பஞ்சு அருணாசலம் உடலுக்கு ரஜினி சார்பில் லதா அஞ்சலி

பஞ்சு அருணாசலம் உடலுக்கு ரஜினி சார்பில் லதா அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

latha rajinis last respect to panchu arunachalamகதாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மூத்த கலைஞர் பஞ்சு அருணாசலம் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

சென்னையில் இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

எனவே திரையுலகை சேர்ந்த பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரது மறைவுக்கு ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியிருந்தார் ரஜினி.

ஆனால், அவரது உடலுக்கு ரஜினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை.

அவருக்கு பதிலாக லதா ரஜினிகாந்த் அஞ்சலி சென்றார்.

டாக்டர்களின் அறிவுரைப்படி வெளியில் செல்லாமல் ஓய்வில் இருந்து வருகிறார் ரஜினி.

ரஜினியின் திரையுலக வாழ்வில் மறுக்க முடியாத நபர்களில் பஞ்சு அருணாசலம் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘முடிஞ்சா இவன புடி’ படத்தை நாளை தியேட்டரில் புடிச்சிட்டலாம்

‘முடிஞ்சா இவன புடி’ படத்தை நாளை தியேட்டரில் புடிச்சிட்டலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mudinja Ivana Pudi confirmed released on aug 12th 2016லிங்கா பிரச்சினையால் ‘முடிஞ்சா இவன புடி’ படம் சிக்கலில் உள்ளது என்பதை நாம் முன்பே நம் தளத்தில் பார்த்தோம்.

தற்போது இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளதாவது…

“இப்படத்தின் தயாரிப்பாளர் ராம்பாபு ‘முடிஞ்சா இவன புடி’ படத்தில் ‘ரஜினி வழங்கும்’ என்றுதான் இப்படத்தின் பேனரில் டிசைன் செய்ய ஆசைப்பட்டார்.

ஆனால் ரஜினி சாரின் விருப்பம் இல்லாமல் அப்படிச் செய்யக்கூடாது என்று பின்னர் விட்டுவிட்டார்.

ராம்பாபுவின் நெருங்கிய நண்பர் ராக்லைன் வெங்கடேஷ் என்பதால்தான் அந்த நட்பின் காரணமாக பேனர்களில் அவரின் பெயரை போட்டார்.

ஆனால், அது வெங்கடேஷின் சொந்தப்படம் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது.

இதனால் ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் பணம்கேட்டு வந்தனர்.

நேற்று இரவே பணத்திற்கான செட்டில்மென்ட் முடிவடைந்து விட்டது.

எனவே, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 12-ம்தேதி (நாளை) ‘முடிஞ்சா இவன புடி’ ரிலீஸாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

தனுஷின் ஆசையை அஜித் எப்போது நிறைவேற்றுவார்.?

தனுஷின் ஆசையை அஜித் எப்போது நிறைவேற்றுவார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith dhanushநடிகராக பிஸியாக இருந்தாலும் தயாரிப்பாளராக தரமான படங்களை தயாரித்து வருகிறார் தனுஷ்.

இதனிடையில், பாடல்களை எழுதியும் பாடியும் வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல டிவி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் தனுஷ்.

அப்போது அஜித்துக்காக ஒரு பாடல் பாட வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்று தெரிவித்துள்ளார்.

பலபேருடைய ஆசையை நிறைவேற்றும் அஜித், தனுஷின் ஆசையை நிறைவேற்றாமல் இருப்பாரா என்ன? காத்திருந்து பார்ப்போம்.

விஜய்-சூர்யாவை தொடர்ந்து டாப் ஹீரோவுடன் கீர்த்தி

விஜய்-சூர்யாவை தொடர்ந்து டாப் ஹீரோவுடன் கீர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy sureshதமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், தென்னிந்திய சினிமாவிலும் கீர்த்தியின் மார்கெட் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

விஜய்யுடன் தற்போது நடித்து வரும் இவர், விரைவில் முத்தையா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் நான் ஈ புகழ் நானியுடன் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

நேனு லோக்கல் என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

நானி மற்றும் கீர்த்தி ஆகிய இருவருக்கும் தமிழகத்திலும் நல்ல மார்கெட் உள்ளதால் இப்படம் தமிழிலும் வெளியாகும் என தெரிய வந்துள்ளது.

கவர்னர் கிரண் பேடியை லதா ரஜினிகாந்த் சந்தித்தது ஏன்?

கவர்னர் கிரண் பேடியை லதா ரஜினிகாந்த் சந்தித்தது ஏன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

metபுதுவை மாநிலத்தின் கவர்னராக பொறுப்பேற்றது முதல் அம்மாநிலத்தின் வளர்ச்சிக்காக அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கிரண்பேடி.

புதுவை மாநிலத்தின் நல்லெண்ணத் தூதராக நடிகர் ரஜினிகாந்தை நியமிக்க வேண்டும் என கிரண்பேடி தனது விருப்பத்தை பலமுறை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், கிரண்பேடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை தெரிவிக்க இல்லையென்றாலும் நல்லெண்ண தூதராக ரஜினி பதவி ஏற்பது பற்றி அவர்கள் பேசியிருப்பார்கள் என கூறப்படுகிறது.

இச்சந்திப்பின் புகைப்படங்களை வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் கிரண்பேடி என்பது குறிப்பிடத்தக்கது.

ரயிலில் ‘வித் அவுட்’டில் பயணித்த நடிகர் சிம்பு

ரயிலில் ‘வித் அவுட்’டில் பயணித்த நடிகர் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu latest stills2016 ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்நாடு பிரிமீயர் லீக்’ கிரிக்கெட் போட்டி’ விரைவில் நடைபெறவுள்ளது.

இதில் ஒரு அணியான ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ அணியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரேந்தர் சேவாக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த அணியின் இயக்குனர் தயாநிதி அழகிரி, ‘மதுரை மைக்கல்’ சிலம்பரசன், அனிருத், அணியின் உரிமையாளர் ரபிஃக், இந்திய அணியின் முன்னாள் வீரர் எல். சிவராமகிருஷ்ணன், ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ அணியின் பாடலை இசையமைத்த இசையமைப்பாளர் தமன், அப்பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதில் சிம்பு பேசியதாவது…

“ரயில் பயணத்தில் ‘வித் அவுட்’ என்னும் ஒன்று இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்தியதே கிரிக்கெட் தான்.

மாநில அளவில் நான் பங்கேற்க இருக்கும் கிரிக்கெட் போட்டிக்காக, ரயிலில் பயணச்சீட்டு கூட இல்லாமல் நான் பயணித்து இருக்கிறேன்.

அந்த அளவிற்கு கிரிக்கெட் மீது எனக்கு எல்லையற்ற ஈர்ப்பு உண்டு.

கிரிக்கெட் ஜாம்பவான் விரேந்தர் சேவாக் சாருடன் நான் இந்த மேடையில் நிற்பேன் என்று சிறிதளவும் எதிர்பார்க்கவில்லை.

இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திய நண்பர் தயாநிதிக்கு நன்றி.

‘ஆட்டைக்கு ரெடியாக இருக்கும் ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ அணி என்றுமே “சிறப்பு” என்று பேசினார் சிம்பு.

More Articles
Follows