உடல் தானம் செய்த ‘கயல்’ தேவராஜை பாராட்டிய கமல்

உடல் தானம் செய்த ‘கயல்’ தேவராஜை பாராட்டிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan praises Kayal Devaraj for donating his eyes and bodyநடிகரும் பத்திரிகையாளருமான ‘கயல்’ தேவராஜ் தனது 50 வது பிறந்த நாளையொட்டி உடல் தானம் செய்துள்ளார். அவருக்கு நடிகர் கமல்ஹாஸன் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக உடல் தானம் செய்தவர் நடிகர் கமல்ஹாசன். தன்னைப் போலவே கண் தானம் மற்றும் உடல் தானம் செய்பவர்களை வாழ்த்தியும், ஊக்குவித்தும் வருகிறார்.

நடிகரும் மூத்த பத்திரிகையாளருமான ‘கயல்’ தேவராஜ் தனது 50 வது பிறந்தநாளை முன்னிட்டு உடல் தானம் செய்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குநர் அமீர் நடிப்பில் வெளியான ‘யோகி’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று (ஜூன் 18) தனது 50 வது பிறந்தநாள் கொண்டாடும் தேவராஜ், தனது உடல் மற்றும் கண்களை தானம் செய்துள்ளார்.

Kamalhassan praises Kayal Devaraj for donating his eyes and body

Kayal Devaraj Stills 006

அரசியல் களத்தில் ரஜினி-விஜய்; பெருகும் ஆதரவு.

அரசியல் களத்தில் ரஜினி-விஜய்; பெருகும் ஆதரவு.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and vijay2.0 மற்றும் காலா படங்களில் பிஸியாக இருப்பதால் தன் அரசியல் பணியை தன் பிறந்தநாளில் (டிசம்பர் 12) ரஜினி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதே போல அவ்வப்போது அரசியல் விசயத்தில் விஜய்யின் பெயரும் சேர்க்கப்பட்டு வருகிறது.

விஜய்யும் தன் அரசியல் பற்றிய அறிவிப்பை தன் பிறந்தநாளான ஜீன் 22 ல் வெளியிடலாம் என ரசிகர்களால் பேசப்படுகிறது.

இவர்கள் இருவருக்கும் தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் வட்டம் உள்ள நிலையில் இருவரும் இணைந்தால் என்ன? என் ரசிகர்கள் பேசி வருகிறார்களாம்.

இதற்கு ரசிகர்கள் ஆதரவு பெருகி வருகிறதாம்.

இருவரும் மௌனம் கலைத்தால் மட்டுமே இவர்களின் அரசியல் களம் உண்மையா? பொய்யா என்பது தெரியும்.

தனுஷ் இல்லாமல் வடசென்னையை வட்டமிடும் வெற்றிமாறன்

தனுஷ் இல்லாமல் வடசென்னையை வட்டமிடும் வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and vetrimaaranதனுஷ் தயாரித்து நடிக்கும் வடசென்னை படத்தை மூன்று பாகங்களாக இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

இதில் நடித்துக் கொண்டிருந்த தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க சென்று விட்டார்.

எனவே தனுஷ் இல்லாத காட்சிகளை படமாக்கி வருகிறாராம் வெற்றிமாறன்.

இதற்காக காசிமேடு உள்ளிட்ட வடசென்னை பகுதிகளை வட்டமிட்டு படம்பிடித்து வருகிறார்.

நேற்றைய சூட்டிங்கில் சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தில் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

கபாலி நாயகியின் ரகசிய திருமணம்

கபாலி நாயகியின் ரகசிய திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DCbyW3mVYAE_Rx-‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ராதிகா ஆப்தே.

தமிழ் தவிர மராத்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்

இந்நிலையில் லண்டனை சேர்ந்த பெனெடிட் டெய்லர் என்ற இசையமைப்பாளரைச் காதலித்து வந்தாராம் இவர்.

அந்த காதலரை ராதிகா ரகசியமாக பதிவுத் திருமணம் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

விவாகரத்து வழக்கு; விஜய் பட வில்லனை கண்டித்த நீதிபதி

விவாகரத்து வழக்கு; விஜய் பட வில்லனை கண்டித்த நீதிபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sudeep with his familyகன்னட சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் சுதீப்.

இவர் ராஜமவுலியின் நான் ஈ மற்றும் விஜய்யின் புலி ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.

கேஎஸ். ரவிக்குமார் இயக்கிய முடிஞ்சா இவன புடி என்ற நேரடி தமிழ் படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில், இவர் தனது மனைவி ப்ரியாவிடம் விவாகரத்து பெற முடிவு செய்து, பெங்களூர் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தனர்.

ஆனால் சில காலங்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துவிட்டனர்.

ஆனால் இவர்கள் அளித்த மனுவை இருவரும் கண்டுகொள்ளாமல் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனிடையில் இவ்வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் 9 முறை விசாரணைக்கு வந்துவிட்டதாம்.

இதனால் கடுப்பான நீதிபதி அடுத்த விசாரணைக்கு இருவரும் ஆஜராகவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்து இருக்கிறார்.

விரைவில் நீதிமன்றத்தில் ஆஜராகி விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவார் சுதீப் என்று கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்துக் கொண்டே ரஜினியை ஆதரிக்கும் செந்தில்

அதிமுகவில் இருந்துக் கொண்டே ரஜினியை ஆதரிக்கும் செந்தில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and senthilரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என சிலரும், அவர் வரவேண்டும். தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காமெடி நடிகரும் அதிமுக ஆதரவாளருமான செந்தில் ரஜினியின் அரசியல் வருகை பற்றி கூறுகையில்…

“தமிழக அரசியலில் இப்போதிருக்கும் நிலைமை தொடர்ந்து நீடித்தால் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார்.

ரஜினி அரசியலுக்கு வரட்டும். அதற்கு அவர் இந்தியர் என்ற ஒரு தகுதி போதும்” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக அணியில் இருந்துக் கொண்டே ரஜினியின் அரசியல் வருகைக்கு செந்தில் ஆதரவளித்து பேசியிருப்பது அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Articles
Follows