ரஜினியின் புதிய படத்தில் சகலகலா வல்லவன் பட 2 நாயகிகள்..?

Rajini Karthik Subbaraj new movie heroine updatesரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ரஜினியின் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதாகி வருவதால் 2018 செப்டம்பரில் படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இந்த இரு படங்களை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பார் என கூறப்படுகிறது.

இப்படத்திற்கு 45 நாட்கள் ரஜினி கால்ஷீட் கொடுத்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் சினிமா ஸ்டிரைக் முடிவடைந்த பின், காலாவை ரிலீஸ் செய்துவிட்டு பின் இதன் சூட்டிங்கை தொடங்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதில் ரஜினியுடன் நடிக்க த்ரிஷா மற்றும் அஞ்சலியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

10 வருடங்களுக்கு மேலாக ரஜினியுடன் நடிப்பது என் கனவு என்று நடிகை த்ரிஷா கூறிவருவதால், அவருக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயம் ரவி நடித்த சகலகலாவல்லவன் (அப்பாடக்கர்) என்ற படத்தில் த்ரிஷா மற்றும் அஞ்சலி இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini Karthik Subbaraj new movie heroine updates

Overall Rating : Not available

Related News

சீனியர் நடிகரான கமல் மற்ற நடிகர்களை…
...Read More
இந்திய சினிமாவின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒரு…
...Read More
கதாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர்…
...Read More
அன்னக்கிளி படத்தில் இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் பஞ்சு…
...Read More

Latest Post