தேசிய கொடியுடன் வெளியானது விஸ்வரூபம் 2 பர்ஸ்ட் லுக்

தேசிய கொடியுடன் வெளியானது விஸ்வரூபம் 2 பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan released Vishwaroopam 2 first lookகமல்ஹாசன் தன் சொந்த பேனரில் தயாரித்து நடித்து இயக்கியுள்ள படம் விஸ்வரூபம்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஸ்வரூபம் 2 தயாரானது.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தார் கமல்.

அதன்படி சற்றுமுன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கமல்ஹாசன் நின்று கொண்டு தேசிய கொடியை தன் மேல் படர விட்டுள்ளளார்.

Kamalhassan released Vishwaroopam 2 first look

 

 

‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ இசை விழா ஹைலைட்ஸ்

‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ இசை விழா ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yenda Thalaila Yenna Vaikala movie Audio Launch High lights

ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல

இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஏ.ஆர். ரெஹானா ‘யோகி & பார்ட்னர்ஸ்’ சார்பில் தயாரித்து, இசையமைத்துள்ள படம் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’.

அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், புதுமுகம் அசார், சஞ்சிதா ஷெட்டி மற்றும் யோகிபாபு நடித்திருக்கும் இந்த படத்தின் இசை சென்னையில் வெளியிடப்பட்டது.

இயக்குனர் பாக்யராஜ் இசையை வெளியிட இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி பெற்றுக் கொண்டார்.

நான் டொரோண்டோ போனபோது எனக்கு கிடைத்த அறிமுகம் தான் சுபா மேடம். ஒரு படம் தயாரிக்கணும், டைரக்டர் தேர்வு செய்ய சொன்னார். அப்படி உருவான படம் தான் ‘ஏண்டா தலைல எண்ண வெக்கல’.

இந்த வெயில் சீசன்ல எல்லா வீட்லயும் கேக்குற ஒரு கேள்வி ‘ஏண்டா தலைல எண்ண வெக்கல’. எல்லோரும் தலைக்கு எண்ண வெச்சிட்டு போங்க, உடம்புக்கு நல்லது என்றார் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா.

கலா மாஸ்டரிடம் 3 ஆண்டுகள் டான்ஸ் கற்றுக் கொண்டவன் நான். இன்னும் டான்ஸில் நிரூபிக்கவில்லை, இனி தான் என் ஆட்டம் இருக்கப் போகுது. கஷ்டப்பட்டு படம் தயாரிக்கிறவன் ஒருவன், ஆனா அதை கேபிள் டிவி, பஸ் என எல்லாவற்றிலும் முதல் நாளே திருட்டுத்தனமாக ஒளிபரப்புகிறார்கள்.

இனி அதை ராணுவ கட்டுப்பாட்டோடு ஒடுக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம். மத்திய அரசின் உதவியோடு திருட்டு இணைய தளங்களையும் முடக்க போகிறோம்.

சினிமாவுக்கு சில விதிவிலக்குகள் வேண்டும், சினிமாவில் விலங்குகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். விலங்குகளை நாங்கள் யாரும் துன்புறுத்தப் போவதில்லை என்றார் நடிகர் மன்சூர் அலிகான்.

நான் சிங்கப்பூர் சென்றிருந்தபோது ஒரு நாடகம் பார்த்தேன். நம்ம ஊரில் கூட அந்த மாதிரி சென்சிட்டிவான நாடகங்களை நடத்த முடியாது. திறமை இருப்பவர்கள் எங்கிருந்தாலும் வரவேற்கப்பட வேண்டியவர்கள். படத்தின் நாயகன் அசார் நல்ல இடத்துக்கு நிச்சயம் வருவார்.

தமிழ் சினிமாவில் இருக்கும் பிரச்சினைகள் ஓய்ந்து நல்ல எல்லா தயாரிப்பாளர்களும் படம் தயாரிக்க ஏற்ற நல்ல சூழ்நிலை கூடிய விரைவில் வரும் என்றார் இயக்குனர் பாக்யராஜ்.

“தலைக்கு எண்ணெய் வைக்காததால், கதாநாயகன் ஒரு பிரச்சனையில் மாட்டி கொள்கிறார். என்ன அந்த பிரச்சனை? அதில் இருந்து எப்படி கதாநாயகன் தப்பிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள் அனைத்துமே தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத புதுமையான காட்சிகள். இருக்கும். ரெஹானா மேடம் உண்மையை முகத்துக்கு நேரே பேசக்கூடியவர். எனக்கும், ரெஹானா மேடத்துக்கும் இடையில் எப்போதும் சண்டை வந்து கொண்டே இருக்கும்.

சஞ்சிதா ஷெட்டி தான் ஒரு சீனியர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் நடித்துக் மன்சூர் அலிகான் மனதளவில் ஒரு குழந்தை என்றார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

விழாவில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி, தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி, டான்ஸ் மாஸ்டர் கலா, சிங்கப்பூர் தீபன், எடிட்டர் சி.எஸ்.பிரேம், நாயகன் அசார், நாயகி சஞ்சிதா ஷெட்டி, ஒளிப்பதிவாளர் வம்சிதரன், நடிகர் ஜெயராமின் மனைவி பார்வதி ஜெயராமன், ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

Yenda Thalaila Yenna Vaikala movie Audio Launch High lights

Yenda Thalaila Yenna Vaikala movie Audio Launch High lights

நடிகர் சூர்யா-இயக்குநர் ரஞ்சித் இணைவது எப்போது.?

நடிகர் சூர்யா-இயக்குநர் ரஞ்சித் இணைவது எப்போது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya and Pa Ranjith combo project updatesகார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கவிருந்த படத்தை இயக்குவார் ரஞ்சித் என கூறப்பட்டது.

இதற்காக இரண்டு கதைகளை தயார் நிலையில் வைத்திருந்தார் ரஞ்சித்.

ஆனால் அதற்குள் ரஜினிகாந்த்தை கபாலி படத்திற்காக இயக்கும் வாய்ப்பை பெற்றார் ரஞ்சித்.

எனவே விக்னேஷ் சிவனின் தானா சேர்ந்த கூட்டம், செல்வராகவன் படம் ஆகிய படங்களில் கமிட் ஆனார் சூர்யா.
தற்போது, மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்றார் ரஞ்சித்.

எனவே, ரஜினி படத்தை முடித்து ரஞ்சித்தும், செல்வராகவன் படத்தை முடித்துவிட்டு சூர்யாவும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suriya and Pa Ranjith combo project updates

விஸ்வரூபம்2 பர்ஸ்ட் லுக் இன்று வெளியாக பின்லேடன் காரணமா.?

விஸ்வரூபம்2 பர்ஸ்ட் லுக் இன்று வெளியாக பின்லேடன் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

BinLadenவிஸ்வரூபம் 2 படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று இரவு 7 மணிக்கு வெளியிட உள்ளதாக கமல்ஹாசன் ட்விட்டர் தெரிவித்திருந்தார்.

இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இதை வரவேற்று டிரெண்டாக்க ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில் இந்த பர்ஸ்ட் லுக்கை கமல் இன்று வெளியிட காரணம் பின்லேடன் என இணையங்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதாவது, உலகையே மிரட்டிய பயங்கரவாதி பின்லேடன் இறந்த தினம் இன்று (2011ஆம் ஆண்டு மே 2) என்று குறிப்பிட்டுள்ளனர்.

Vishwaroopam 2 first look release date connect with Bin Laden

KamalHaasan Forever‏ @KamalismForever 10m10 minutes ago
Did you know ? #Vishwaroopam2 / #Viswaroop2 #Firstlook #Poster Release Today 7 Pm !

binladen death viswaroopam 2

மூன்றுமுகம்-அபூர்வ சகோதரர்கள் பட காப்பியா விஜய்-61

மூன்றுமுகம்-அபூர்வ சகோதரர்கள் பட காப்பியா விஜய்-61

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay 61அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் மற்றும் மூன்றுமுகம் படத்தில் ரஜினி ஆகியோர் 3 வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த படங்கள் வேறுவேறு கால கட்டங்களில் வெளியாகியிருந்தாலும், ஒரு தந்தை இரண்டு மகன்கள் வேடங்களை அவர்கள் ஏற்றிருந்தனர்.

மேலும் இரண்டு படத்திலும் தந்தையை கொன்றவர்களை இரு மகன்களும் பழிவாங்குவதாக காட்சியமைப்புகள் இருந்தன.

தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் கதையும் இதுபோன்றே உருவாக்கப்பட்டு வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் இந்த கதையை இந்த காலத்துக்கேற்ற வகையில் மிகவும் ஸ்டைலிஷ்ஷாகவும், சமூக சார்ந்த செய்திடனும் அட்லி உருவாக்கி வருகிறாராம்.

‘விஸ்வரூபம் 2’ பர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிடுகிறார் கமல்

‘விஸ்வரூபம் 2’ பர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிடுகிறார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishwaroopam 2 first look will be released by Kamalhassan on 2nd May 2017கமல்ஹாசன் இயக்கி தயாரித்து நடித்த படம் விஸ்வரூபம்.

கடந்த 2013ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தில் ஆண்ட்ரியா, பூஜா குமார், இந்தி நடிகர் ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தை படமாக்கும்போதே இதன் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகளையும் படமாக்கி வைத்திருந்தார் கமல்.
இதன் விநியோக உரிமையை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கியிருந்தார்.

ஆனால் அவரால் படத்தை வெளியிட முடியவில்லை.

எனவே, கமல்ஹாசனே இப்படத்தை வெளியிட இருக்கிறார்.

இந்நிலையில், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்பட இருப்பதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அப்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளின் பர்ஸ்ட் லுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
Happy to anounce: Today 7pm Vishwaroop 2 Hindi first look poster & Vishwaroopam Tamizh Telugu 1st look posters release Exclusively for you

Vishwaroopam 2 first look will be released by Kamalhassan on 2nd May 2017

More Articles
Follows