‘மறக்க முடியாத மரபு கவிதை கௌதமி…’ கமல் கடிதம்.?

‘மறக்க முடியாத மரபு கவிதை கௌதமி…’ கமல் கடிதம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal hassan gautamiதமிழ்நாட்டிற்கு 60 வயது, சென்னை மவுலிவாக்கம் கட்டிடம் தகர்ப்பு என்ற பல செய்திகள் இடையே திடீரென சினிமா ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சி செய்திதான் கமல்-கவுதமி பிரிவு.

இந்த செய்தியை நம் தளத்தில் நேற்று பார்த்து இருப்பீர்கள்.

இதற்கு கமல் தரப்பில் என்ன கூறப்பட்டுள்ளது என்ற தேடலில், ஒரு கடிதம் கிடைத்துள்ளது.

அது கமல் மூலம் எழுதப்பட்டதா? என்பதற்கான விடை தெரியவில்லை.

காரணம் அதில் எந்த ஒரு முன்னுரையும் கமலின் நேர்த்தியும் தென்படவில்லை.

இருந்தபோதிலும் அதை இங்கே பகிர்கிறோம். அப்படியே…

kamal-letter

சற்றுமுன் கமலின் மக்கள் தொடர்பாளர் இக்கடிதத்தை மறுத்துள்ளார். கமலுக்கும் இக்கடிதத்திற்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனை அடுத்து விஜய்சேதுபதியுடன் இணையும் கலைஞர்கள்

சிவகார்த்திகேயனை அடுத்து விஜய்சேதுபதியுடன் இணையும் கலைஞர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi‘ஆரண்ய காண்டம்’ படத்தை தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கவுள்ள படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் பஹத்பாசில் நடிக்கிறார்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பிசி. ஸ்ரீராம் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள பஹத் பாசிலும், ரெமோவில் பணியாற்றிய பி.சி.ஸ்ரீராமும் அடுத்து விஜய்சேதுபதி படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுபோல் பொன்ராம் இயக்கவுள்ள படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்ட சமந்தா, விஜய்சேதுபதியுடன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

இளையராஜா இசையில் ரஜினி வில்லனும் நாயகியும் ஜோடியாம்

இளையராஜா இசையில் ரஜினி வில்லனும் நாயகியும் ஜோடியாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

music director illayaraja

தென்னிந்திய ரசிகர்களை தன் இசையால் தாலாட்டி வருபவர் இளையராஜா.

ஆயிரம் படங்களை முடித்தபின்னும் அவரது இசைப் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

தற்போது புதிதாக ஒரு இந்திப் படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.

பிரபல இந்தி இயக்குனர் இப்படத்தை பால்கி இயக்குகிறார்.

அமிதாப், தனுஷ் நடித்த ஷமிதாப் படத்தை இயக்கியவர் இவர்.

இப்படத்தில் அக்ஷய்குமார் மற்றும் ராதிகா ஆப்தே இணைந்து நடிக்கின்றனர்.

அக்ஷய்குமார் ரஜினி 2.ஓ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். ராதிகா ஆப்தே ரஜினியின் கபாலி படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பைரவா’ ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு தேதி

‘பைரவா’ ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaaவிஜய் நடித்துவரும் பைரபா படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் டீசரை அண்மையில் தீபாவளியை முன்னிட்டு வெளியிட்டனர்.

இதுவரை பார்வையாளர்களின் எண்ணிக்கையில் 50 லட்சத்தை கடந்துள்ளது.

இப்படம் அடுத்த ஆண்டு 2017 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இதன் ட்ரைலர் மற்றும் பாடல்களை இந்தாண்டு டிசம்பர் 25 (கிறிஸ்துமஸ்) அன்று வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே தீபாவளியை தொடர்ந்து கிறிஸ்துமஸ் தினத்திலும் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தொடரும் எனத் தெரிகிறது.

எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு சிறந்த ஆளுமை விருது

எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு சிறந்த ஆளுமை விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Veteran SP Balasubramanyam to receive Centenary award‘பாடும் நிலா பாலு…’ இப்படி ஒரு அழகான சொல்லுக்கு சொந்தக்காரர் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

1966ஆம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார்.

அதன் பின்னர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக காட்டி திரையுலகில் வலம் வந்தார்.

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி மற்றும் கமலின் ஆஸ்தான பாடகர் இவர்தான் என்று சொன்னால் அது மிகையல்ல.

1000 பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர் இவர் கிட்டதட்ட 14 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

இந்நிலையில், எஸ்.பி.பிக்கு இந்தாண்டிற்கான (2016) சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைத்துறையில் சிறந்த ஆளுமைக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.

வருகிற நவம்பர் 20ஆம் தேதி தொடங்க உள்ள 47வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு முன் திரைத்துறையில் ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்டோரும் இந்த விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கபாலி-தெறி தயாரிப்பாளரை கைது செய்ய உத்தரவு

கபாலி-தெறி தயாரிப்பாளரை கைது செய்ய உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali and theriரஜினி நடித்த கபாலி, விஜய் நடித்த தெறி உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தாணு.

இவரை கைது செய்ய சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவில் நியூ தியேட்டர் உரிமையாளர் டேவிட் வழக்கு தொடுத்திருந்தார்.

வழக்கு தொடுத்தவருக்கு வட்டியுடன் ரூ.2 லட்சம் இழப்பீடு தர உத்தரவிட்டிருந்த நீதிமன்ற தீர்ப்பை தாணு செயல்படுத்தவில்லை.

இதனால், தாணுவை நவம்பர் 28-ம் தேதிக்குள் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

More Articles
Follows