தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓப்பன் கேட் பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த் வழங்கும், டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, இனியா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 25 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தூக்குதுரை’. இதன் ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மா பேசியதாவது..
“‘தூக்குதுரை’ என்னுடைய முதல் படம். தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்துக்கு நன்றி. படத்தில் எல்லோருமே கடினமாக உழைத்துள்ளனர். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.
எடிட்டர் ஸ்ரீதர்…
“படத்தில் இயக்குநர், தயாரிப்பாளர்களுடன் பணிபுரிந்து விடலாம். ஆனால், இந்த மேடை கொஞ்சம் கஷ்டம் தான். எங்களுக்கு மேடையில் பேச கன்டென்ட் இல்லாமல் இல்லை. எனக்கும் இயக்குநருக்கும் நடக்கும் அந்த மேஜிக் ட்ரிக்கை இங்கே சொல்லிவிட்டால் படத்தில் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும். அந்த மேஜிக் டிரைய்லரில் இருந்தது போல, நிச்சயம் படத்திலும் இருக்கும். திரையரங்குக்கு வந்து படத்தை பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்” என்றார்.
இசையமைப்பாளர் மனோஜ் கே.எஸ்., “தயாரிப்பாளர்கள், இயக்குநர், படத்தில் நடித்துள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. படம் முழுக்க முழுக்க கமர்ஷியலாக உருவாகி இருக்கிறது. நீங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழும் அளவுக்கு படத்தின் கதையும் விஷூவல்ஸூம் வந்திருக்கிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்…
“‘தூக்குதுரை’ படத்தின் மூலம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மகேஸ் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். மகேஸ் என்னுடய டான்ஸ் கிளாஸ் மாணவர்.
எதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அவருடைய இந்த முயற்சிக்கு வாழ்த்துகள். தயாரிப்பாளர்கள் அரவிந்த், அன்பு, வினோத் என மூன்று பேருமே எங்களுக்கு நிறைய ஆதரவு கொடுத்தார்கள். படத்திற்கான புரோமோ பாடல் சிரிக்க சிரிக்க நல்ல கான்செப்ட்டோடு வந்திருக்கிறது. படமும் நன்றாக வந்திருக்கிறது. சென்றாயன், பாலசரவணன் இந்தப் பாடலில் குழந்தைகளுக்குப் பிடித்தபடி ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்கள்.
படக்குழுவினருக்கு வாழ்த்துகள்! படத்தைத் திரையரங்குகளில் பாருங்கள்!”
நடிகர் கும்கி அஸ்வின், “இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. நடிப்பு, நடனம் என நீண்ட நாள் கழித்து இந்தப் படம் எனக்கு நிறைவாக அமைந்துள்ளது”.
நடிகர் சென்றாயன்…
“படத்தின் டைட்டில் ‘தூக்குதுரை’ போலவே படமும் ரொம்ப பாசிடிவாக, நன்றாக வந்துள்ளது. ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர்கள், படக்குழுவினர் என எல்லாருமே தங்களது சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தின் மூன்று தயாரிப்பாளர்களும் நல்ல மனிதர்கள். ’பணத்தைச் சேர்த்து வைத்து படம் தயாரிக்க வந்துள்ளோம். நல்ல படம் வேண்டும்’ என இயக்குநரிடம் கேட்டார்கள். அதுபோலவே வெற்றிப் படத்தை இயக்குநர் கொடுத்துள்ளார். படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம். படத்தைத் திரையரங்குகளில் பார்த்து வெற்றி கொடுங்கள்”.
Mahesh is my student says Sridhar