விஸ்வரூபம்-3 எப்போது..? நடிப்புக்கு முழுக்கா.? கமல் பேட்டி

விஸ்வரூபம்-3 எப்போது..? நடிப்புக்கு முழுக்கா.? கமல் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kamalhassan talks about Viswaroopam 3கமல் தயாரித்து இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் ஆக., 10ல் வெளியாகிறது.

இப்படத்தின் புரேமோசன் பணிகளில் கமல் கலந்துக் கொண்டு வருகிறார்.

இப்படம் குறித்து கமல் கூறியதாவது…

விஸ்வரூபம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த விஸ்வரூபம் 2 படம் இருக்கும்.

நான் அரசியலுக்கு வரும் முன்பே இந்த படத்தை எடுத்து முடித்து விட்டேன்.

படத்தில் அரசியல் கருத்து எதுவும் திணிக்கவில்லை. எனவே எதிர்ப்பு இருக்காது என நம்புகிறேன்.

அப்படி வந்தால் அது தமிழக அரசியல்வாதிகளின் கெட்டிக்காரத்தனமாக இருக்காது.

இப்படத்தின் வெற்றி ரசிகர்களின் மனநிலையை பொறுத்து 3-ம் பாகம் வரலாம்.

என் தொழில் வேறு; அரசியல் வேறு. நான் வசதியாக இருக்கிறேன். நான் திருட மாட்டேன். அதை தான் மக்களும் நம்புகிறார்கள்.

எம்.எல்.ஏ., சீட் வந்தால் கூட நான் நடிப்பதை நிறுத்த வேண்டும். எம்.எல்.ஏ., ஆகி கூட எம்ஜிஆர் நடித்துள்ளார்.

என் அரசியல் பணிகளுக்கு இடைஞ்சலாக இருக்கும் போது பட்சத்தில் படத்தில் நடிப்பதை நிறுத்தி விடுவேன்.

சபாஷ் நாயுடு படம் 40 சதவீதம் முடிந்துள்ளது.” இவ்வாறு கமல் பேசினார்.

Actor Kamalhassan talks about Viswaroopam 3

விஸ்வரூபத்திற்கு விட்டுக் கொடுக்கும் கோலமாவு கோகிலா

விஸ்வரூபத்திற்கு விட்டுக் கொடுக்கும் கோலமாவு கோகிலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

coco vishwaroopam 2நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் படம் ‘கோலமாவு கோகிலா’.

‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ தயாரித்திருக்கும் இந்த படத்தில் நயன்தாராவுடன் யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்க, அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தை ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முதலில் முடிவு செய்திருந்தனர்.

ஆனால் இப்போது ‘கோலமாவு கோகிலா’வின் ரிலீஸை ஒரு வாரம் தள்ளி வைத்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 17-ஆம் தேதி வெளியாகும் என்ற புதிய தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

கமலின் ‘விஸ்வரூபம்-2’ ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

*கொலைகாரன்* முதற்கட்ட சூட்டிங்கை முடித்த விஜய் ஆண்டனி

*கொலைகாரன்* முதற்கட்ட சூட்டிங்கை முடித்த விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kolaigaranகணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் இசை விழா & படம் விரைவில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம் மற்றொரு புறம் விஜய் ஆண்டனி நடித்துள்ள ’கொலைகாரன்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகளும் நடந்து வருகிறது.

ஆன்ட்ரியு லூயிஸ் இயக்கும் இந்த படத்தில் அர்ஜுன் வில்லனாக நடிக்க,. ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.

வழக்கம் போல விஜய் ஆண்டனியே இப்படத்திற்கும் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி, அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

இப்போது அந்த முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது.

‘தியா மூவீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் பி.பிரதீப் தயாரிக்கும் இந்த படத்திற்கு முகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

கலை இயக்கத்தை வினோத் ராஜ்குமார் கவனிக்கிறார். ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்கிறார்.

ஆடு-மாடு நாங்க பாத்துக்குறோம்..; பீட்டா மீது பாண்டிராஜ் பாய்ச்சல்

ஆடு-மாடு நாங்க பாத்துக்குறோம்..; பீட்டா மீது பாண்டிராஜ் பாய்ச்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pandirajகடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் சூர்யா , நடிகர் கார்த்தி , 2D ராஜ் சேகர் பாண்டியன் , நடிகர்கள் சத்யராஜ் , பொன்வண்ணன் , சரவணன் , சூரி , மாரிமுத்து , இளவரசு , ஸ்ரீமண் , மனோஜ் குமார் , நாயகி சயீஷா , பிரியா பவானி ஷங்கர் , அர்த்தனா பினு , பானு ப்ரியா , மௌனிகா , ஜீவிதா , இந்துமதி , கலை இயக்குனர் வீர சமர் , எடிட்டர் ரூபன் , இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட படக்குழுவுவினர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசியது :-

படத்தின் துவக்கத்தில் கார்த்தி சார் என்னுடைய கதாபாத்திரத்துக்கு சரியாக இருப்பாரா என்ற பயம் இருந்துகொண்டே இருந்தது.

அவருடன் பயன் செய்ய ஆரம்பித்ததும் எல்லாம் சரியாக இருந்தது. யாரோ நான் நடிகர்களோடு கோபமாக இருப்பேன் என்ற புரளியை கிளப்பியுல்லார்கள்.

அது சுத்த பொய். படத்தில் இடம்பெற்ற ரேக்ளா ரேசை ரசிகர்கள் அனைவரும் ரசித்து கொண்டாடுகிறார்கள். அதை படத்தில் கொண்டுவர நானும் ராஜா சாரும் மிகவும் சிரமப்பட்டோம் என்பது தான் உண்மை.

பீட்டாவை சேர்ந்தவர்கள் படத்தை பார்த்துவிட்டு 1 நிமிடத்தை நீக்கிவிட்டார்கள்.

எங்கள் ஆடு , மாடுகளை நாங்கள் அண்ணன் , தம்பியாக பார்த்து வருகிறோம். நானும் ஆடு , மாடு மேய்த்து வந்தவன் தான்.

எங்களை விட சிறப்பாக அவர்களை யாராலும் பார்க்க முடியாது. உங்களால் ஆட்டை அல்லது மாட்டை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓட்டி கூட்டி செல்ல முடியுமா ? கண்டிப்பாக முடியாது ?

அப்படி உங்களுக்கு என்ன அக்கரை எங்களுக்கு இல்லாதது ? நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் எங்கள் ஆடுமாடுகளை. நீங்கள் யாரும் கவலை பட வேண்டாம்.

ஒரு கல்யாணவீட்டுக்கு சென்றால் கூட நாங்கள் மாடு சாப்டாம இருக்குமே , தண்ணி வைக்கனுமே என்று ஓடி வருவோம் அவர்களை கவனிக்க ? மட்டன் , சிக்கன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு இது எப்படி தெரியும்”

நல்ல படம் ஓடும் தியேட்டரில் மல்லி பூ வாசம் வீசும்..: கார்த்தி பெருமிதம்

நல்ல படம் ஓடும் தியேட்டரில் மல்லி பூ வாசம் வீசும்..: கார்த்தி பெருமிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthiகடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் சூர்யா , நடிகர் கார்த்தி , 2D ராஜ் சேகர் பாண்டியன் , நடிகர்கள் சத்யராஜ் , பொன்வண்ணன் , சரவணன் , சூரி , மாரிமுத்து , இளவரசு , ஸ்ரீமண் , மனோஜ் குமார் , நாயகி சயீஷா , பிரியா பவானி ஷங்கர் , அர்த்தனா பினு , பானு ப்ரியா , மௌனிகா , ஜீவிதா , இந்துமதி , கலை இயக்குனர் வீர சமர் , எடிட்டர் ரூபன் , இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட படக்குழுவுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் கார்த்தி பேசியது..

நிறைய பேர் நல்ல படம் ஜெயப்பதில்லை என்று சொல்கிறார்கள் ஆனால் அது பொய். நிஜமாகவே நல்ல படம் எடுத்தால் அது கண்டிப்பாக ஓடும்.

திரையரங்கில் மல்லி பூ வாசம் மற்றும் குழந்தைகள் அழும் சத்தம் கேட்கிறது என்று சொல்லும் போது படத்துக்கு அனைவரும் குடும்பத்தோடு வருகிறார்கள் என்று தெரிகிறது.

நாங்கள் ஸ்டாப் என்ற அமைப்பை தற்போது உருவாக்கியுள்ளோம்.

இதன் மூலம் வைட் சுகரை எப்படி நிறுத்துவது , நாம் கம்மியாக உபயோகிக்கும் மஞ்சளை எப்படி நமது தினசரி வாழ்கையில் எடுத்து வருவது என்பதை பற்றி ( தினமும் நாம் உண்ணும் உணவில் மஞ்சள் சேர்த்தால் கேன்சர் வராது ), எப்படி நாம் தினமும் உண்ணும் காய்கறிகளிலிருந்து என்னை எடுத்து உபயோகிப்பது மற்றும் தானியங்களின் முக்கியத்துவும் பற்றி இந்த அமைப்பு மக்களிடம் கொண்டுசேர்க்கும் என்றார் கார்த்தி.

விவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி; 5 விவசாயிகளுக்கு 10 லட்சம்; சூர்யா வழங்கினார்!

விவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி; 5 விவசாயிகளுக்கு 10 லட்சம்; சூர்யா வழங்கினார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaகடைக்குட்டி சிங்கம் பட வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் சூர்யா , நடிகர் கார்த்தி, 2D ராஜ் சேகர் பாண்டியன் , நடிகர்கள் சத்யராஜ் , பொன்வண்ணன் , சரவணன், சூரி, மாரிமுத்து, இளவரசு, ஸ்ரீமன், மனோஜ் குமார், நாயகி சயீஷா , பிரியா பவானி ஷங்கர் , அர்த்தனா பினு , பானு ப்ரியா , மௌனிகா , ஜீவிதா , இந்துமதி , கலை இயக்குனர் வீர சமர் , எடிட்டர் ரூபன் , இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட படக்குழுவுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் சூர்யா பேசியது…:-

“ எல்லா புகழும் இறைவனுக்கே “ இயக்குநர் பாண்டிராஜை தவிர இப்படத்தை யாராலும் சிறப்பாக எடுத்து வெற்றி படமாக இதை கொடுத்திருக்க முடியாது.

பிளாக் பஸ்டர் மேடையை நான் பார்த்ததே வெகுநாளாகிவிட்டது.

இந்த மேடையில் நின்று பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த படம் சினிமாவின் மூலம் கண்டிப்பாக நல்ல செய்திகள் பலவற்றை சொல்ல முடியும் என்று நிருபித்துள்ளது.

இங்கே நமது தமிழ் நாட்டில் நிறைய டாக்டர்கள், என்ஜினியர்கள் என்று பலர் உள்ளனர்.

ஆனால் ஒரு விவசாயியை கொண்டு வருவது கடினமான ஓர் விஷயமாக உள்ளது.

இந்த படம் வெற்றி பெற்றதுக்கு முக்கியமான காரணம் ஒருவர் மீது இன்னொருவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் அன்பு தான்.

எங்களை விட அதிகமாக வேர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான். அதனால் தான் ரூபாய் ஒரு கோடியை அவர்களுக்கு வழங்கியுள்ளோம்.

எல்லோரும் கமர்ஷியலாக படமெடுக்கட்டும் ஆனால் நாங்கள் 2டி மூலம் மக்களுக்கு கருத்து சொல்லும் value based entertainment படங்களை தான் எடுப்போம்” என்றார் சூர்யா.

More Articles
Follows