ரஜினியின் சூப்பர் ஹிட் பாடலை படத்தலைப்பாக்கிய சந்திரன்

Rajinikanths super hit song became movie title for Kayal Chandranகிரகணம்’, ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ மற்றும் ‘பார்ட்டி’ ஆகிய படங்கள் கயல் சந்திரன் நடிப்பில் திரைக்கு வரத் தயாராகவுள்ளன.

தற்போது ‘டாவு’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் இவர்.

இந்நிலையில் ‘நான் செய்த குறும்பு’ என்ற புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும் தற்போது வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் மகாவிஷ்ணு இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக அஞ்சு குரியன் நடிக்கிறார்.

சில மலையாள படங்களிலும் தமிழில் ‘சென்னை டு சிங்கப்பூர்’ படத்திலும் நடித்துள்ளார்.

‘கோலிசோடா-2’ படத்திற்கு இசையமைத்த அச்சு ராஜாமணி இசை அமைக்கிறார்.

‘WRITER IMAGINATIONS’ என்ற பட நிறுவனம் சார்பில் உருவாகும் ‘நான் செய்த குறும்பு’ படத்தின் துவக்க விழா ஆகஸ்ட் 5-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப்பில் நடைபெறவுள்ளது.

ரஜினி நடித்த மூன்று முகம் திரைப்படத்தில் இடம் பெற்ற நான் செய்த குறும்பு பாடல் மிகப்பிரபலமானது. தற்போது அதுவே இப்படத்திற்கு தலைப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1982ஆம் வெளியான இப்பட பாடலை எஸ்பி. பாலசுப்ரமணியம் பாடியிருந்தார்.

Rajinikanths super hit song became movie title for Kayal Chandran

Overall Rating : Not available

Related News

ரைட்டர் இமேஜினேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர்…
...Read More
அட்லி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து…
...Read More

Latest Post