தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய மொழி படங்களில் 1500 படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றியவர் ஜூடோ ரத்தினம்.
இவர் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 08 ஆகஸ்ட் 1930ல் பிறந்தார். இவரது இயற்பெயர் ரத்தினம்.
பாக்ஸிங் சாம்பியன் பரமசிவன் என்பவரிடம் பாக்ஸிங்யும், ஜி ராமு என்பவரிடம் ஜூடோ பயிற்சியும் கற்றார்.
ஜெய்சங்கர் நாயகனாக நடித்த வல்லவன் ஒருவன் படத்தின் மூலம் ஒரு ஸ்டன்ட் இயக்குநராக அறிமுகமானார்.
இவர் ஜூடோ என்ற சண்டை பயிற்சியை தன்னுடைய திரைப்படங்களில் பயன்படுத்தி வந்தார். எனவே இவருக்கு தமிழ் கலை இலக்கிய மன்றம் இவருடைய பெயருக்கு முன் ‘ஜூடோ’ பட்டமும் வழங்கியது. அன்றிலிருந்து ஜூடோ ரத்னம் என்றழைக்கப்பட்டார்.
சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், அர்ஜுன், என் டி ராமாராவ், ஏ நாகேஸ்வரராவ், கிருஷ்ணா, சோபன்பாபு, மோகன்பாபு, வெங்கடேஷ், ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், அம்பரீஷ், அமிதாப்பச்சன், தர்மேந்திரா, ஜிதேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி, கோவிந்தா என கோலிவுட் முதல் பாலிவுட் வரை பெரிய பெரிய நட்சத்திரங்களுடன் இவர் பணியாற்றி இருக்கிறார்.
கமலுடன்… ஒரு கைதியின் டைரி, உயர்ந்த உள்ளம், மங்கம்மா சபதம், நானும் ஒரு தொழிலாளி, பேர் சொல்லும் பிள்ளை, சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே ஆகிய படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்.
ரஜினியுடன் கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் பணியாற்றி இருக்கிறார்.
ரஜினிகாந்த நடித்த முரட்டுக்காளை படத்தில், ஓடும் ரயிலில் வில்லன்களோடு ரஜினி மோதும் சண்டைக் காட்சியை வடிவமைத்தவர் இவர்தான். பாயும் புலி படம் முதல் பாண்டியன் வரை இவர் பணியாற்றி இருக்கிறார்.
இவர், ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் SP. முத்துராமன் இயக்கிய முரட்டுக்காளை, சகலகலாவல்லவன் பாயும்புலி போக்கிரி ராஜா போன்ற பல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் SP முத்துராமன் இயக்கிய 70 படங்களில் 40 படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர்.
சூப்பர் சுப்பராயன், விக்ரம் தர்மா, ராம்போ ராஜ்குமார் போன்ற ஸ்டண்ட் மாஸ்டர்கள் இவரிடம் பணிபுரிந்தவர்கள்.
ஒத்தையடி பாதையிலே என்ற திரைப்படத்தையும் இவர் தயாரித்திருந்தார்
தாமரைக்குளம் டூ தலைநகரம் என்ற பெயரில் தனது சுயசரிதை புத்தகம்
எழுதி வெளியிட்டார்.
கின்னஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ல் 1500க்கும் அதிகமான திரைப்படங்களில் இவர் சண்டைக் காட்சி பயிற்சியாளராக பணியாற்றியது பதிவு செய்யப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருதையும்
2016 ஆம் ஆண்டு சங்கரதாஸ் ஸ்வாமிகள் விருதையும் இவர் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் ஜூடோ ரத்தினம் வயது மூப்பு காரணமாக குடியாத்தத்தில் இன்று ஜனவரி 26 மாலை காலமானார். வயது 93.
இவரது பூத உடலை நாளை அனைவரும் அஞ்சலி செலுத்துகின்ற வகையில் ஸ்டண்ட் யூனியனுக்கு கொண்டு வருகிறார்கள்.
fight master Judo Rathnam passed away
#JudoRathnam | #RIPJudoRathnam | #StuntChoreographer | #Rajinikanth | #KamalHaasan | #StuntMaster