‘விஸ்வரூபம் 2 படத்திற்கு பிரச்சினை வராது என நம்புகிறேன்.’- கமல்

‘விஸ்வரூபம் 2 படத்திற்கு பிரச்சினை வராது என நம்புகிறேன்.’- கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan talks about Vishwaroopam 2 release issuesகமல்ஹாசன் இயக்கி தயாரித்து நடித்த படங்களில் ஒன்று ‘விஸ்வரூபம்’.

கடந்த 2013ஆம் ஆண்டில் வெளியான படம் இஸ்லாமியர்களை அவமதிப்பதாக கூறி பல சர்ச்சைகளை உண்டாக்கியது.

தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் இப்படம் வெளியானது.

இப்படத்தின் பிரச்சினையின்போதுதான் கமல், நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன் என தெரிவித்து இருந்தார்.

இதனால் கமலுக்கு ஆதரவாக பலரும் களம் இறங்க, பின்னர் சில காட்சிகளை வெட்டிவிட்டு இப்படத்தின் தடையை நீக்கியது ஜெயலலிதா தலைமையிலான அரசு.

இந்நிலையில் கமலின் சமீபத்திய பேட்டியில் இப்படம் தொடர்பாக தான் பட்ட கஷ்டங்கள் பற்றி கூறியுள்ளதாவது….

“விஸ்வரூபம்’ பட தடைக்கு முக்கிய காரணம் அப்போதைய அரசுதான்.

இந்த தடையால் எனது நிதிநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

எனது சொத்துகள் அனைத்தையும் அடகு வைத்தேன். அவமானத்துக்குள்ளானேன்.

ஆனால், ஊழலில் திளைத்திருக்கும் இந்த தேசத்தில் எனக்கு நேர்ந்தது போன்ற சம்பவங்கள் எளிதில் மறக்கடிக்கப்பட்டுவிடும்.

எப்போதுமே வரி ஏய்ப்பு செய்திராத நான் விஸ்வரூப பிரச்சினையால் ரூ.60 கோடியை இழந்தேன்.

‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு எந்த பிரச்சினையும் வராது என நம்புகிறேன். இருந்தாலும்.. எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது.” என்று தெரிவித்துள்ளார் கமல்.

Kamalhassan talks about Vishwaroopam 2 release issues

சூர்யாவை தொடர்ந்து கார்த்தி-தனுஷ் படங்களை இயக்கும் செல்வராகவன்

சூர்யாவை தொடர்ந்து கார்த்தி-தனுஷ் படங்களை இயக்கும் செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Selvaraghavan will direct Aayirathil Oruvan and Pudupettai sequels soonஎஸ்ஜே சூர்யா நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை இயக்கியுள்ளார் செல்வராகவன்.

இதனையடுத்து சந்தானம் நடிக்கும் ‘மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் சூட்டிங்குங்காக விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளனர்.

இப்படத்தை முடித்துவிட்டு சூர்யா நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்களின் 2ஆம் பாகம் குறித்து செல்வராகவன் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு படங்களின் 2ஆம் பாகத்தை இயக்க ஆசையுள்ளது. அதற்கான கதையை கூட எழுதிவிட்டேன்.

ஆனால் இப்போது அந்த படங்களை எடுக்க நேரமில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

ஒருவேளை சூர்யா படத்தை முடித்துவிட்டு, கார்த்தி (ஆயிரத்தில் ஒருவன்) மற்றும் தனுஷ் (புதுப்பேட்டை) படங்களை இயக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

Selvaraghavan will direct Aayirathil Oruvan and Pudupettai sequels soon

சிம்புவுடன் முன்பே இணைந்தவர் ‘அஅஅ’ படத்தில் 3வது நாயகியானார்

சிம்புவுடன் முன்பே இணைந்தவர் ‘அஅஅ’ படத்தில் 3வது நாயகியானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu sana khanசிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

யுவன் இசையமைக்க, மைக்கேல் ராயப்பன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இதில் ‘மதுரை மைக்கேல்’, ‘அஸ்வின் தாத்தா’ உள்ளிட்ட 4 கேரக்டர்களில் நடிக்கிறார் சிம்பு.

இதில் ‘மதுரை மைக்கேல்’ கேரக்டருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.

‘அஸ்வின் தாத்தா’ கேரக்டருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

இந்நிலையில், 3வது கேரக்டருக்கு ஜோடியாக சனாகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் கேங்க்ஸ்டர் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் இதற்கு முன்பே ‘சிலம்பாட்டம்’ படத்தில் இணைந்து நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Sana Khan teams up again with Simbu for AAA movie

ரஜினியை மலாக்கா தூதராக்க மலேசிய அரசு முயற்சி

ரஜினியை மலாக்கா தூதராக்க மலேசிய அரசு முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini to replace ShahRukh as Malaysia Malacca tourism ambassadorரஜினிகாந்த் நடித்த கபாலி படம் 90% மலேசியாவிலேயே படமானது.

மேலும் இப்படத்தின் சூட்டிங் அங்கு நடைப்பெற்ற போது, வரலாறு காணாத வகையில் ரஜினிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து படமும் அங்கு மாபெரும் வசூலை அள்ளியது.

இதன் விளைவாக தற்போது, ரஜினியை அங்குள்ள மலாக்கா நகரின் தூதராக்க மலேசிய அரசின் சுற்றுலாதுறை முடிவு செய்துள்ளதாம்.

இது தொடர்பான கடிதத்தை ரஜினிக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு ரஜினி ஒப்புக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போது இந்தி நடிகர் ஷாரூக்கான், மலாக்கா நகரின் தூதராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini to replace ShahRukh as Malaysia Malacca tourism ambassador

‘நான் ஒதுங்கல; பதுங்குறேன்; பாயப் போறேன்..’ டிஆர் அதிரடி

‘நான் ஒதுங்கல; பதுங்குறேன்; பாயப் போறேன்..’ டிஆர் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TRதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் சங்கத் தேர்தல் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்தார் டி.ராஜேந்தர்.

“தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் இருந்து டி ஆர் ஒதுங்கி விட்டதாக நினைக்கிறார்கள்.

நான் ஒதுங்கவில்லை. பதுங்கி இருக்கிறேன்.

புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான்.

என் மகன் சிம்பு நடித்த வாலு படத்தின் வெளியீட்டின் போது பல பிரச்சினைகளை சந்தித்தது.

அப்படம் வெளியீட்டிற்கு தாமதம் ஆக, தயாரிப்பாளர்கள் சங்கம்தான் காரணம்.

தயாரிப்பாளர் சங்கம், என்னை கடன் வாங்க வைத்தது.

அந்த பணத்தை சன் நிறுவனத்திடமிருந்து விரைவில் வாங்கி தருவதாக வாக்குறுதியளித்தார்கள்.

ஆனால் ஒரு வருடம் ஆகியும் அந்த பணத்தை பெற்று தர தயாரிப்பாளர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்படிப்பட்ட சங்கம் எப்படி தயாரிப்பாளர்களின் தலையெழுத்தை மாற்றும்.

ஒரு தாடியை தோற்கடிக்க எத்தனை கோடி? என்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர்கள் சங்கம் மீது கூறினார் டி ராஜேந்தர்.

விஷாலே எத்தனை முறை அடிக்கல் நாட்டுவீங்க? ரஜினி-கமலுக்கு தெரியுமா?

விஷாலே எத்தனை முறை அடிக்கல் நாட்டுவீங்க? ரஜினி-கமலுக்கு தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal-வருகிற ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் விஷால் அணி, ராதாகிருஷ்ணன் அணி உள்ளிட்ட அணிகள் போட்டி போடுகின்றன.

இதில் ராதாகிருஷ்ணன் தலைமையிலான முன்னேற்ற அணி பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர்கள் கலைப்புலிகள் தாணு மற்றும் ஜி.சேகரன், டி.சிவா, சுரேஷ் காமாட்சி, சிவசக்தி பாண்டியன், கே. ராஜன், ஜே.கே. ரித்தீஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ் பேசும்போது, விஷாலை சாடினார்.

இதுநாள் வரை நடிகர் சங்க கட்டிடம் பற்றி வாய் திறக்காத விஷால், தற்போது அரசு அனுமதி கிடைத்துள்ளதாகவும், உடனே அடிக்கல் நாட்டு விழா நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு, மார்ச் 5ஆம் தேதி எனக்கும் நாசருக்கும் பிறந்தநாள்.

அன்றைய தினம் அவர் அடிக்கல் நாட்டினார்.

தற்போது மறுபடியும் அடிக்கல் நாட்டு விழா என்கிறார். ஒரு கட்டிடத்திற்கு எத்தனை முறை அடிக்கல் செய்வீர்கள்.?

இப்போது அழைப்பிதழ் அச்சிடப்பட்டு விழா நடக்க உள்ளது.

இது தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை குறிவைத்தே விஷால் இப்படி செய்கின்றார்.” என்று பேசினார்.

இந்த விழாவில் ரஜினி-கமல் கலந்துக் கொள்ளக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது உண்மையானால், இது ரஜினி-கமல் போன்ற நடிகர்களுக்கு தெரியாதா?

Actor JK Rithesh slams Vishal in Nadigar Sangam Building issue

 

 

More Articles
Follows