ஏவிஎம் ஹெரிடேஜ் : நினைவுப்பாதையில் ரஜினியை அழைத்து சென்ற நிறுவனம்

ஏவிஎம் ஹெரிடேஜ் : நினைவுப்பாதையில் ரஜினியை அழைத்து சென்ற நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான ‘களத்தூர் கண்ணம்மா’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் கமல்ஹாசன், திமுக எம்பி டி.ஆர் பாலு, தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மூத்த நடிகர் சிவகுமார் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த மியூசியம் ஆடியோ மற்றும் வீடியோ உபகரணங்களாலும் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம், எஜமான் உள்ளிட்ட பல பெருமை வாய்ந்த படங்களின் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் கார்கள் ஆகியவற்றையும் தன்னிடத்தில் கொண்டுள்ளது.

ரஜினி

1983ல் தமிழில் வெளியான பாயும் புலி என்கிற படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஓட்டிய சுசுகி RV 90, சிவப்பு நிற பழமை வாய்ந்த MG TB கார் மற்றும் 2007ல் வெளியான ‘சிவாஜி ; தி பாஸ்’ படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமான சிவாஜி சிலை என இவையெல்லாம் இந்த மியூசியத்தில் உள்ள கவனம் ஈர்க்கும் விஷயங்களாகும்.

நேற்று (ஜூன் 7 ) புதன்கிழமை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த மியூசியத்துக்கு வருகை தந்ததுடன், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் – எம்எஸ் குகன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோருடன் இணைந்து மியூசியத்தை சுற்றிப் பார்த்தார்..

ரஜினி

Rajinikanth gets nostalgic at the AVM Heritage Museum

டயலாக்கை மறந்துட்டோம்னா பாட்டிகளே கட் சொல்லிடுவாங்க.; பயத்தில் பசுபதி

டயலாக்கை மறந்துட்டோம்னா பாட்டிகளே கட் சொல்லிடுவாங்க.; பயத்தில் பசுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம் சங்கையா இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘தண்டட்டி’. பசுபதி ரோகினி விவேக் பிரசன்னா அம்மு அபிராமி நடித்துள்ள இந்த படம் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் பசுபதி பேசும்போது…

“சார்பட்டா பரம்பரை முடிந்ததும் இந்த கதை கேட்டேன். கேட்கும்போதே க்யூட் ஆக இருந்தது. எனக்கு எப்போதுமே எனது பாட்டியின் தண்டட்டி மீது ஒரு காதல் இருந்தது. சிறுவயதில் அவர்கள் அணிந்திருந்த தண்டட்டியை சுட்டு விடலாம் என பல நாட்கள் முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. அவர் மறைவுக்கு பின் தான் கிடைத்தது. இந்த ஒன்றரை மாத படப்பிடிப்பு நாட்களில் பாட்டிகளின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. இந்த ஜேனரில் இவ்வளவு எளிதாக சமீபத்தில் யாரும் கதை சொன்னது இல்லை.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறது. நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். ரோகிணியும் நானும் அதிக காட்சிகளில் நடித்திருந்தாலும் எங்கள் இருவருக்கும் பேசிக் கொள்ளும்படியான வசனம் எதுவும் இல்லை.

விவேக் பிரசன்னாவை படப்பிடிப்பு சமயத்தில் என்னை போன்ற கலரில் பார்த்தபோது நம்பவே முடியவில்லை. இந்த படத்தில் தீபா முக்கியமான வேலை பார்த்துள்ளார்.

படப்பிடிப்பில் என்ன ஒரு ஹைலைட் என்றால் நாம் டயலாக்கை மறந்து விட்டுவிட்டோம் என்றால் உடனே இந்த பாட்டிகளே யாரையும் எதிர்பார்க்காமல் கட் சொல்லிடுவாங்க. அவர்களுக்கு பயந்து கொண்டு வசனங்களை சரியாக பேசி நடிக்க வேண்டி இருந்தது.

மகேஷ் முத்துசாமி தூங்குகிறாரா, சாப்பிடுகிறாரா என்பதெல்லாம் தெரியவில்லை. எந்நேரமும் வேலை என்று இருப்பவர். இதற்குமுன் அவருடன் பணிபுரிந்திருந்தாலும் இதுபோன்று அவரை நான் பார்த்தது இல்லை.

பாடலாசிரியர் ஏகாதசியுடன் அந்த சமயத்தில் பணிபுரிய முடியாமல் போய்விட்டால் கூட இப்போது ஒன்றாக இணைந்து பணியாற்றி விட்டேன். நல்ல படத்திற்கான எல்லா தகுதியும் இந்த படத்திற்கு இருக்கு” என்று கூறினார்.

இந்த நிகழ்விற்கு படத்தில் நடித்த அனைத்து ‘தண்டட்டி’ அப்பத்தாக்களும் வருகை தந்திருந்தனர். விழா நிகழ்வின் இறுதியில் இந்த படத்தின் டிரைலரை பசுபதி வெளியிட பாட்டிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெற்றுக்கொண்டனர்.

குழுக்கல் முறையில் பாட்டிகளின் பெயர் எழுதப்பட்டு அதில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு ஒன்றரை பவுன் தண்டட்டி பரிசாக வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல அனைத்து பாட்டிகளுக்குமே விலை உயர்ந்த பரிசுகளும் தயாரிப்பாளரால் வழங்கப்பட்டது.

Thandatti grand ma troll our unit says Pasupathy

குடிகாரன்னா தாடி வச்சிருக்கனுமா.? இயக்குநரை மனம் மாற்றி நடித்த விவேக் பிரசன்னா

குடிகாரன்னா தாடி வச்சிருக்கனுமா.? இயக்குநரை மனம் மாற்றி நடித்த விவேக் பிரசன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம் சங்கையா இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘தண்டட்டி’. பசுபதி, ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி நடித்துள்ள இந்த படம் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது…

“தங்கமான மனிதர்கள் சேர்ந்து தங்கத்தை பற்றி சொல்லி இருக்கும் படம் இது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இது எனக்கு வது படம். பசுபதியும் ரோகினியும் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்றதுமே உடனே இந்த படத்தின் நடிக்க சம்மதித்து விட்டேன்.

இதுவரை நான் பண்ணாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஒரு மோசமான குடிகாரன் கதாபாத்திரம் எனக்கு.. இதற்காக தாடி வளர்க்க வேண்டும் என என்னிடம் கூறினார் இயக்குநர் ராம் சங்கையா. ஆனால் நான் அப்போது கிளீன் ஷேவ் செய்திருந்தேன்.

ஆனாலும் இயக்குநரிடம் குடிகாரன் என்றால் தாடி வைத்து தான் இருக்க வேண்டுமா, எங்கள் ஊரில் கிளீன் ஷேவ் செய்த ஒரு நபர் தினசரி காலையிலேயே குடிக்க வந்து விடுவார் என்று கூறி அவரை கன்வின்ஸ் செய்து இந்த கதாபாத்திரத்தை அவரிடம் இருந்து பிடுங்கி நடித்தேன்” என கூறினார்.

Any fixed get up for Drinkers says Vivek Prasanna

பசுபதியின் ரசிகை நான்.. ‘தண்டட்டி’ அப்பத்தாக்களுடன் புது அனுபவம் – அம்மு அபிராமி

பசுபதியின் ரசிகை நான்.. ‘தண்டட்டி’ அப்பத்தாக்களுடன் புது அனுபவம் – அம்மு அபிராமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம் சங்கையா இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘தண்டட்டி’. பசுபதி, ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி நடித்துள்ள இந்த படம் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகை அம்மு அபிராமி பேசும்போது…

“இந்த கதையை இயக்குநர் சொன்னாலும் நான் தான் இந்த படத்தில் நடிப்பேன் வேறு யாரையும் தேர்வு செய்யக் கூடாது என சொல்லி விட்டேன்.

இந்த படத்தில் கிராமத்தில் இவ்வளவு அப்பத்தாக்களுடன் நடித்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. பசுபதி சாரின் மிகப்பெரிய ரசிகை நான். அவருடன் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி” என்று கூறினார்.

Ammu Abirami speech at Thandatti audio launch

கர்மா ஒருபோதும் மன்னிக்காது.; தீ விபத்திலும் பிரஜின் சீன்களை படமாக்கிய ஸ்டாலின்

கர்மா ஒருபோதும் மன்னிக்காது.; தீ விபத்திலும் பிரஜின் சீன்களை படமாக்கிய ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அம்பிகாபதி மூவி மேக்கர்ஸ் சார்பில் பொன் செல்வராஜ் தயாரிப்பில் மற்றும் C.நளினகுமாரி இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஃ’.

ஸ்டாலின் V இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

பிரஜின் கதாநாயகனாக நடிக்க. கதாநாயகியாக டூரிங் டாக்கீஸ் புகழ் காயத்ரி ரமா நடித்துள்ளார்.

இன்னொரு கதாநாயகனாக முக்கிய வேடத்தில் பருத்திவீரன் வெங்கடேஷ் நடிக்க, வில்லனாக இயக்குநர் ஸ்டாலின் நடித்துள்ளார்.

மேலும் ஏழாம் அறிவு ராமநாதன், KPY சரத், KPY வினோத், வடக்கு வாசல் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தாயம் படத்திற்கு இசையமைத்த சதீஷ் செல்வம் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜூங்கா, மாமனிதன் ஆகிய படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தேவசூர்யா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அரவிந்தன் ஆறுமுகம் படத்தொகுப்பை மேற்கொள்ள, சண்டைக் காட்சிகளை ஆக்சன் பிரகாஷ் வடிவமைத்துள்ளார்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

கர்மா ஒருபோதும் மன்னிக்காது என்கிற இந்த படத்தின் டேக் லைனே படத்தின் கதை என்ன என்று சொல்லிவிடும். யார் ஒருவரும் தெரிந்தோ தெரியாமலோ பிறருக்கு நல்லது கெட்டது என எது செய்திருந்தாலும் அதற்கான கர்மாவை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது.

ஃ

இயக்குனர் ஸ்டாலின் இந்த படம் பற்றி கூறும்போது…

“இந்தப்படத்தின் மூன்று புள்ளிகளாக பிரஜின், பருத்திவீரன் வெங்கடேஷ் மற்றும் நான் என மூவரும் நடித்துள்ளோம். ஒரு சைக்கோ ஓவியர் கதாபாத்திரத்தில் வடக்கு வாசல் ரமேஷ் நடித்துள்ளார்.

இந்த படம் கர்மாவை பற்றியது. நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளுக்கு ஏற்ப கர்மா நமக்கு திருப்பிக் கொடுக்கும். நாம் இளம் வயதில் நம்மை அறியாமலேயே செய்த தவறுகளுக்கு கூட கர்மா நிச்சயம் பதில் சொல்லும். அதனால் கெடுதல் செய்தால் கர்மா மன்னிக்காது என்கிற கருத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது” என்றார்.

மேலும் இந்த படத்தின் முக்கியமான சண்டை காட்சி ஒன்றை படமாக்கியபோது தீ விபத்தில் இருந்து தானும் கதாநாயகன் பிரஜினும் மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவத்தையும் விவரித்தார் இயக்குநர் ஸ்டாலின்.

“சென்னை தரமணியில் நானும் நாயகன் பிரஜினும் மோதும் சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. கதைப்படி மிகப்பெரிய குற்றவாளியாக நான் ஒரு குடிசையில் பதுங்கி இருப்பேன். ஆனால் போலீசார் நான் ஏதோ ஒரு மிகப்பெரிய இடத்தில் ஒளிந்து இருப்பதாக தேடிக் கொண்டிருப்பார்கள்.

கதாநாயகன் பிரஜின் மட்டும் நான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வந்து விடுவார். அப்போது எனக்கும் அவருக்கும் நடக்கும் சண்டைக் காட்சிதான் அங்கே படமாக்கப்பட்டது.

அந்த சமயத்தில் நாயகன் பிரஜின் வில்லனான என் தாடையில் குத்து விட, என் வாயில் இருக்கும் சிகரெட் பறந்துபோய் கூரையில் விழுந்ததில் குடிசை தீப்பற்றி தெரியும் என்பதுதான் காட்சி.

சுற்றிலும் தீ எரியும் நிலையில் நானும் பிரஜினும் சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது படிப்படியாக அதிகரிக்க வேண்டிய தீ, தொழில்நுட்ப குழுவினர் செய்த சிறிய தவறால் மிக வேகமாக பற்றி எரிய ஆரம்பித்தது. ஆனால் அதற்குள் காட்சிகளை எடுத்தாக வேண்டும் என சுதாரித்த நானும் பிரஜினும் வேகவேகமாக எங்களது காட்சிகளை படமாக்கி முடித்தோம்.

அந்த சமயத்தில் அதிக வெப்பத்தை தாங்கிக்கொண்டு அந்த காட்சிகளில் நாங்கள் இருவரும் நடித்தோம். கிட்டத்தட்ட ஒரு கட்டத்தில் மயிரிழையில் உயிர் தப்பினோம் என்றே சொல்லலாம். ஆனாலும் ஆக்சன் இயக்குனர் ஆக்சன் பிரகாஷ் துரிதமாக செயல்பட்டு அந்த காட்சிகளை திட்டமிட்டபடி படமாக்கி முடித்தார்” என்று கூறினார் இயக்குநர் ஸ்டாலின்.

இந்த படத்தின் படப்பட்டிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா குறித்து அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

*நடிகர்கள்*

பிரஜின், காயத்ரி ரமா, பருத்திவீரன் வெங்கடேஷ், இயக்குநர் ஸ்டாலின் V, ஏழாம் அறிவு ராமநாதன், KPY சரத், KPY வினோத், வடக்கு வாசல் ரமேஷ் மற்றும் பலர்.

*தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*

தயாரிப்பு ; பொன்.செல்வராஜ்

இணை தயாரிப்பு ; C.நளினகுமாரி

இயக்கம்; ஸ்டாலின் V

இசை ; சதீஷ் செல்வம்

ஒளிப்பதிவு ; தேவசூர்யா

படத்தொகுப்பு ; அரவிந்தன் ஆறுமுகம்

சண்டைக் காட்சி ; ஆக்சன் பிரகாஷ்

மக்கள் தொடர்பு ; A.ஜான்

ஃ

Director Stalin talks about Prajin met fire accident

சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று குவித்த ‘கள்வா’

சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று குவித்த ‘கள்வா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச சல்சித்ரா ரோலிங் திரைப்பட விருது விழாவில் சிறந்த திரில்லர், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர் ஆகிய நான்கு விருதுகளை ‘கள்வா’ படம் வென்றுள்ளது.

இதே போல் கொல்கத்தாவின் 6வது சர்வதேச பயாஸ்கோப் பட விழாவில் சிறந்த தமிழ் படம், சிறந்த திரில்லர், சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகிய 3 விருதுகள் ‘கள்வா’வுக்கு கிடைத்திருக்கிறது.

பக்கிங்கம் ஷெர் நாட்டிலுள்ள ஃபர்ஸ்ட் டைம் பிலிம் மேக்கர் செஷன் திரைப்பட விழாவில் திரையிட ‘கள்வா’ தேர்வாகியுள்ளது.

மும்பை சர்வதேச குறும்பட விழாவுக்கும் சத்யஜித் ரித்விக் மிருணாள் சர்வதேச பட விழாவுக்கும் திரையிட தேர்வாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் லிஃப்ட் ஆஃப் பிலிம்மேக்கர் செஷன் திரைப்பட விழாவில் திரையிடவும் தேர்வாகியிருக்கிறது.

இதேபோல் மான்செஸ்டரில் ஃபர்ஸ்ட் டைம் ஃபிலிம் மேக்கர் செஷனிலும் திரையிட நடுவர் குழு தேர்வு செய்திருக்கிறது.

மேலும் பல சர்வதேச பட விழாக்களுக்கும் ‘கள்வா’ அனுப்பப்பட்டுள்ளது.

இந்த குறும்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதி ஜியா இயக்கியுள்ளார். ஜேட்ரிக்ஸ் இசையமைத்திருக்கிறார். ஷரண் தேவ்கர் சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அப்சல் கதை எழுதியிருக்கிறார். பிரேம் எடிட்டிங் செய்துள்ளார். விரைவில் இப்படம் யூடியூபில் வெளியாக உள்ளது.

Kalva movie won awards in international film festivals

More Articles
Follows