தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ‘விடுதலை’ திரைப்படம் கடந்த மாதம் மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தை பார்த்த பல்வேறு தரப்பினரும் பாராட்டி இருந்தனர். நடிகர் ரஜினிகாந்த் பட குழுவினரை அழைத்து நேரில் பாராட்டு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ‘விடுதலை’ படத்தை பார்த்து தன் கருத்தை பேசியுள்ளார் சீமான்.
அவர் பேசியதாவது..
“தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த படைப்பாளிகள் உள்ளனர்.
பாலசந்தர், மகேந்திரன், பாரதிராஜா எனப் பல படைப்பாளிகள் வந்துள்ளனர்.
அந்த வரிசையில் வெற்றிமாறன், ராம் உள்ளிட்டோர் சிறந்த படங்களை தந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
‘விடுதலை’ போன்ற படத்தை எடுப்பதற்கு கடும் உழைப்பை கொட்ட வேண்டியிருக்கிறது.
அடர்ந்த காட்டுக்குள் பயணித்து மலையில் ஏறி பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளனர்.
வெற்றிமாறன் மனித வடிவில் இருக்கும் மிருகம் அந்த வெறியில் தான் அவர் படம் எடுக்கிறார். அது பாராட்டத்தக்கது” என பேசியுள்ளார் சீமான்.
seeman praises of vetrimaaran