கயல் சந்திரன்-அஞ்சனா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

Kayal Chandran and VJ Anjana blessed with a Boy babyடிவி ஆங்கர் அஞ்சனாவுக்கு பிரபல நடிகைகள் போல ரசிகர்கள் அதிகம்.

இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தாலும் மறுத்துவிட்டு டிவியிலே தொடர்ந்தார். ஒரு பக்கம் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் கயல் பட நாயகன் சந்திரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

அதன்பின்னர் டிவியில் இருந்து விலகுவதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

இந்நிலையில் அஞ்சனாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து அவரது கணவர் சந்திரன், தனது ட்விட்டர் பதிவிட்டுள்ளதாவது…

“அஞ்சனாவும் நானும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் நலம். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.

Kayal Chandran and VJ Anjana blessed with a Boy baby

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

நடிகரும் பத்திரிகையாளருமான 'கயல்' தேவராஜ் தனது…
...Read More
ஒரு படத்தை முடித்துவிட்டே தன் அடுத்த…
...Read More
வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியான…
...Read More

Latest Post