கமலின் *விஸ்வரூபம் 2* படத்துக்கு தடையாக வந்த மர்மயோகி

marmayogi kamalகமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸாகிறது.

கமல் படங்கள் என்றாலே இறுதிக்கட்டத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை வரும். இதுநாள் வரை இப்படத்திற்கு வராத பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இப்படத்திற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரமீட் சாய் மீரா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில்…

மர்மயோகி படத்தில் கமல் நடிக்க ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. படம் உருவாகவே இல்லை. மேலும் வாங்கிய சம்பளத்தையும் கமல் திருப்பித் தரவில்லை.

எனவே வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடியை கமல் திருப்பி தர வேண்டும், அதுவரை விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட இருக்கிறது. எனவே விஸ்வரூபம் 2 படத்தின் ரிலீசில் பிரச்சினை உருவாகும் எனத் தெரிகிறது.

Overall Rating : Not available

Related News

கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்த விஸ்வரூபம்…
...Read More
நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியல்வாதியாக மாறிவிட்டார்.…
...Read More
கமல்ஹாசன் தன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்…
...Read More
கமல்ஹாசன் தயாரித்து நடித்து இயக்கியுள்ள படம்…
...Read More

Latest Post