‘வேதாளம்-ஜில்லா’வில் கனெக்ஷன் ஆன கயல் ஆனந்தி

‘வேதாளம்-ஜில்லா’வில் கனெக்ஷன் ஆன கயல் ஆனந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kayal anandhi hotஅஜித் நடிப்பில் வெளியாகி பட்டைய கிளப்பிய படம் ‘வேதாளம்’.

தற்போது இதன் தெலுங்கு ரீமேக் உருவாக உள்ளது.

இதன் கதையில் தெலுங்கு ரசிகர்களுக்காக சில மாற்றங்களை செய்யவிருக்கிறார்களாம்.

இந்த படத்தை ஏ. எம். ரத்னம் தயாரிக்க, விஜய்யின் ‘ஜில்லா’ பட இயக்குனர் ஆர்.டி. நேசன் இயக்கவிருக்கிறார்.

அஜித் வேடத்தில் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடிக்க, அவரது தங்கை வேடத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கவிருக்கிறாராம்.

தற்போது அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

‘கபாலி-2’-வை கன்பார்ம் செய்த கலைப்புலி தாணு

‘கபாலி-2’-வை கன்பார்ம் செய்த கலைப்புலி தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini thaanuஇவ்வருட வெளியான படங்களில் இந்திய சினிமாவையே உலுக்கி பார்த்த படம் ரஜினியின் ‘கபாலி’ என்று சொன்னால் அது மிகையல்ல.

இதன் விளம்பரங்களில் புதுவிதமான யுக்திகளை கையாண்டார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

இதன் க்ளைமாக்ஸில் இதன் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக காண்பிக்கப்பட்டது.

இதனை நிரூபிக்கும் வகையில், கபாலி-2 என்றொரு டைட்டிலை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார் தாணு.

நிச்சயம் இதில் ரஜினியை தவிர வேறு யாரும் நடிக்க வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது.

ஷங்கரின் 2.ஓ மற்றும் தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கும் படங்களை முடித்துவிட்டு, கபாலி2 வில் ரஜினி நடிப்பார் என நம்பலாம்.

கபாலியை காரணம் காட்டி ‘மணல் கயிறு 2’க்கு யு சர்ட்டிபிகேட் பெற்ற எஸ்வி.சேகர்

கபாலியை காரணம் காட்டி ‘மணல் கயிறு 2’க்கு யு சர்ட்டிபிகேட் பெற்ற எஸ்வி.சேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Manal kayiru 2 movie stillsநீண்ட இடைவெளிக்கு பின்னர் எஸ்வி. சேகர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மணல் கயிறு 2.

மதன்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் எஸ்.வி.சேகர் மகன் அஸ்வின் சேகர், விசு, பூர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தரண் குமார் இசையமைக்க, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதனால் தணிக்கை அதிகாரிகளுக்கும் எஸ்வி. சேகருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

நாங்கள் எடுத்திருக்கும் படத்துக்கு நியாயமான சான்றிதழ் கிடைக்கும்வரை போராடுவேன்.

ஆனால் மறுஆய்வுக்குக்காக செல்ல மாட்டேன். கோர்ட்டுக்கு போவேன்.

ரஜினி நடித்த ‘கபாலி’ படத்துக்கு எந்த அடிப்படையில் ‘யு’ சர்ட்டிபிகேட் கொடுத்தனர் என பல கேள்விகளை எஸ்வி. சேகர் கேட்டுள்ளார்.

தற்போது, இறுதியாக ‘மணல் கயிறு 2’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘எலும்புகள் உடைந்தபிறகு ஆஸ்கர் விருது…’ ஜாக்கிசான் பெருமிதம்

‘எலும்புகள் உடைந்தபிறகு ஆஸ்கர் விருது…’ ஜாக்கிசான் பெருமிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jackie Chan finally received his first Oscar awardஹாங்காங்கை சேர்ந்த ஜாக்கிசான் 8 வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது அவருக்கு 62 வயதாகிறது.

இதுவரை கிட்டத்தட்ட 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

மேலும் 30-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும் உள்ளார்.

நடிகர், இயக்குனர், ஸ்டண்ட் மாஸ்டர், பாடகர், தயாரிப்பாளர், தற்காப்பு கலை நிபுணர் என பன்முக திறமைகளை கொண்டவர்.

54 வருடங்களுக்கு மேல் சினிமாவில் வேரூன்றி இருந்தாலும் இதுவரை ஒரு ஆஸ்கர் விருது பெற்றதில்லை.

தற்போது ஜாக்கிசானின் நீண்ட திரையுலக பயணத்தை கவுரவிக்கும் வகையில் அவருக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜாக்கிசான் கூறியதாவது..

“இத்தனை வருடம் சினிமாவில் இருந்தும் ஆஸ்கர் வாங்கவில்லையே என என் பெற்றோர் கேட்பதுண்டு.

என்னுடைய உடம்பின் பல எலும்புகளை உடைத்த பிறகு (சிரிக்கிறார்) தற்போது இந்த விருதை பெற்றுள்ளேன்.

என் ரசிகர்களுக்கு நன்றி. அவர்கள்தான் தொடர்ந்து படங்களை உருவாக்குவதற்கும், ஜன்னல்களுக்கு இடையே குதிப்பதற்கும், அடித்து உதைப்பதற்கும், என் எலும்புகள் உடைவதற்கும் காரணம்.” என்றார் ஜாக்கிசான்.

மீண்டும் பல்கேரியா பறந்தார் அஜித்

மீண்டும் பல்கேரியா பறந்தார் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith chennai airportதல 57 படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தி முடித்தனர் அஜித் படக்குழுவினர்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பை பல்கேரியா நாட்டில் நடத்தியிருந்தனர்.

தற்போது மூன்றாம் கட்டப் படப்பிடிப்புக்காக மீண்டும் பல்கேரியா நாட்டிற்கு இயக்குனர் சிவா உள்ளிட்ட படக்குழுவினர் சென்றுள்ளனர்.

இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அஜித் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டுள்ளார்.

இதன் சூட்டிங் 60 நாட்கள் வரை நடைபெறும் எனத் தெரிகிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், தம்பி ராமையா, கருணாகரன், அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

கமல்-அஜித்துக்கு பிறகு நடிகையை தேர்வு செய்த டைரக்டர்

கமல்-அஜித்துக்கு பிறகு நடிகையை தேர்வு செய்த டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

after kamal ajith Chakri Toleti direct heroine subjectஉலகநாயகன் கமல், சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான படம் உன்னைப் போல் ஒருவன்.

இப்படத்தை சக்ரி டொலட்டி Chakri Toleti இயக்கியிருந்தார்.

இவரே அஜித்தின் பில்லா2 படத்தையும் இயக்கினார்.

தற்போது இவர் 3வதாக நேரடி தமிழ் படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இதில் நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.

இது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்ன கூறப்படுகிறது.

More Articles
Follows