அதிகமாக நகை அணியும் பெண்களுக்கு அட்வைஸ் சொல்லும் படம்

அதிகமாக நகை அணியும் பெண்களுக்கு அட்வைஸ் சொல்லும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MarainthirunthuPaarkkumMarmamEnna stillsஎக்ஸட்ரா எண்டர்டெய்ண்மெண்ட் சார்பாக V மதியழகன், R. ரம்யா தயாரித்துள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”.

இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனாவும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் J.D.சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’கோபி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் வளவன், ’நான் மகான் அல்ல’ ராம்ஸ் மற்றும் நிறைய அறிமுகங்களும் நடிக்கின்றனர்.

இந்த தலைப்பிற்கும், கதைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. காரணம் இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்தி கதை நகர்கிறது.

இன்று பெண்கள் தாங்கள் தங்கள் சுதந்திரத்தோடு இயங்கும்போது, பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். சமூகத்தில் ஒரு ஆண் எதிர்கொள்ளக்கூடிய சுதந்திரத்தின் எல்லை பெண்களுக்கு உண்டா என்று கேட்டால்… இல்லை. இன்னும் பாரதியின் கனவு முழுமை பெறவில்லை. இன்னும் பயத்தோடவேதான் பெண்கள் தங்கள் வெளியில் நடமாடும் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள் என்பேன் என்கிறார் இயக்குநர் ராகேஷ்.

மேலும் அவர் கூறியதாவது,

காதல், காமம், கற்பழிப்பு, கந்துவட்டி, உரிமை மீறல், வரதட்சணை என பெண்களைச் சுற்றி நிற்கும் சமூகத்தின் வேலிகள் அவ்வளவு சாத்தியமாக்கிவிடவில்லை அவர்களின் சுதந்திரத்தை.

வேலையிடங்களில் நேர்கிற பாலியல் ரீதியான தொந்தரவுகள், அவமானத்தைக் கொண்டுவரும் வீடியோக்கள் என அவர்களின் சுதந்திரமும் உரிமையும் ஒருவித பயத்தோடுதான் அனுபவிக்க முடிகிறது.

அப்படி அவர்கள் வெளியுலகில் சமூகத்தில் சாதாரணமாக இயங்கும்போது நேரக்கூடிய ஒரு மிக மிக முக்கியமான பிரச்சனையை மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படம் பேசுகிறது.

பெண்களின் அழகு என்பது அவர்களின் நடவடிக்கைகளிலும், ஆளுமையிலும் தான் இருக்கிறது. தவிர, அவர்கள் அணியும் ஆபரணங்களில் அல்ல. அந்த ஆபரணங்களால் பெண்களுக்கு விளைவது தொல்லையே.. பெண்களுக்கு அழகு புன்னகைதானேயொழிய பொன்னகை அல்ல.

சில பெண்கள் விழா நாட்களில் அளவுக்கதிகமாக நகைகள் அணிவதைப் பார்த்திருக்கிறோம். நகை அணிவது ஒரு கூடுதல் அழகுதான். ஆனால் அளவுக்கதிகமான அணிகலன்கள் கண்ணை உறுத்தும். சில பெண்கள் சுயதம்பட்டத்திற்கோ, பெருமைக்காகவோ நகைக்கடை போலவே காட்சியளிப்பார்கள்.

அப்படிப்பட்ட பெண்கள் ஒன்றை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும். சமூக விரோதிகள் கடவுளின் கழுத்தில் கூட கை வைக்கத் தயங்குவதில்லை.

அளவான அணிகலன்களோடு வெளியே செல்லும்போது இழப்புகள் இருக்காது. நகை போனாலும் பரவாயில்லை. உயிர் போனால் என்னாவது? கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் பாக்கெட்டிலா எடுத்துக்கொண்டா சுற்றுகிறோம்?

அதிக நகை என்பது எதிர்காலத்திற்கான சேமிப்பாக இருக்கட்டும். அளவுக்கதிகமான நகையோடும், ஒரேமாதிரியான நடவடிக்கைகளை தினந்தோறும் செய்வதும் பெண்களுக்கான ஆபத்தை வீடுதேடி அழைத்து வருகிறது.

பெண்களின் பாதுகாப்பை பற்றி வலியுறுத்த எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்திற்கு சென்ஸார் வாங்குவதற்குள் நாங்கள் பட்ட பாடு சொல்லி மாளாது என கலங்குகிறார் இயக்குநர் ராகேஷ்.

இன்று படம் இயக்கவே என்ன பாடு என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால் இங்கு இதை எடுக்கலாம். இதை எடுக்கக்கூடாது என்ற முன் அறிவுறுத்தல் இல்லாத அல்லது இதை ஏற்றுக்கொள்வார்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற எந்தவித வழிகாட்டுதலுமில்லாத ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கையில்தான் படமெடுக்க வேண்டியுள்ளது.

காட்சிகள் அமைத்து அதை படமாக்கி காட்சிகளைக் கோர்த்து முழுமை பெற்ற ஒரு படமானபின் அதை இருக்கக்கூடாது என்கிறார்கள். அப்போ அந்த காட்சியை உருவாக்க செலவழித்த பணம் எல்லாம் வீண்தானே? ஒரு சென்ஸார் போர்டு உறுப்பினர்க்கு இந்த காட்சி படத்தில் இருக்கக்கூடாது என சொல்லத் தெரிகிறது. அது ஏன் இருக்கக்கூடாது என அவருக்கு சொல்லத் தெரியும்போது… அது ஏன் ஒரு இயக்குநருக்கு தெரியாமல் போகிறது என்ற கேள்வி வருகிறதே? அதற்கான பதில் என்ன?

அப்படி எந்த விதிகளும் வரைமுறைகளும் இந்த சென்ஸாரில் தெளிவாக இல்லை. இந்த சினிமா எடுப்பவர்களுக்கு அந்த வழிகாட்டுதல் ஒரு புத்தகமாகவோ அல்லது வகுப்பாகவோ சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்வேன்.

அப்படியொரு திட்டவட்டமான விதிமுறைகள் ஏன் இல்லை என்பது என் கேள்வி? ஆளுங்கட்சியின்போது படம் எடுத்தால் எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி வரும் கமெண்டுகள் அல்லது அவரைப் பற்றிய தவறான காட்சிகள் அனுமதிக்கப்படும்.

ஆளுங்கட்சியில் உள்ளவர் பற்றி அதே வார்த்தையில் அதே வார்த்தையால் காட்சிப்படுத்தப்பட்டால் அந்தக்காட்சி வெட்டப்படும். இதுதான் சென்ஸார்.

இந்தப் படத்தின் துவக்கத்தில் இடம்பெற்றுள்ள ஒருசில ரத்தக் காட்சிகளுக்காக, சில இடங்களில் கட் கொடுக்கப்பட்டது. அப்படியும் சென்ஸார் கிடைக்கவில்லை. ரிவைசிங் கமிட்டிக்கு சென்று படாதபாடு பட்டபின்னரே U/A சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

இத்தனைக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம். அவர்களுக்கு நேரும் சில பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் முன் வைத்திருக்கிறது இந்தப்படம்.

அப்படிப்பட்ட படத்தையே பாடாய்ப்படுத்தித்தான் சென்சார் சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் பேச்சுவழக்கில் இருக்கும் ஒரு வார்த்தையை அனுமதித்த சென்சார், அதே வார்த்தையை இந்தப்படத்தில் அனுமதிக்க மறுத்துள்ளது..

அதேபோல ரத்தக்காட்சிகளுடன் சில படங்களுக்கு ‘U’ சான்றிதழ் கொடுத்திருக்கும் அதே சென்சார் தான், இந்தப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியிருக்கிறது என்பதை என்னவென்று சொல்வது..? படம் எடுப்பதைவிடக் கொடூரம் இந்த சென்ஸாரில் சான்றிதழ் வாங்குவதுதான். சான்றிதழ் வாங்குவதற்கு மட்டுமே ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. என்ன பாடாய்ப்படுத்தினாலும் இறுதியில் சமூகத்திற்குத்தேவையான ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறோம் என்பதுதான் நிறைவு எனக் கலங்குகிறார் இயக்குநர் ராகேஷ்.

இந்தப்படத்தின் ஒளிப்பதிவை P.G.முத்தையா கையாள, கோலிசோடா2 படத்தின் இசையமைப்பாளர் அச்சு இசையமைத்துள்ளார், எடிட்டிங்கை ஷான் லோகேஷும், பாடல் வரிகளை பா.விஜய்யும், மீனாட்சி சுந்தமும் எழுத, கலையை ரெம்போன் பால்ராஜூம் (பாபநாசம், தனி ஒருவன்), சண்டைப் பயிற்சியை விமலும் அளித்துள்ளனர்.

படத்தின் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

கிரிக்கெட் முதல் புட்பால் வரை; கலை கட்டும் நட்சத்திர கலைவிழா தேதி

கிரிக்கெட் முதல் புட்பால் வரை; கலை கட்டும் நட்சத்திர கலைவிழா தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Ramanaதென்னிந்திய நடிகர் சங்கத்தின் “ நட்சத்திர கலை விழா “ வருகிற ஜனவரி 6 2018 அன்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது !

வருகிற ஜனவரி 6 2018 அன்று மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் கலை நிகழ்ச்சி, நடனம், நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் புகழ்பெற்ற நடிகர்களின் பேச்சு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இது தவிர ஆறு அணிகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

இந்த கிரிக்கெட் போட்டிக்கு வழக்கம் போல் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம்ரவி, ஜீவா ஆகியோர் தலைமை தாங்குவார்கள். ரஜினி, கமல் உட்பட 100க்கும் மேற்ப்பட்ட நடிகர், நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் மலேசிய நடிகர்கள் பங்கேற்கும் FootBall போட்டி ஒன்றும் நடைபெறவுள்ளது. FootBall போட்டியில் மலேசிய நடிகர்கள் நமது தமிழ் சினிமா நட்சத்திரங்களுடன் மோதவுள்ளனர்.

எதிர்காலத்தில் மலேசிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தமிழ் படங்களில் பணியாற்ற வாய்ப்பு எற்படுத்திதரப்படும். இந்நிகழ்ச்சி மலேசிய அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.

சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நட்சத்திர கலை விழா பற்றி அறிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர் சங்க நிர்வாகிகள் கார்த்தி, கருணாஸ் மற்றும் பூச்சி முருகன், மனோபாலா, குட்டி பத்மினி, ரோகிணி, பசுபதி, ரமணா, நந்தா, உதயா, ஹேமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை அறிவித்தார்கள்.

நடிகர் சங்க நிர்வாகிகள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து நட்சத்திர விழாவில் கலந்து கொள்ள அழைப்புவிடுத்தனர்.

இவ்விழா மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கின் தலைமையில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.இவ்விழா மலேசிய புக்கிஜாலி அரங்கில் வைத்து நடைபெறவுள்ளது. இதில் 80,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழுக்கி விழுந்தது கீர்த்தி சுரேஷ் இல்லையாம்; படக்குழு விளக்கம்

வழுக்கி விழுந்தது கீர்த்தி சுரேஷ் இல்லையாம்; படக்குழு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

படப்பிடிப்பு சமயத்தில் நடிகை ஒருவர் பாறையில் வழுக்கி விழுவது போன்ற வீடியோ ஒன்று அண்மையில் இணையங்களில் வெளியானது.

அந்த நடிகையின் உடை ‘தொடரி’ படத்தில் கீர்த்தி சுரேஷ் அணிருந்த உடையை போன்று இருந்ததால், கீர்த்திதான் வழுக்கி விழுந்துவிட்டார் என செய்திகள் வெளியானது.

இது குறித்து கீர்த்தி தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

த்ரிவிக்ரம் – பவன்கல்யாண் சூட்டிங்கில் கலந்துக் கொண்டு நடித்து வருகிறார் கீர்த்தி. அந்த வீடியோவில் இருப்பது வேறு ஒரு நடிகை என தெரிவித்துள்ளனர்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட லிண்டா குமார் என்ற நடிகையின் படக்குழுவினர் தெரிவித்துள்ளதாவது…

‘Kunjiramante Kuppayam’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பின் போது லிண்டா குமார் வழுக்கி விழுந்தார்.

அவரை தான் அனைவருமே கீர்த்தி சுரேஷ் என நினைத்து விட்டனர்.

தற்போது லிண்டா குணமாகி வருகிறார் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

linda kumar

வீரா விரித்த காதல் வலையில் விழுந்தது எப்படி..? நமீதா விளக்கம்

வீரா விரித்த காதல் வலையில் விழுந்தது எப்படி..? நமீதா விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress namithaவருகிற நவம்பர் 24-ம் தேதி தயாரிப்பாளர் மற்றும் நடிகர் வீராவை திருமணம் செய்யவுள்ளதாக நடிகை நமீதா ஒரு வீடியோ பதிவொன்றில் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து நமீதா ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதிர் அவர் கூறியதாவது…

அனைவருக்கும் வணக்கம், நானும் வீராவும் வரும் நவம்பர் 24-ம் தேதி திருப்பதி கோயிலில் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் செய்தி உங்களை இந்நேரம் வந்தடைந்திருக்கும்.

வீரா என்னுடைய சிறந்த நண்பர், என் மனதுக்கு இனியவர். அவர் தயாரிப்பாளர் என்பதுடன் ஆர்வமிக்க நடிகர். இந்தத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட காதல் திருமணம்.

எங்கள் சிறந்த நண்பர் சஷிதர் பாபு மூலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது.

நாளடைவில் இருவரும் நல்ல நண்பர்களானோம். செப்டம்பர் 6, 2017-ல் கடற்கரையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எங்களுக்கு இரவு உணவு விருந்து அளிக்கும் போது காதலை வெளிப்படுத்தினார்.

நான் மெய்சிலிர்த்துப் போனேன். ஏனென்றால் நான் இதை எதிர்பார்க்கவேயில்லை. ஆனால், இருவரும் ஒரே வாழ்க்கை லட்சியத்தைப் பகிர்ந்து கொள்கிறோம், இருவரும் ஆன்மிக விழிப்பு பெற்றவர்கள் ஆகிய காரணத்தினால் நான் அவரது இந்த விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்தேன்.

பயணம், மலையேறுதல், இயற்கையை ரசித்தல் என்று இருவருமே அன்பைப் பகிர்ந்து கொண்டோம்.

இருவருக்குமே விலங்குகளை நேசிப்பவர்கள், இருவருக்குமே வாழ்க்கை மீது பெரிய நேசமும் பற்றுதலும் இருக்கிறது. என்னை ஒருவர் அவரது வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தது குறித்து நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக என்னை உணர்ந்தேன்.

இருவருக்குமிடையே ஒளிவு மறைவு கிடையாது. கடந்த 3 மாதங்களாக நான் அவரை நிரம்பவும் புரிந்து கொண்ட பிறகு அவருடன் சேர்ந்து வாழ்வதை இன்னும் கூடுதல் அதிர்ஷ்டமாக உணர்ந்தேன்.

அவரது மென்மையான அக்கறை மற்றும் ஆதரவினால் ஆண்கள் மீதான என் நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது. எனக்கு ஆதரவளித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றிகள், உங்கள் நேசத்தையும் ஆசீர்வாதத்தையும் இருவருமே நாடுகிறோம். நன்றி, கடவுள் உங்களைக் காப்பார்.”

இவ்வாறு நமீதா தெரிவித்துள்ளார்.

சிம்பு பட தோல்வி சர்ச்சைக்கு அஜித் டயலாக்கை பயன்படுத்திய ஆதிக்

சிம்பு பட தோல்வி சர்ச்சைக்கு அஜித் டயலாக்கை பயன்படுத்திய ஆதிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

adhik and STRத்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை தொடர்ந்து சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன்.

இரண்டு பாகங்களாக உருவாகியிருந்த இப்படத்தின் முதல் பார்ட் பெரும் தோல்வியை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து தனது புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

இதனிடையில் தன்னை கலாய்த்து வரும் சிலருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது ட்விட்டர் பக்கத்தில் விவேகம் படத்தில் அஜித் பேசிய வசனத்தை பதிவிட்டு, மீண்டும் எழுந்து வருவேன் என பதிவிட்டுள்ளார்.
இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டனு உன் முன்னாடி நின்னு அலறினாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும் எங்கயும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது. நெவர் எவர் க்வ் அப். முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி. மீண்டும் எழுவேன். என தெரிவித்துள்ளார்.

Adhik Ravichandran‏ @Adhikravi
Indha Ulagame Unnai Ethirthaalum Ella Suzhazhilum Nee Thothutaa Thothutaa Nu Un Munnadi Ninnu Alarnaalum Neeya Oththukura Varaikkum Evanaalum Engayum Eppavum Unna Jaika Mudiyathu Never Ever Give up. Thanks to my back stabbers. I Will Rise. #thankyou

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் வர்மா

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் வர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

varma teamதெலுங்கில் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ‘அர்ஜூன் ரெட்டி’.

இதன் தமிழ் ரீமேக்கை பிரபல இயக்குனர் பாலா இயக்குகிறார்.

இதில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலா இயக்கவுள்ள இப்படத்திற்கு ‘வர்மா’ என பெயரிட்டுள்ளதாக விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை முன்பே வெளியிடவிருந்த விக்ரம், ஒளிப்பதிவாளர் பிரியன் மரணமடைந்துவிட்டதால் தள்ளி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bala directorial Arjun reddy tamil remake titled Varma

More Articles
Follows