தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடித்த ‘புதிய கீதை’ மற்றும் சேரன் நடித்த ‘ராமன் தேடிய சீதை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கேபி ஜெகன் என்ற ஜெகன்நாத்.
இவர் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் இயக்கிவரும் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’.
இதில் ’பசங்க’ மற்றும் ‘கோலி சோடா’ ஆகிய படங்களில் நடித்த பாண்டி நாயகனாக நடிக்கிறார்.
ஆனால் தன் பெயரை மாற்றி தமிழ் என்ற பெயருடன் நாயகனாக அறிமுகமாகிறாராம்.
அது இருக்கட்டும். படத்தின் தலைப்பில் இருக்கும் அந்த செருப்பை தொலைத்த ஆள் யார் என்றுதானே கேட்கிறீர்கள்.
அவர்தான் கயல் ஆனந்தி.
ஆனந்தியின் செருப்பு காணாமல் போனதன் பின்னணியில் ஒரு வலுவான காரணத்தை வைத்திருக்கிறாராம் இயக்குனர்.
(என்னப்பா விகேசி செருப்பு விளம்பரத்துல வர போல இருக்கே…)
இவர்களுடன் யோகிபாபு, கே.எஸ். ரவிக்குமார், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி, பாலசரவணன், கயல் தேவராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.