தர்பாரை திட்டிய ரஜினி ரசிகர்களை அலற விடும் லைகா

தர்பாரை திட்டிய ரஜினி ரசிகர்களை அலற விடும் லைகா

Lyca Production doing promotion in vera level for Darbarசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் டைரக்டர் முருகதாஸ் முதன்முறையாக இணைந்துள்ள படம் தர்பார்.

லைகா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம் பெற்ற சும்மா கிழி என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது.

இந்த படம் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது.

இதனிடையில் இந்த படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் போதுமான விளம்பரங்களை செய்யவில்லை என ரஜினி ரசிகர்களை வசை பாடினர்.

ஆனால் நாள்கள் நெருங்க நெருங்க தர்பார் புரோமோசன்களால் இணையத்தை அதிர வைத்து வருகிறது லைகா.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போஸ்டர்களை வெளியிட்டு அதில் அதிரடியான வாசங்கள் பதிவிட்டு வருகின்றது. இது ரஜினி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

விமானங்களிலும் ரஜினியின் தர்பார் பட ஸ்டிக்கர்களை வரைந்து பறக்கவிட்டுள்ளனர்.

மேலும் படத்தின் இடம் பெற்றுள்ள வீடியோ காட்சிகளையும் 20 நொடிகளில் வெளியிட்டு வருகின்றது.

இதனால் லைகாவை திட்டிய ரஜினி ரசிகர்களே தற்போது மிரட்டு வருகின்றனர்.

Lyca Production doing promotion in vera level for Darbar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *