செப்டம்பர் 21ல் விக்ரமின் சாமி2 மோதும் நான்கு படங்கள்

On 21st October Saamy Square will clash with four moviesவிக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாமி ஸ்கொயர்’.

இவர்களுடன் பிரபு, பாபி சிம்ஹா, ஜான் விஜய், இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, டெல்லி கணேஷ், உமா ரியாஸ், சுதா சந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஹரி இயக்கியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

தமீன்ஸ் ஃபிலிம்ஸ் சார்பாக ஷிபு தமீன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வைரலாகி உள்ள நிலையில் இதன் ரிலீஸை தேதியை அறிவித்துள்ளனர்.

வருகிற செப்டம்பர் 21-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதே நாளில்தான் ‘களவாணி மாப்பிள்ளை’, ‘ராஜா ரங்குஸ்கி’, ‘வண்டி’, ‘ஏகாந்தம்’ ஆகிய படங்களும் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே இத்தனை படங்களுக்கும் தியேட்டர்களில் கிடைப்பதில் பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

On 21st October Saamy Square will clash with four movies

Overall Rating : Not available

Latest Post