திட்டம் போட்டு திருடுற கூட்டத்துக்கு உதவும் சிவகார்த்திகேயன்

திட்டம் போட்டு திருடுற கூட்டத்துக்கு உதவும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tptkகயல் சந்திரன் மற்றும் பிச்சைக்காரன் புகழ் சட்னா டைட்டஸ் இருவரும் ஜோடியாக நடிக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.

ஐடி துறையில் வேலை செய்யும் சந்திரனின் சித்தப்பாவாக பார்த்திபன் நடிக்கிறார்.

அறிமுக இயக்குநர் சாய் சுதர்சன் இப்படத்தை இயக்க, ரகு இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை ஏப்ரல் 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு சிவகார்த்திகேயன் வெளியிடவிருக்கிறாரம்.

குற்றம் 23 படத்தை வெளியிட்ட அக்ராஸ் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Thittam Poattu Thirudura Kootam teaser launch by Sivakarthikeyan on 13th April 2017

tptk siva

நேற்று ரஜினி; இன்று கமல்; தொடரும் பாஜக ஆதரவு சர்ச்சை

நேற்று ரஜினி; இன்று கமல்; தொடரும் பாஜக ஆதரவு சர்ச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhaasan Meets Central Minister Pon Radhakrishnanஅரசியல் உலகில் அண்மைகாலமாகவே கமல் பற்றிய பேச்சு அதிகளவில் கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பொன்.ராதாகிருஷ்ணனின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார் கமல்.

அப்போது கமலை வரவேற்று பொன்னாடை போர்த்தியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.

அவரை வரவேற்ற புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனால், பாஜ கட்சிக்கு கமல் ஆதரவளிக்க போகிறாரா? என்ற பேச்சுக்கள் அரசியல் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் ஆர்.கே.நகர் தொகுதி பாஜக வேட்பாளர் கங்கை அமரன் ரஜினியை சந்தித்த போதும், இது போன்றே ஆதரவு பற்றி பேசப்பட்டது.

Kamalhaasan Meets Central Minister Pon Radhakrishnan

 

மீண்டும் அஜித் ரசிகர்களை மிரட்ட வரும் ‘வேதாளம்’ வில்லன்

மீண்டும் அஜித் ரசிகர்களை மிரட்ட வரும் ‘வேதாளம்’ வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabir singh with ajithசில நடிகர்களின் படங்களில் நடித்தால் போதும், ஒரே படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாகி விடலாம்.

அப்படிதான் தமிழக ரசிகர்களிடம் பிரபலமானார் வேதாளம் பட வில்லன் கபீர் துகான் சிங்.

மீண்டும் அஜித்துடன் நடிக்க காத்திருப்பதாக அவ்வப்போது கூறிவருகிறார்.

இந்நிலையில், அஜித் ரசிகர்கள் இணைந்து உருவாக்கி வரும் ‘தல போல வருமா’ படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம் கபீர்சிங்.

கேஎம் தேஜாஸ் முக்கிய வேடத்தில் நடிக்க, அஜித் ரசிகரான சுராஜ் இயக்கவுள்ளார். குணசீலன் ஒளிப்பதிவு செய்கிறார்

Vedhalam villain Kabir singh again with Ajith fans

‘பவர் பாண்டி’யை பார்த்த சூப்பர் ஸ்டார் என்ன சொன்னார்.?

‘பவர் பாண்டி’யை பார்த்த சூப்பர் ஸ்டார் என்ன சொன்னார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth praised Dhanushs Power Paandi movieதிறமை  எந்த துறையில் எங்கிருந்தாலும் இருந்தாலும் அதை பாராட்டி வருபவர் ரஜினிகாந்த்.

இந்நிலையில் இவரது மருமகனும் நடிகருமான தனுஷ் முதன்முறையாக இயக்கியுள்ள பவர் பாண்டி (தற்போது ப. பாண்டி) படத்தை அண்மையில் பார்த்தாராம்.

அதில் வயதானவர்களின் வாழ்க்கை முறைகளை யதார்த்தமாக கொடுத்திருந்தாராம் தனுஷ்.

நமக்கு நிறைய உறவினர்கள், நண்பர்கள் இருந்தாலும், நம்மை நாம் பார்த்துக் கொள்ள சேமிப்பு அவசியம் என்பதை அந்த பவர் பாண்டி கேரக்டர் சொல்லியுள்ளதாம்.

இதனை கண்ட ரஜினி, இயக்குனரை வெகுவாக பாராட்டினாராம்.

மேலும், அடுத்தடுத்து படங்களை உடனே இயக்க வேண்டாம்.

அப்போதுதான் இந்த படத்திற்கு உள்ள மவுசு நிறைய காலத்திற்கு வரும்.” என தெரிவித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Rajinikanth praised Dhanushs Power Paandi movie

நெருப்புடா குழுவினருக்கு ஷாக் கொடுத்த சிவகார்த்திகேயன்

நெருப்புடா குழுவினருக்கு ஷாக் கொடுத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan in neruppuda audio launchவிக்ரம் பிரபு முதன்முறையாக தயாரித்து நடித்துள்ள ‘நெருப்புடா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சற்று முன்னர் சென்னையில் நடைபெற்றது.

நிக்கிகல்ராணி நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டான் இசையமைத்துள்ளார்.

இவ்விழாவில் ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், சிவகுமார், விஷால், கார்த்தி, தனுஷ், உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழா முடிந்தபின்னர் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது திடீரென சிவகார்த்திகேயன் வந்து படக்குழுவினரை வாழ்த்தினார்.

விஷால்-கார்த்தி இணையும் படத்தின் சுவாரஸ்யங்கள்

விஷால்-கார்த்தி இணையும் படத்தின் சுவாரஸ்யங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi and Vishal starring in Karuppu Raja Vellai Rajaமுதன்முறையாக விஷால் மற்றும் கார்த்தி இணையும் நடிக்கும் படத்திற்கு கருப்பு ராஜா வெள்ளை ராஜா என பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தை கல்வியாளர் ஐசரி கணேஷ் உடன் இணைந்து தயாரிக்கிறார் பிரபுதேவா.

பிரபுதேவா இயக்கவுள்ள இப்படத்தில் வனமகன் நாயகி சாயிஷா நடிக்கிறார்.

இப்படம் தொடர்பாக் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் இப்படக்குழுவினர்.

அப்போது அவர்கள் பேசியதன் சுவாரஸ்ய தொகுப்புகளை இங்கே கொடுத்துள்ளோம்.

நெருங்கிய நண்பர்களால்தான் இணைந்து நடிக்க முடியும் என்றார் கார்த்தி.

கார்த்தியும் விஷாலும் என் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு நன்றி. இப்படம் வன்முறையையும் அஹிம்சையையும் என இரண்டையும் சொல்லும் என்றார் பிரபுதேவா.

சிம்ரனுக்கு பிறகு நல்ல நடனம் தெரிந்த நடிகை தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளார்.

டபுள் ஹீரோ சப்ஜெக்டுக்காக நிறைய நாட்கள் காத்திருந்தேன். இந்த படத்தில் இரண்டு ஹீரோக்கள் கேரக்டரும் ஒரே லெவலில் இருக்கும்.

நானும் கார்த்தியும் ஒப்புக் கொண்டபடி, நடிகர் சங்கத்திற்கு ரூ. 10 கோடி கொடுப்போம்.

இப்போது திரையுலகில் எனக்கு நிறைய பொறுப்புகள் வந்துள்ளது என்றார் விஷால்.

தன்னை இப்படத்தின் நாயகியாக தேர்ந்தெடுத்தற்கு நன்றி சொன்னார் சாயிஷா.

Karuppu raja vellai raja movie news updates

krvr

More Articles
Follows