என் ரசிகர்கள் புத்திசாலிகள்; அவர்களை ஏமாத்த முடியாது… : கமல்

kamal haasanகமல்ஹாசன் தன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்து நடித்துள்ள படம் விஸ்வரூபம் 2.

இப்படத்தை ஆஸ்கர் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

இது தொடர்பான புரோமோசன் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார் கமல்ஹாசன்.

அப்போது அவர் அளித்து பேட்டியில் கூறியதாவது…

’சில வருடங்களுக்கு முன் நேபாள நடிகர்களை நடிக்க வைத்து விட்டு சீனர்கள் என சொன்னால் நம்பிவிடுவார்கள் ஆனால் இப்போது அப்படி இல்லை.

தஜிகிஸ்தானில் சூட்டிங் நடத்தியபோது ஒரு பிளாக் ஹாக் வகை ஹெலிகாப்டர்கள் தேவைப்பட்டது. எனவே ஒரிஜினலாக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தினோம்.

வேறு வகையான ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தினால் என் புத்திசாலியான ரசிகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.” என்றார்.

மேலும் நாட்டை விட்டு ஓட தயாரானவன் இன்று நாட்டை காப்பாற்ற போகிறானா என சிலர் கிண்டல் செய்கிறார்கள்.

ஆனால் நான் நாட்டை விட்டுப் போகிறேன் எனச் சொன்னது என்னுடைய பணியை செய்ய விடாமல் தடுத்ததற்காகத் தான. மற்றபடி நான் பயந்து போய் அப்படி சொல்லவில்லை’ எனவும் கூறினார் கமல்.

Overall Rating : Not available

Related News

கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்த விஸ்வரூபம்…
...Read More
கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2…
...Read More
கமல்ஹாசன் தயாரித்து நடித்து இயக்கியுள்ள படம்…
...Read More
கமல் தயாரித்து இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம்…
...Read More

Latest Post