களவாணி 2 படத்திற்கு கோர்ட் தடை; சற்குணம் உருக்கமான வீடியோ

களவாணி 2 படத்திற்கு கோர்ட் தடை; சற்குணம் உருக்கமான வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectவிமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கி வெளியான படம் களவாணி.

நசீர் தயாரித்திருந்த இப்படம் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.

தற்போது களவாணி 2ம் பாகத்தை இயக்கி, தயாரித்து வருகிறார் சற்குணம்.

இதிலும் முதல் பாகத்தை போல விமல், ஓவியா ஜோடியாக நடிக்கிறார்கள். படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், வருகிற மே 4ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த தடை குறித்த விவரம் வருமாறு…

களவாணி 2 படத்தை தமிழக திரையரங்க உரிமையை சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் பெற்றது.

இந்த உரிமையை மெரினா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்க 3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டது.

மெரீனா பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்பந்த விதிகளை மீறி படத்தை விற்றிருப்பதாகவும் இதனால் ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கடுமையான நஷ்டம் ஏற்படும் என்றும், எனவே படத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வெளியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஒ.குமரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூன் 10 ம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டது.

இது தொடர்பாக வீடியோ பதிவொன்றை வெளியிட்டிருக்கும் சற்குணம் வெளியிட்டுள்ளார். அதில்…

“கஷ்டப்பட்டு, கடன் வாங்கி படம் எடுத்தால் அதை தடுப்பதற்கு நிறைய சக்திகள் இருக்கிறது. வழக்கு தொடர்ந்துள்ள குமரன் யார் என்றே தெரியாது.

இருந்தபோதிலும் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். எனக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” என் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Exclusive ரஜினியுடன் யோகிபாபு; தர்பாரின் தாறுமாறான ஸ்டில்ஸ் வைரல்

Exclusive ரஜினியுடன் யோகிபாபு; தர்பாரின் தாறுமாறான ஸ்டில்ஸ் வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 Yogi Babu with Rajinikanth Darbar shooting spot stills leakedகார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

நாயகியாக நயன்தாரா நடிக்க, யோகிபாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோரும் ரஜினியுடன் நடிக்கின்றனர்.

பாலிவுட் வில்லன் பிரதீக் பாபர் என்பவர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இதன் சூட்டிங் பலத்த பாதுகாப்புடன் மும்பையில் நடைபெற்று வருகிறது.

இருந்தபோதிலும் ரஜினி மற்றும் யோகிபாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டவர்கள் நடிக்கும் காட்சிகள் மற்றும் படங்கள் லீக்காகி தற்போது இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

Yogi Babu with Rajinikanth Darbar shooting spot stills leaked

Breaking சிவகார்த்திகேயன்-ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம்; என்னப்பா நடக்குது..?

Breaking சிவகார்த்திகேயன்-ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம்; என்னப்பா நடக்குது..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Election Officer clarifies Sivakarthikeyan and Srikanth Vote issueகடந்த வாரம் ஏப்ரல் 18 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றது.

தமிழகத்தில் 100% ஓட்டுக்கள் பதிவாகவில்லை என்றாலும் பலரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

சிலருக்கு ஆர்வம் இருந்தும் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இல்லா காரணத்தால் அவர்களை ஓட்டுப் போட அனுமதிக்கவில்லை.

இதனிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லாததால், அவரை தேர்தல் அதிகாரிகள் ஓட்டுப் போட அனுமதிக்கவில்லை.

இது தேர்தல் நாளன்று பரபரப்பாக பேசப்பட்டது. பிறகு என்ன ஆனதோ? சிவகார்த்திகேயன் வாக்களித்தார். அந்த போட்டோவை அவர் பதிவிட்டும் இருந்தார்.

ஆனால் தற்போது அவரது பெயர் வாக்காளர் பட்டியல் இல்லை என்ற போதிலும் அவரை ஓட்டு போட தேர்தல் அதிகாரிகள் அனுமதித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறியதாவது…

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் ஓட்டுப் போட்டிருப்பது உண்மை தான். அவரை ஓட்டு போட அனுமதித்த தேர்தல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்துள்ளார்.

இவரைப் போல் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு இருப்பதாக ஸ்ரீகாந்த் செய்தியும் பரபரப்பானது.

ஆனால் அவரும் வாக்களித்தார். இதுகுறித்து தேர்தல் அதிகாரி இன்று கூறும்போது நடிகர் ஸ்ரீகாந்தும் வாக்களிக்கவில்லை. அவர் கையில் மை மட்டுமே வைத்துள்ளார்.” என தெரிவித்துள்ளார்.

Election Officer clarifies Sivakarthikeyan and Srikanth Vote issue

‘ஆடுகளம்’ வி.ஐ.எஸ். ஜெயபாலனுடன் இணையும் கஸ்தூரி

‘ஆடுகளம்’ வி.ஐ.எஸ். ஜெயபாலனுடன் இணையும் கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kasthuri team up with VIS Jayabalan in Nalina Gandhiஇலங்கையை சேர்ந்தவர் எழுத்தாளர் வி.ஐ.எஸ்.ஜெயபாலன்.

இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் ஆடுகளம் படம் இவருக்கு இன்றுவரை மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது எனலாம்.

தற்போது முதன் முறையாக நளினகாந்தி என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இவருடன் சர்ச்சை நாயகி கஸ்தூரி, புவிஷா, ஷர்மிளா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

பிரபு ஒளிப்பதிவு செய்ய ஜூட் ஆரோகணம் இசையமைத்துள்ளார்.

அமெரிக்கா வாழ் தமிழரான பொன் சுகீர் என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படம் பற்றி அவர் கூறியதாவது:

கதையின் படி ஜெயபாலன் ஒரு பிரபலமான டாக்டர்.

அவரின் வயது காரணமாக ரெஸ்ட் எடுக்க வேண்டிய சூழ்நிலை. அவரை கவனிக்க நர்ஸ் ஒருவர் வருகிறார்.

அதன்பின்னர் இவர்கள் இருவருக்குமான உறவின் கதையோட்டம்தான் இப்படத்தின் கரு.

மேலும் நம் சமூகத்தில் நிலவும் சல பிரச்சினைகளை இப்படம் பேசும்.

இது ஹாலிவுட் பாணியிலான சைக்காலஜிக்கல் டிராமாவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Kasthuri team up with VIS Jayabalan in Nalina Gandhi

‘பேட்ட’ இயக்குனரிடம் மருமகனுக்கு சான்ஸ் கேட்டாரா ரஜினி…?

‘பேட்ட’ இயக்குனரிடம் மருமகனுக்கு சான்ஸ் கேட்டாரா ரஜினி…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis recommendation for his son in law to act in moviesதன் மகள் திருமண வாழ்க்கை சரியில்லை என்றால் பெரும்பாலான பெற்றோர்கள் சமூகத்திற்கு பயந்து அந்த மாப்பிள்ளையுடன் தான் நீ வாழ வேண்டும் என மகளை நிர்பந்திக்கின்றனர்.

ஆனால் இதில் ரஜினிகாந்த் சற்று வித்தியாசப்பட்டு விவாகரத்து பெற்ற தன் 2வது மகள் சௌந்தர்யாவின் 2வது திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி வைத்தார்.

இதனால் ரஜினியின் சிந்தனையை பலரும் பாராட்டினர்.

சௌந்தர்யாவின் 2வது கணவர் விசாகன் வணங்காமுடி என்பதும் அவர் ஒரு தொழிலதிபர் என்பது பலரும் அறிந்ததே.

இவருக்கு நடிப்பின் மீதும் ஆர்வம் உள்ளது.

எனவே தான் குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடித்த ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில் பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விசாகன் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தனது மாப்பிள்ளைக்கு நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தை பார்த்து அவரை ரஜினி சிபாரிசு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒருவேளை இது உண்மையானால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Rajinis recommendation for his son in law to act in movies

Rajinis recommendation for his son in law to act in movies

‘சிங்கம்’ சூர்யாவை இயக்கும் ‘சிறுத்தை’ சிவா; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘சிங்கம்’ சூர்யாவை இயக்கும் ‘சிறுத்தை’ சிவா; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya 39 will be directed by Viswasam Siva Produced by Studio Greenசூர்யா நடிப்பில் என்ஜிகே மற்றும் காப்பான் ஆகிய இரு படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.

இதில் என்ஜிகே படம் மே மாத இறுதியிலும் காப்பான் படம் ஆகஸ்ட் மாதத்திலும் வெளியாகிறது.

இப்படங்களை முடித்துவிட்ட சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கும் ‘சூரரைப்போற்று’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை முடித்துவிட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இது சூர்யாவின் 39வது படமாக உருவாகவுள்ளது.

ஸ்டூடியோ க்ரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Suriya 39 will be directed by Viswasam Siva Produced by Studio Green

More Articles
Follows