யமுனா, மெட்ரோ படங்களில் நடித்த நடிகர் சத்யாவின் திருமணம் இன்று நடைபெற்றது

யமுனா, மெட்ரோ படங்களில் நடித்த நடிகர் சத்யாவின் திருமணம் இன்று நடைபெற்றது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor sathya weddingயமுனா படத்தில் கதாநாயகனாகவும் மெட்ரோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்த நடிகர் சத்யாவின் திருமணம் இன்று (24-08-2020, திங்கள் கிழமை) காலை கரூர் To ஈரோடு மார்க்கத்தில் புன்னம் கிராமத்தில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருகோவிலில் இனிதே நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிய முறையில் நடைபெற்ற இத்திருமணத்தில் சரியாக (காலை 6.45க்கு AM) மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார். விரைவில் வரவேற்புரை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளனர்..மேலும் சத்யா நடித்து முடித்த ஒரு திரைப்படமும் கொரோனா நாட்கள் முடிந்த பிறகு வெளிவர உள்ளது.

மணமகன்

S.Jaiganesh B.E (A) Sathya

Son of

Mr. S. Siva
Mrs. S. Shanthi

மணமகள்

A. Mahalakshmi B.E

Daughter of

Mr. S.Amirthalingam
Mrs. A.Saraswathi

‘வேட்டை நாய்’ படத்தில் அனிருத் பாடியுள்ள தர லோக்கல் பாடல்!

‘வேட்டை நாய்’ படத்தில் அனிருத் பாடியுள்ள தர லோக்கல் பாடல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anirudhஏற்கெனவே தனுஷுடன் இணைந்து பாடலை உருவாக்கிய இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் மீண்டும் தனுஷுடன் இணைவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஆர்.கே .சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘வேட்டை நாய்’. இப்படத்தை ஜெய்சங்கர் இயக்கி இருக்கிறார் . ராம்கி, சுபிக்ஷா நடித்துள்ளனர். கணேஷ் சந்திரசேகரன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இரண்டு மெலடி பாடல்களும் ஒரு குத்துப் பாடலும் உள்ளன. தர லோக்கலாக உள்ள அதிரடி குத்துப் பாடலை அனிருத் பாடியிருக்கிறார்.ஆலுமா டோலுமா போல் இந்த பாடல் பட்டைய கிளப்பும் என்று கூறுகிறார் இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன்.

‘எழுமின்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் , அந்தப் படத்திற்காகத் தனுஷையும் அனிருத்தையும் பாடவைத்தார். அந்தப் பாடல்கள் மில்லியன் கணக்கில் ஹிட்சை அள்ளின. இவர் இரண்டாவது படமாக இசையமைக்கும் ‘வேட்டைநாய்’ படத்தில் இவரது இசையில் அனிருத் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.
அதுபற்றிய

அனுபவங்களை கூறும்போது,

“நான் முதலில் ‘ எழுமின்’ படத்திற்கு இசையமைத்த போது அதில் தனுஷ் பாடினால் நன்றாக இருக்கும் என்று அவரை அணுகிக் கேட்டேன் .நான் அறிமுக இசையமைப்பாளன் ,புதியவன் என்பதையெல்லாம் பார்க்காமல் அந்தப் படத்தில் பாடிக் கொடுத்தார் .அந்த பாடல் பெரிய ஹிட்டானது .அதே போல் அனிருத்தையும் கேட்டேன். அவரும் பாடிக் கொடுத்தார். இரண்டு பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றன. தனுஷும் அனிருத்தும் என் சகோதரர்கள் போன்றவர்கள். எனவே அவர்களுடன் உரிமையாகக் கேட்டேன் .அவர்கள் பெரிய ஆள் ,சின்ன ஆள் என்று பார்ப்பதில்லை. மனிதர்களை மட்டுமே பார்ப்பவர்கள். எனவேதான் ஒரு புதியவனான எனக்குப் பாடிக்கொடுத்தார்கள். அந்தப் படத்தில் யோகி பி.யும் எனக்காகப் பாடியிருந்தார்.

அனிருத் ‘வேட்டைநாய் ‘படத்தில் பாடியிருக்கும் & அந்தப் பாடல் தர லோக்கலாக இருக்கும் .இந்தப் பாடலை ராஜகுரு சாமி எழுதியிருக்கிறார். இப்பாடல்
அடித்து தூள் கிளப்பும் .விரைவில் வெளிவர இருக்கிறது. பாடிக் கொடுத்தவுடன் அந்த பாடலை எப்படி வெற்றி பெற வைப்பது எப்படி என்பதிலும் அக்கறையோடு எனக்கு உதவுகிறார் அனிருத். அவருக்கு ‘ஆலுமா டோலுமா’ போல இந்தப்பாடல் பட்டைய கிளப்பும் ஒரு பாடலாக இருக்கும்.

முதல் படத்தில் தனுஷுடன் இணைந்த நான், மீண்டும் அவரை வைத்துப் பாட வைப்பேன். மீண்டும் அவருடன் இணைவேன் என்று உறுதியாக நம்புகிறேன்.
விரைவில் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் கைக்கெட்டும் தூரத்தில் தான் அந்த வாய்ப்பு இருக்கிறது என்று நம்புகிறேன்.எப்படி சொல்கிறேன் என்றால் தனுஷின் அன்பைப் பற்றி எனக்குத் தெரியும்.

‘வேட்டைநாய்’ படத்தில் மூன்று பாடல்கள். இரண்டும் மெலடியாக இருக்கும் .அனிருத் பாடிய பாடல் அதிரடியாக இருக்கும்” என்று கூறுகிற கணேஷ் சந்திரசேகரன் கலை, ஆரி கதாநாயகனாக நடிக்கும் இரண்டு படங்களில் இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

வேட்டை நாய் – தயாரிப்பு சுரபி பிலிம்ஸ் , தாய் மூவிஸ்.

Music: Ganesh Chandrasekaran
Movie: Vettai Naai
Lyrics: Rajagurusamy
Director: Jaishankar
Cast: RK Suresh, Ramki, Subhiksha

தமிழ் மொழியில் நடிக்கவே விரும்பும் தெலுங்கு நடிகை சந்திரிகா

தமிழ் மொழியில் நடிக்கவே விரும்பும் தெலுங்கு நடிகை சந்திரிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chandrika‘‘நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை. படிச்சது ஃபேஷன் டிசைனிங். சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வம் சிறுவயதிலேயே இருந்தது.

நான் வசிக்கும் பகுதியில் ஏராளமான சினிமாக்காரர்கள் இருந்தார்கள். அவர்களுடன் சில சினிமா நிகழ்ச்சிகளுக்கு செல்வேன். அப்படித்தான் எனக்குள் சினிமா ஆசை வந்தது.

நான் வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் கொஞ்சம் செல்லம் அதிகம். என்னுடைய அம்மா டீன் ஏஜ்ஜாக இருந்தபோது அவருக்கு சினிமா வாய்ப்பு வந்ததாம்.

ஆனால் அப்போது அவருக்கு அரசு வேலை கிடைத்த காரணத்தால் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையாம். இப்போது நான் சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்ததும் வீட்டிலிருந்துதான் எனக்கு முதல் சப்போர்ட் கிடைத்தது.

சினிமாவில் இப்போது போட்டி அதிகம் என்றாலும் இந்தச் சூழ்நிலையில் நடித்து பெயர் வாங்கும்போதுதான் ஜெயிக்க வேண்டும் என்ற வெறித்தனம் உண்டாகும்.

விடாமுயற்சி இருந்தால் சினிமாவில் ஜெயிக்க முடியும் என்று நம்புகிறேன். சினிமாவில் அதிர்ஷ்டம் தாண்டி திறமை, உழைப்பு முக்கியம். ‘இன்புட்’ என்ன கொடுக்கிறோமோ அதுதான் ‘அவுட்புட்’டாக வரும்.

தற்போது சினிமாவில் வுமன் சென்ட்ரிக் கதைகள் வர ஆரம்பித்துள்ளது. அதுபோன்ற கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

சினிமாவில் எனக்கு ஜோதிகா, நயன்தாரா மேடம் இருவரையும் பிடிக்கும். இருவரும் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்தக் கேரக்டராக மாறி என்னைப் போன்ற வளரும் நடிகைகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறார்கள்.

நடிகர்களில் விஜய்சேதுபதியைப் பிடிக்கும்’’ என்று சொல்லும் சந்திரிகா இந்த கொரோனா காலத்திலும் ஜூம் ஆப் மூலம் கதை கேட்டு இரண்டு படங்களை ஓ.கே.செய்துள்ளாராம்.

வரப்போகும் பஞ்சம்..; அரசே விழித்தெழு அல்லேல் விலகிவிடு… – கமல்ஹாசன்

வரப்போகும் பஞ்சம்..; அரசே விழித்தெழு அல்லேல் விலகிவிடு… – கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalகொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதங்களாக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

ஒரு சிலர் கடன் சுமையால் தற்கொலையும் செய்துக் கொண்டுள்ளனர்.

ஆனாலும் கொரோனா ஊரடங்கு இன்னும் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் இதனை கண்டிக்கும் வகையில் கமல் தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்..

அவரின் பதிவில்…

சமீபத்திய ஆய்வுகள் வேலையிழப்பும்,வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டதென்கிறது.

விலை உயர்வு,தொழில் பாதிப்பு, குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு இவையனைத்தும் வரப்போகும் பஞ்சத்திற்கான கட்டியம் கூறலே.

தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் இதை உணரத்துவங்கிவிட்டது.
அரசே விழித்தெழு,அல்லேல் விலகிவிடு.

டெல்லி டூ லண்டன் பஸ்ஸில் செல்ல ஆசையா? 18 நாடுகளை பார்க்கலாம்.; ரெடியா இருங்க பாஸ்.!

டெல்லி டூ லண்டன் பஸ்ஸில் செல்ல ஆசையா? 18 நாடுகளை பார்க்கலாம்.; ரெடியா இருங்க பாஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

delhi to london busநடைப்பயணத்தில் தன் பயணத்தை தொடங்கிய மனிதன் மெல்ல மெல்ல தன் வசதிக்கு ஏற்ப போக்குவரத்து சாதனங்களை கண்டுபிடித்தான்.

சைக்கிள், ரிக்‌ஷா, பஸ், ரயில், பைக், கார், கப்பல், விமானம் என பறக்கத் தொடங்கினான்.

எத்தனை கிலோ மீட்டர் பயணம் என்றாலும் சில மணித்துளிகளில் விமானத்தில் பறந்து சென்று அந்த இடத்தை அடைந்தான்.

நீண்ட நாட்கள் பயணம் என்றால் விரைவான போக்குவரத்தையே தேர்ந்தெடுத்தான்.

இந்த நிலையில் வித்தியாசமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது
அட்வெஞ்சர்ஸ் ஓவர் லேண்ட் என்ற ட்ராவல் ஏஜெண்ட் நிறுவனம்.

டெல்லியில் இருந்து இலண்டன் வரை செல்லும் பேருந்தை இயக்கப்போவதாக இந்த நிறுவனம் இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளது.

இதனை ஹாப் அன் ஹாப் ஆப் பேருந்து சேவை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

2021, மே மாதத்தில் இந்த பயணம் தொடங்கவுள்ளதாம்.

டெல்லி டூ லண்டன் வரையான 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கிட்டத்தட்ட 2 1/2 மாதங்களில் அடையும் திட்டத்தை அறிவித்துள்ளனர்.

இந்த பஸ் பயணத்தில் 18 நாடுகளைக் கடந்து செல்லவேண்டும்.

மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, லேட்வியா, லித்வேனியா, போலந்து, செக் குடியரசு, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைக் கடந்து செல்லும் என தெரிவித்துள்ளனர்.

அதாவது இந்தியாவில் தொடங்கி யுகேவில் பயணம் முடியும் என தெரிவித்துள்ளது.

சுதந்திர இந்தியாவுக்கு முன்னர் அதாவது பிரிட்டிஷ் காலத்தில் லண்டன் டூ கொல்கத்தா வரை ஒரு பஸ் சென்றவந்ததாக கூறப்படுகிறது.

ஆல்பர்ட் என்ற அந்த டபுள்டெக்கர் பேருந்து 15 முறை இலண்டனில் இருந்து இந்தியாவுக்கு வந்துசென்றதாகவும் அதே பாணியில் இந்த பயணம் இருக்கும் எனவும் அறிவித்துள்ளனர்.

பெரிய பட பட்ஜெட்டில் 40%… சின்ன பட பட்ஜெட்டில் 10% தொகையில் படத்தை வாங்கும் OTT தளங்கள்..; ரகசியம் உடைக்கும் தயாரிப்பாளர் JSK

பெரிய பட பட்ஜெட்டில் 40%… சின்ன பட பட்ஜெட்டில் 10% தொகையில் படத்தை வாங்கும் OTT தளங்கள்..; ரகசியம் உடைக்கும் தயாரிப்பாளர் JSK

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer jskஅனைவருக்கும், வணக்கம்!
சினிமா படப்பிடிப்புக்கு அனுமதியளித்த மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

இன்றைய திரைத்துறையின் நிலை பற்றிய எனது பார்வை!

OTT
சமீப காலங்களாக பரவலாக பரபரப்பாக பேசப்படும் தளம். இந்த தளம் சாமான்ய தயாரிப்பாளர்களுக்கு ஆனதல்ல. பெரிய பட்ஜெட் படங்கள், மிகப் பெரிய நடிகர்கள், இப்படி குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படங்களுக்கும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தயாரிப்பாளர்களுக்கும் மட்டுமே சாத்தியமாகக் கூடிய வியாபாரமாக கூடிய தளமாக கூறப்படுகிறது.

அதையும் மீறி ஒரு சில படங்கள் திரையிடப்படுகின்றன, அதன் உண்மை நிலை… பங்கு சதவீத அடிப்படையில் அந்த படங்கள் திரையிடப்படுகிறது.

அப்படி திரையிடப்படும் படங்களுக்கு எந்தவித விளம்பரமும், வருவாயை ஈட்டித் தரக்கூடிய வியாபார விளம்பரங்களையோ, யுத்திகளையோ அவர்கள் கையாள்வதில்லை.

காரணம், இலவசமாக கிடைக்கக்கூடிய ஒரு பங்கு சதவீத படங்கள். அதையும் மீறி சிபாரிசுகளுக்கு பின், ஒரு சில சிறிய திரைப்படங்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளன.

அதன் உண்மை நிலைமை, அந்த படத்தின் மொத்த உரிமையும் எக்ஸ்க்ளுசிவ் என்ற பெயரில் வாங்கப்படுகிறது.

வருத்தத்திற்குரிய செய்தி… அந்த படங்களின் மொத்த உரிமையும், மொத்த பட்ஜெட்டில் 40% மட்டுமே விலை கொடுத்து வாங்கப்படுவதாக கூறப்படுகிறது. காரணம், தயாரிப்பாளர் தான் போட்ட முதலை எப்படி ஈட்டெடுப்பது என்று தெரியாத ஒரு சூழலில், வந்தவரை போதும் ஓரளவு காப்பாற்றப்படுவோம் என்று நினைத்து, வேறு நிலை இல்லாத சூழ்நிலையில் அந்த படங்கள் கொடுக்கப்படுகிறது.

சாட்டிலைட் உரிமை
இதுவும் விதி விலக்கல்ல… தனியார் சேனல்கள், பெரிய நடிகர்களின் படங்கள்… குறிப்பிட்டு சொல்லக்கூடிய நடிகர்களின் படங்கள்… பெரிய நிறுவனங்களின் படங்கள்… இவை மட்டுமே வியாபாரமாகிறது என்று சொல்லப்படுகிறது.

அதையும் மீறி பல சிபாரிசுகளுக்கு பிறகு, ஏதேனும் ஒரு சிறு படம் வாங்கப்பட்டால் அதன் மொத்த உரிமையும் படத்தின் மொத்த பட்ஜெட்டில் 10% மட்டுமே கொடுக்கப்பட்டு, எக்ஸ்க்ளுசிவ் ரைட்ஸாக திரையரங்கு வெளியீட்டை தவிர அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொள்கின்ற அவலநிலைதான் உள்ளது.

திரையரங்குகள்
கடந்த காலங்களிலும் சரி, இனி வரும் காலங்களிலும் சரி… கடந்த காலத்தைவிட வரும் காலம் தயாரிப்பாளர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பது பெரும்பான்மையானவர்களின் கருத்து. அவர்களுடைய படத்தை வெளியிடும்போது காட்சிகள் பெறுவதே மிகவும் சிரமமான ஒரு சூழ்நிலையைத்தான் சந்திக்கப் போகின்ற ஒரு சூழலாக அமையும் எனத் தெரிகிறது.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டுதான், நான் எனது சொந்த OTT தளத்தை உருவாக்கி உள்ளேன். அந்த தளத்தில் வரும் 28ம் தேதி ‘அண்டாவ காணோம்’ திரைப்படத்தை நேரடியாக உலகெங்கும் திரையிடுகிறேன்.

எனக்கு நன்றாகவே தெரியும் கிட்டதட்ட வட்டி இல்லாமல் நான்கு கோடி ரூபாய் அசல் உள்ள இந்த படத்தை இப்படி ஒரு பெரிய ரிஸ்க் எடுத்துக் கொண்டு, முயற்சி செய்வோம் என்ற நம்பிக்கையிலும் மீட்டு எடுப்போம் என்று நம்பிக்கையிலும் JSK Prime Media என்ற OTT தளத்தில் திரையிடுகிறேன்.

நண்பர்கள் அனைவரும் தங்கள் ஆதரவை வழங்குமாறும், வரும் காலத்தில் இந்த தளத்தை ஒரு வெற்றிகரமான தளமாக மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையில் இவ்வளவு முதல் கொண்ட ஒரு திரைப்படத்தை திரையிடுகிறேன்.

இந்த தளத்தின் வெற்றி, வரும் நாட்களில் அனைவருக்கும் பயனுள்ள ஒரு சூழலை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் JSK Prime Media என்ற OTT தளத்தை உருவாக்கி உள்ளேன். என்னை அடையாளம் கண்டு அங்கீரித்து பெயர் வாங்கி கொடுத்த திரையுலகிற்காக இன்று நான் விதைக்கும் விதை வருங்காலத்தில் அனைவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும் என்பது எனது திடமான நம்பிக்கை. தங்களது முழு ஆதரவை வழங்கி வெற்றிபெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்கள் அனைவரும் JSK Prime Media App-யை டவுன்லோடு செய்து ‘அண்டாவ காணோம்’ திரைப்படத்தை பார்த்து ஆதரவளித்து வலுசேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

‘அண்டாவ காணோம்’ உங்கள் அனைவரையும் நிச்சயமாக சிரித்து மகிழ வைக்கும். தரமான படமாக இருக்கும்.

OTT தளத்தில் கோலோச்சி இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒரு சாமானியனாக பயணிக்க முடிவுசெய்துள்ளேன். அதில் வெற்றியும் பெறுவேன் என்று மனதார நம்புகிறேன்.

உங்கள் ஆதரவை எதிர்நோக்கி…
அன்புடன்
JSK சதீஷ்குமார்

JSK Prime Media App – ன் சிறப்பம்சங்கள்:

IOS, Android, Fire Stick, Smart Tv, Web Browser போன்ற‌வ‌ற்றில் எளிமையான‌ முறையில் பதிவிறக்கம் செய்யும் வ‌கையில் அறிமுக‌மாகிற‌து.

JSK Prime Media App – யை பதிவிறக்கம் (Download) செய்து தங்களது விபரங்களை பதிவு (Sign Up) செய்தப் பின் Sign In செய்து உங்களுக்கு பிடித்தமான படங்களை கண்டு மகிழுங்கள்.

சப்ஸ்கைரப் செய்த உடன் சந்தாதார‌ர் க‌ட்ட‌ண‌மின்றி எப்போதும் கண்டுகளிக்கும் வ‌கையில் 50 திரைப்ப‌ட‌ங்களை இல‌வ‌ச‌மாக‌ காணலாம்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த 50 படங்களுக்கு பதிலாக வேறு 50 படங்கள் சுழற்சி முறையில் புதிதாக மாற்றப்படும்.

புத்த‌ம் புதிய‌ திரைப்ப‌ட‌ங்கள் எக்ஸ்க்ளுசிவ் ஆக வெளியிடப்படும். புதியதாக வெளியிடும் திரைப்படங்களுக்கு அந்தந்த திரைப்படங்களின் தன்மைக்கேற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.

அந்த வகையில் முத‌லாவ‌தாகJSK FILM CORPORATION தயாரிப்பில் அறிமுக‌ இய‌க்குனர் சி.வேல்ம‌தி இய‌க்க‌த்தில் ஷ்ரேயாரெட்டி க‌தாநாய‌கியாக‌ ந‌டித்துள்ள ‘அண்டாவ காணோம்’ திரைப்ப‌ட‌ம் வரும் ஆகஸ்ட் 28 தேதி வெளியிடப்படுகிறது. ‘அண்டாவ காணோம்’ திரைப்படத்தை ரூ.100 மட்டுமே செலுத்தி எக்ஸ்க்ளுசிவ் – ஆக குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்.

நிச்சயமாக இந்த படம் உங்களை மகிழ்விக்கும்.
இந்த படத்தை தொடர்ந்து வரும் நாட்களில் புத்தம் புதிய எக்ஸ்க்ளுசிவ் திரைப்படங்கள் அடுத்தடுத்து தொடர்ந்து வெளியிடப்படும்.

More Articles
Follows