வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கயல்’ சந்திரன்

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கயல்’ சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

venkat prabu and kayal chandranவெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் சென்னை 28 பார்ட் 2.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்க தயராகிவிட்டார்.

இப்படத்தை அம்மா கிரியேசன்ஸ் சார்பாக டி.சிவா தயாரிக்கிறார்.

கயல் பட புகழ் சந்திரன் நாயகனாக நடிக்கிறாராம்.

இப்படத்தின் வசனங்களை இயக்குனர் ராஜேஷ் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Venkat Prabhu and Kayal Chandran teamsup for new project

முதல் நாள் வசூலில் ‘கபாலி-தெறி’யை முந்தினாரா ‘பைரவா’.?

முதல் நாள் வசூலில் ‘கபாலி-தெறி’யை முந்தினாரா ‘பைரவா’.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali Bairavaaநேற்று உலகம் முழுவதும் விஜய் நடித்த பைரவா படம் வெளியானது.

பக்கா கமர்ஷியல் ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகியிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் என்ன? என்பது பற்றி கிடைத்த தகவல்களை பகிர்கிறோம்.

சென்னையில் முதல் நாள் வசூலித்த தொகை மட்டும்…

ரூ. 90 லட்சத்தை முதல் நாளில் வசூலித்திருக்கிறார் பைரவா.

விஜய்யின் முந்தைய படமான தெறி முதல்நாளில் ரூ. 1 கோடியை நெருங்கியது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி ரூ. 1 கோடியை தாண்டி சென்னையில் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டில் சாதனை படைத்தது.

Whether Bairavaa beat Kabali and Theri 1st day collection

‘முன்னோடி’ படத்தை வெளியிடும் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன்

‘முன்னோடி’ படத்தை வெளியிடும் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Munnodi movieஸ்வஸ்திக் சினி விஷன் தயாரிப்பில் உருவான ​“முன்னோடி” படத்தை மதனின் எஸ்கேப் ஆா்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்​ வாங்கி வெளியிடுகிறது​!

விண்ணைத் தாண்டி வருவாயா, அழகா் சாமியின் குதிரை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபா் சங்கம், தேசிங்கு ராஜா, மான் கராத்தே, கயல், மாப்பிள்ளை சிங்கம், கொடி போன்ற தரமான வெற்றிப் படங்களைத் தயாரித்த நிறுவனம் எஸ்கேப் ஆா்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்​.

தற்போது “என்னை நோக்கி பாயும் தோட்டா​”, விக்ரமின் அடுத்த படம் என சுறுசுறுப்பாக இருக்கும் மிக முக்கிய தயாரிப்பாளரான மதன் தனது எஸ்கேப் ஆா்ட்டிஸ்ட் நிறுவனம் சார்பாக முன்னோடி படத்தை வாங்கி வெளியிடுகிறார்.

ஒருவன் யாரை முன்னோடியாகக் கொண்டு பின்பற்றுகிறானோ அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும்.​​

‘வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்’ என்கிற இக்கருத்தை முன்வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘முன்னோடி’.

இதை கதை, திரைக்கதை, வசனம் எழுதி புதுமுக இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர், சோஹம் அகர்வால் இருவரும் இணைந்து தயாரி​த்திருக்கிறார்கள்.

ஹரீஷ், யாமினி பாஸ்கர் இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். இரண்டு கதாநாயக நடிகர்கள் இப்படத்தின் மூலம் வில்லன்களாகியுள்ளனர்.

கங்காரு’ படத்தின் நாயகன் அர்ஜுனா, ‘குற்றம் கடிதல்’ பாவல் நவநீதன் இருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் சித்தாரா,ஷிஜாய் வர்கீஸ், நிரஞ்சன், சுரேஷ், தமன், வினுக்ருதிக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைக்கிறார் கே.பிரபு ஷங்கர் படத்தின் எடிட்டிங்கை என்.சுதா கவனிக்க, நடனம் அமைத்திருக்கிறார்.

ஏபி.சந்தோஷ். ஸ்டண்ட் – டேஞ்சர் மணி.

‘முன்னோடி’ படம் சென்னையில் நடக்கும் கதை என்றாலும்​, ​பிற வட்டார மொழியையும் சில பாத்திரங்கள் பேசுகின்றன.

படப்பிடிப்பு 120 நாட்கள் நடை பெற்றுள்ளது.

munnodi 1

‘முன்னோடி’ படம் பற்றி தயாரிப்பாளா் மதன் கூறும் போது…

சமீபத்தில் நண்பர்களின் ேண்டுகோளுக்கிணங்கவும், சினிமாவில் நம்மால் யாருக்காவது உதவ முடியுமா என்ற நோக்கோடும் என் தனிப்பட்ட தயாரிப்புகளுக்கு நடுவேயும், சில படங்களைப் பார்த்து வெளியிட்டு வருகிறோம்.

அதன்படி, “முன்னோடி” படத்தையும் பார்க்க நோ்ந்தது. மிக மிக நோ்த்தியாகவும், அதிரடியாகவும் விறுவிறுப்பான படத்தை எடுத்திருந்தார். புதுமுக இயக்குநா் குமார் “ரேணிகுண்டா” படத்தைப் போன்ற களத்தில் மிக அழமான கதையுடன் மிரட்டியிருந்தார்.

சமீபத்தில் வெளியிடுவதற்காக நான் பார்த்தது 100 படங்களுக்கு மேல் இருக்கும். அதில் என்னை பாதித்தது “முன்னோடி” படம் என்று சொல்லலாம்.

யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இவ்வளவு அழகான படத்தை எடுத்ததற்கு கட்டிப்பிடித்து எனது வாழ்த்தை தெரிவித்த கையுடன் மறுநாளே படத்தை நானே வெளியிடுகிறேன் என ஒப்பந்தம் செய்து கொண்டேன்.

எல்லோருக்கும் பிடித்த படமாக நிச்சயம் “முன்னோடி” இருக்கும். வெளியிட்டு தேதியை விரைவில் அறிவிப்போம் என்றார்.

munnodi 2
​படம் பற்றி இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார் பேசும்போது…

“படத்தின் நாயகன் நல்லவனா கெட்டவனா? சூழலால் மாறியவனா? மாற்றப்பட்டவனா? என்பது மட்டுமல்ல நல்லவனை முன்னோடியாக எண்ணுகிற பாத்திரத்தின் நிலையையும் தீயவனை முன்னோடியாகக் கொண்ட பாத்திரத்தின் நிலையையும் காட்டி திரைக்கதை அமைத்துள்ளேன்.

படத்தில் நான்கு பாடல்கள். தவிர இரண்டு சிறு பாடல்களும் உண்டு. ​

‘முன்னோடி’ காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் கலந்த முழு நீள கமர்ஷியல் படமாக இருந்தாலும் உளவியல் சார்ந்த விஷயங்கள் எந்த இடத்திலும் குறையாமல் இருக்கும்”.

படம் பார்த்ததும் மதன் சார் கட்டிப்பிடித்து பாராட்டினார். அதுவே புதுமுக இயக்குனரான எனக்கு பெரிய வெற்றி.

மேலும் இன்றுள்ள வியாபார போராட்டத்தில் படம் வெளியாவது என்பது குதிரைக் கொம்பு. ஆனால் மிகப்பெரிய நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. இது என் கொடுப்பினை.

பெரிய நிறுவனம் வெளியிடுவதால் எளிதாக இந்த படம் மக்களிடம் சென்றுவிடும். மக்களிடம் சென்றுவிட்டால் அவர்கள் நிச்சயம் இப்படத்தை வெற்றிப்படமாக்கிவிடுவார்கள்.

வெளியிடும் மதன் சாருக்கும்​,​ நண்பர் ஜேம்ஸ் -க்கும் நன்றி.

 

‘அஜித் மாதிரி ஒரு ஜென்டில்மேனை நான் பார்க்கல..’ – அனிருத்

‘அஜித் மாதிரி ஒரு ஜென்டில்மேனை நான் பார்க்கல..’ – அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith is like gentleman says Anirudhசிவா இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இப்படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத் இப்படம் குறித்து கூறியதாவது…

“வேதாளம் படத்தை விட இப்படத்திற்காக நிறைய உழைத்து வருகிறோம்.

இப்படம் ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான படம்.

அஜித் போன்ற ஒரு ஜென்டில்மேனை நான் பார்த்த்து இல்லை.

என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்.

என்னுடைய இசை பணிகளில் அவர் தலையிடவே மாட்டார்” என்று கூறியுள்ளார்.

 

ஜிவி. பிரகாஷுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்

ஜிவி. பிரகாஷுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash sivakarthikeyanஇந்த 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் என மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கு ஆதரவாக கமல், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்டவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜி.வி.பிரகாஷ் இசையில், அருண்ராஜா காமராஜ் வரிகளில் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டு பாடல் உருவாகியுள்ளது.

இப்பாடலை இன்று மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன்.

‘பைரவா’ ரிலீசுக்கு முன்பே கிடைத்த வெற்றி

‘பைரவா’ ரிலீசுக்கு முன்பே கிடைத்த வெற்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bairavaa movie got Tamilnadu govt tax exemptionவிஜய் நடித்துள்ள பைரவா படம் நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தின் ப்ரீமியர் ஷோ வெளிநாடுகளில் இன்று திரையிடப்பட உள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு தமிழக அரசு கேளிக்கை வரிச்சலுகை கொடுத்துள்ளது.

இதனால் தற்போதே வெற்றிப் பெற்ற மகிழ்ச்சியில் உள்ளது பைரவா டீம்.

 

 

bairavaa tax

More Articles
Follows