பார்த்திபனுடன் இணைந்த கயல் சந்திரன்!

பார்த்திபனுடன் இணைந்த கயல் சந்திரன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

parthiban and kayal chandranகயல் படத்தின் நாயகி ஆனந்தி போன்றே இளம் ரசிகைகளை கவர்ந்தவர் கயல் சந்திரன்.

இவர் தற்போது நடிகர் பார்த்திபனுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இதில் ஐடி துறையில் பணிபுரியும் இளைஞராக நடிக்கிறாராம் சந்திரன்.

நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து இதிலும் பார்த்திபன் வில்லன் வேடம் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சாய் சுதர்சன் இயக்கவிருக்கிறார்.

விரைவில் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.

ஆர்யா – அமீர் கூட்டணியில் சந்தன தேவன்..!

ஆர்யா – அமீர் கூட்டணியில் சந்தன தேவன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arya and ameerஇயக்குனர் அமீர் இயக்கத்தில் ஆர்யா நடிக்கிறார் என்ற செய்திகள் வெகுநாட்களுக்கு முன்பே பேசப்பட்டது.

தற்போது இச்செய்தி சற்று வேகம் எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வரும் வேளையில் இப்படத்திற்கு தற்போது சந்தன தேவன் என தலைப்பிட்டுள்ளனர்.

ஏம்.ஆர். ராதா நடித்த ஒரு படம் இதே பெயரில் பல வருடங்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

வட இந்தியாவை கலக்கும் சிவகார்த்திகேயன்..!

வட இந்தியாவை கலக்கும் சிவகார்த்திகேயன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan imagesகோலிவுட்டை கலக்கிய தனுஷ், பாலிவுட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.

இவர் இந்தியில் அறிமுகமான ரஞ்சனாவை பாராட்டி மீடியாக்கள் பல செய்திகளை வெளியிட்டன.

இந்நிலையில் இவரை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ரெமோ பற்றிய செய்திகளும் வட இந்தியாவில் வலம் வர ஆரம்பித்துள்ளன.

மும்பையை சேர்ந்த ஒரு பிரபல வார இதழ் சிவகார்த்திகேயனின் ரெமோ பர்ஸ்ட் லுக் குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் சிவகார்த்திகேயனின் புகழ் வட இந்தியாவில் பரவ ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படையப்பாவை மிரட்டிய நீலாம்பரி மீண்டும் ரஜினியுடன்..!

படையப்பாவை மிரட்டிய நீலாம்பரி மீண்டும் ரஜினியுடன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and ramya krishnanபெரும்பாலும் ரஜினியுடன் யார் நடித்தாலும் அவரது கேரக்டருக்கு பெரிய ஸ்கோப் இருக்காது.

ஆனால், அதனை மீறி ரஜினியே ஒப்புக் கொண்டு நடித்த படம் படையப்பா.

படையப்பாவை மிரட்டும் நீலாம்பரியாக வந்து அசத்தியிருந்தார் ரம்யா கிருஷ்ணன்.

தற்போது ராஜமௌலியின் பாகுபலி 2 மற்றும் கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 2.ஓ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம் இந்த நீலாம்பரி.

எளிமையாக நடைபெற்ற விக்ரம் மகள் அக்‌ஷிதா நிச்சயத்தார்த்தம்…!

எளிமையாக நடைபெற்ற விக்ரம் மகள் அக்‌ஷிதா நிச்சயத்தார்த்தம்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram daughterதேசிய விருது நாயகன் நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவுக்கும், மனு ரஞ்சித் என்பவரும் நேற்று (ஜூலை 10) திருமண நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது.

கெவின் கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது திமுக தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் தேன்மொழியின் மகன்தான் மணமகன். இதனை நாம் முன்பே தெரிவித்திருந்தோம்.

நிச்சயதார்த்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இவ்விழாவில் திரையுலக பிரபலங்கள் யாரும் பங்கேற்கவில்லை.

மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அப்போது ஒட்டு மொத்த திரையுலகினரையும் அழைக்க விக்ரம் திட்டமிட்டு இருக்கிறாராம்.

அமெரிக்காவையே அசர வைக்கும் கபாலி ரிலீஸ்..!

அமெரிக்காவையே அசர வைக்கும் கபாலி ரிலீஸ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒருவழியாக நாளை ஜூலை 11ஆம் தேதி சென்சாருக்கு செல்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’.

இதனைத் தொடர்ந்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

பெரும்பாலும் ஜூலை 22ஆம் தேதியே ரிலீஸ் தேதியாக இருக்கும் எனவும் தெரிகிறது.

எனவே முன் தினம் 21ஆம் தேதி வெளிநாடுகளில் பிரீமியர் ஷோக்கள் நடைபெறவுள்ளன.

இப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ‘சினி கேலக்ஸி’ நிறுவனம் 460 ஸ்கிரீன்களில் படத்தை வெளியிடுகிறது.

ஒரு தமிழ் படம் இத்தனை அரங்குகளில் வெளியாவது அமெரிக்கர்களையே ஆச்சரியப்படுத்தி வருகிறதாம்.

More Articles
Follows