந்திய சினிமாவில் நடிகர்களின் படங்களுக்கே அதிக மார்கெட் உள்ளது.

அவ்வாறாக இருந்தபோதிலும் நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்ட நடிகைகள்

தங்களின் நடிப்பு திறமையால், அவர்களுக்கான மார்கெட்டை பிடித்து வருகின்றனர்.

இவர்களின் வரிசையில் ஆண்ட்ரியாவும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்து வருகிறார்.

அண்மையில் வெளியான ‘தரமணி’ படத்தில் இவருடைய நடிப்பு மிகவும் பேசப்பட்டது. பாராட்டுக்களும் குவிந்தன.

இந்நிலையில், ஒரு மகளிர் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண்ட்ரியா பேசும் போது..

“சினிமாவில் பெண்களுக்கு இன்னும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. சினிமா துறை ஆணாதிக்கம் நிறைந்து இருக்கிறது.

ஒரு நடிகையின் திறமை அவர் எந்த நடிகருடன் நடிக்கிறார் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. ரஜினி போன்ற நடிகருடன் நடித்தால்தான் அவர் பெரிய நடிகையா?

தரமணி’ படத்துக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ஆனால் படவாய்ப்பு கிடைக்கவில்லை.

கவர்ச்சியாக ஆடை அணிந்து நடிப்பதால் நான் மகிழ்ச்சி அடைய வில்லை.

திரைப்படத்தில் நிர்வாணமாகக் கூட நான் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால், நான் நடிக்கும் படத்தில் அந்த காட்சி மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும்”. என்று பேசினார்.

டெல்லியை டார்கெட் செய்யும் சூர்யா; ஜூலையில் ஆரம்பம்.!

டெல்லியை டார்கெட் செய்யும் சூர்யா; ஜூலையில் ஆரம்பம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya targeting Delhi for his 37th movie Shooting Starts in Julyசெல்வராகவன் படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா. இது சூர்யாவின் 36வது படமாகும்.

இதனையடுத்து சூர்யாவின் 37-வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கிறார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதவுள்ளார்.

கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு செய்ய, கலை பணிகளை கிரண் மேற்கொள்கிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் சூட்டிங்கை பெரும்பாலும் டெல்லியில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

இதன் சூட்டிங் வருகிற ஜூலை மாத இறுதியில் துவங்கவுள்ளது.

Suriya targeting Delhi for his 37th movie Shooting Starts in July

அபரந்தியை ஆர்யா திருமணம் செய்யனும்; ஷாம்-பரத்-கலையரசன் சிபாரிசு

அபரந்தியை ஆர்யா திருமணம் செய்யனும்; ஷாம்-பரத்-கலையரசன் சிபாரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Abaranthiதமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள டிவி கலர்ஸ் டிவி.

இதில் ஒளிப்பரப்பாகும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் வெற்றி பெறும் ஒரு பெண்ணை நடிகர் ஆர்யா திருமணம் செய்யவுள்ளார்.

இந்த நிகழ்ச்சி கடந்த சில நாட்களாகவே டிவியில் 16 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

ஆர்யாவின் ஜோடி யார்யா? என ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், ஆர்யாவின் நண்பர்களும், நடிகர்களுமான ஷாம், பரத், கலையரசன் மூவரும் போட்டியாளர்களில் ஒருவரான அபரந்தி என்ற பெண்தான் ஆர்யாவுக்கு பொருத்தமானவராக இருப்பார் எனத் தெரிவித்துள்ளனர்.

அந்த அதிர்ஷ்டசாலி பெண் யார்? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Abaranthi will be perfect match for Actor Arya

More Articles
Follows