தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு இருந்தார் இயக்குனர் மகேந்திரன்.
தற்போது அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். உயிரிழந்த அவருக்கு வயது 79.
மகேந்திரனுக்கு ஜான் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் முழு விவரம் வருமாறு…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும், ஜானி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் மகேந்திரன்.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி நடித்த தங்கப்பதக்கம், ரிஷிமூலம் உள்பட பல படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார் இவர்.
1966 ஆம் ஆண்டு வெளியான ‘நாம் மூவர்’ படத்திற்கு வசனம் எழுதி தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய மகேந்திரன், தொடர்ந்து பல படங்களுக்கு கதை, வசனம் எழுதி வந்த நிலையில், 1978 ஆம் ஆண்டு வெளியான ‘முள்ளும் மலரும்’ படம் இயக்குநராக அறிமுகமானர்.
அதன் பின்னர் ’உதிரிப்பூக்கள்’, ‘ரிஷிமூலம்’, ‘ஜானி’, ‘நெஞ்சத்தை கிள்ளாதே’, ‘மெட்டி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கினார்.
இறுதியாக 1992 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு பஞ்சாயத்து’ படம் தான் அவர் இயக்கிய கடைசி திரைப்படமாகும். அதன் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தவர், 2004 ஆம் ஆண்டு வெளியான ‘காமராஜ்’ படம் மூலம் நடிகராக சினிமாவில் பயணிக்க தொடங்கினார்.
அண்மையில் விஜய்யின் ‘தெறி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
அதன்பின்னர் உதயநிதியுடன் நிமிர், ரஜினிகாந்த்துடன் பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்நிலையில், இன்று சற்று நேரத்திற்கு முன்பு மகேந்திரன் மரணமடைந்தார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக காலை 10 மணிக்கு வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Legendary Director Actor Mahendran passed away