வைரலாகும் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட ஸ்டில்கள்

வைரலாகும் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட ஸ்டில்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

theeran adhigaram ondruதோழா, காஷ்மோரா ஆகிய படங்கள் கார்த்தியின் கேரியரில் மிகப் பெரிய பங்கை வகுத்த நிலையில் காற்று வெளியிடை படத்தில் ஒப்புக் கொண்டார்.

மணிரத்னம் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.

இதனையடுத்து தற்போது சதுரங்க வேட்டை பட இயக்குனர் இயக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து வருகிறார்.

‘சிறுத்தை’ படத்திற்கு பிறகு இதில் மீண்டும் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார்.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் நாயகியாக ராகுல் பிரித்தி சிங் நடித்து வருகிறார்.

ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இவை தற்போது வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கும் கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் விஷால், சாயிஷா உடன் நடிக்கவிருக்கிறார் கார்த்தி.

Karthi starring Theeran Adhigaram Ondru stills goes viral

முதன் முறையாக சிரஞ்சீவி ஜோடியாக ஐஸ்வர்யா ராய்

முதன் முறையாக சிரஞ்சீவி ஜோடியாக ஐஸ்வர்யா ராய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aishwarya Rai to romance Chiranjeevi in Uyyalawada Narasimha Reddyமுன்னாள் உலக அழகியும் பிரபல நடிகையுமா ஐஸ்வர்யா ராய், குழந்தை பெற்றபின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

தவிர்க்க முடியாத வேடங்களில் மட்டும் அவர் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார்.

இந்நிலையில் முதன் முறையாக தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உடன் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

’கைதி நம்பர் 150’ படத்திற்கு பிறகு சிரஞ்சீவி நடிக்க உள்ள ஒரு வரலாற்றுப் படத்தில்தான் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.

அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

”உய்யலவாடா நரசிம்ம ரெட்டி” என்ற சுதந்திர போராட்ட வீரரின் கதைதான் இப்படம் என தெரிய வந்துள்ளது.

Aishwarya Rai to romance Chiranjeevi in Uyyalawada Narasimha Reddy

‘பாகுபலி’ விஜயேந்திர பிரசாத்-லாரன்ஸ் கூட்டணியில் காஜல் அகர்வால்

‘பாகுபலி’ விஜயேந்திர பிரசாத்-லாரன்ஸ் கூட்டணியில் காஜல் அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrence to romance Kajal Aggarwal in his next‘மொட்ட சிவா கெட்ட சிவா’ மற்றும் ‘சிவலிங்கா ஆகிய படங்களை முடித்துவிட்டு தன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் லாரன்ஸ்.

இப்படத்தை பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் உதவி இயக்குனர் மகாதேவ் இயக்கவிருக்கிறாராம்.

இப்படத்திற்கு ‘பாகுபலி’ புகழ் கதை ஆசிரியரும் ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் கதை எழுதவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் நாயகியாக பிரபல நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Raghava Lawrence to romance Kajal Aggarwal in his next

சூப்பர் ஹிட்டான ‘100% லவ்’ ரீமேக்கில் ஜிவி பிரகாஷ்

சூப்பர் ஹிட்டான ‘100% லவ்’ ரீமேக்கில் ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash committed as Hero and Music Composer in 100 Love Tamil remakeபி.சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா நடித்து சூப்பர் ஹிட்டான தெலுங்கு படம் ‘100% லவ்’.

கடந்த 2011 ஆம் ஆண்டு இப்படம் வெளியானது.

இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பிய இயக்குனர் சுகுமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

இதன் நாயகனாகவும் இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

எம்.எம்.சந்திரமெளலி இயக்கவுள்ள இப்படத்திற்கு ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘தில்வாலே’, உள்ளிட்ட இந்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய டட்லி ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை லண்டனில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

நாயகி தேர்வானவுடன் மற்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

GV Prakash committed as Hero and Music Composer in 100% Love Tamil remake

GV Prakash with 100 love remake team

 

ஷங்கரின் 2.0 படத்தில் மீண்டும் ரஜினியுடன் ஐஸ்வர்யா ராய்

ஷங்கரின் 2.0 படத்தில் மீண்டும் ரஜினியுடன் ஐஸ்வர்யா ராய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aishwarya Rai to pair with Rajinikanth for 2pointOஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது.

இதில் நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.

இதன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் ஷங்கர் இயக்கத்தில் தற்போது உருவாகி வர, இதை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதில் ரஜினிகாந்துடன் அக்சய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் சில காட்சிகளில் மட்டும் தோன்ற உள்ளதாக சொல்லப்படுகிறது.

சில காட்சிகளில் போன் பேசுவது போலவும், க்ளோஸ் அப் ஷாட்டுக்களை மட்டும் வைக்கவுள்ளதாக தெரிகிறது.

முதல் பாகத்தில் நடித்த ஐஸ்வர்யாராய் இதில் இல்லாவிட்டால், அந்த பாகத்தின் தொடர்ச்சி இல்லாமல் போய்விடும் என்பதால் இந்த ஏற்பாடாம்.

Aishwarya Rai to pair with Rajinikanth for 2pointO

சாமி 2 படத்தில் இரண்டு விக்ரம் கேரக்டர்கள் என்ன.?

சாமி 2 படத்தில் இரண்டு விக்ரம் கேரக்டர்கள் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chiyaan Vikram plays dual role in Saamy 2ஹரி இயக்கத்தில் உருவான சாமி படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, நாயகன் விக்ரமின் மார்கெட்டை உயர்த்தியது.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம்.

கைவசம் உள்ள துருவ நட்சத்திரம் மற்றும் ஸ்கெட்ச் ஆகிய படங்களை முடித்துவிட்டு சாமி 2 படத்தில் நடிக்கிறார்.

ஹரி இயக்கவுள்ள இப்படத்தின் அவரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘இருமுகன்’ படத்தை தயாரித்த ‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஷிபு தமீன் இப்படத்தை தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இதன் முதல் பாகத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா மட்டுமே இருந்தார்.

தற்போது விக்ரமுடன் டூயட் பாட மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இதற்காக மற்றொரு விக்ரம் கேரக்டரை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் கேரக்டரான ஆறுச்சாமி பதவி உயர்வு பெறுவதாகவும், அடுத்த விக்ரம் மற்றொரு போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Chiyaan Vikram plays dual role in Saamy 2

More Articles
Follows