‘அஜித் எப்படிபட்டவர்…’ – காஜல் அகர்வால் ஓபன் டாக்

‘அஜித் எப்படிபட்டவர்…’ – காஜல் அகர்வால் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kajalவிஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டவர்களுடன் நடித்தவர் காஜல் அகர்வால்.

தற்போது அஜித்துடன் அவரது 57 வது படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் விக்ரமுடன் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மேலும் ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’ சிரஞ்சீவியுடன் கைதி எண் 150 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்

இந்நிலையில், ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார் காஜல்.

அப்போது ரசிகர் ஒருவர் அஜித் எப்படிபட்டவர் என்று கேட்டார்.

‘சூட்டிங் ஸ்பாட்டில் மட்டுமல்ல, வெளியிலும் அஜித் ஒரு ஜென்டில் மேன்தான்.

அனைவருடனும் அன்பாக பழகுவார். எல்லாரையும் மதிக்க கூடியவர் அவர்’ என்று பதிலளித்துள்ளார்.

விட்டுக் கொடுத்த கமல்ஹாசன்… நன்றி தெரிவித்த சூர்யா

விட்டுக் கொடுத்த கமல்ஹாசன்… நன்றி தெரிவித்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal suriyaசூர்யாவை திருமணம் செய்தபின் படங்களில் நடிக்காமல் இருந்தார் ஜோதிகா.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் 36 வயதினிலே படத்தில் நடித்து ரீ எண்ட்ரி கொடுத்தார்.

தற்போது தேசிய விருது பெற்ற “குற்றம் கடிதல்“ இயக்குநர் பிரம்மா இயக்கும் “மகளிர் மட்டும்“ படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் ஆவன பட இயக்குநராக நடிக்கிறார் ஜோதிகா.

இவருடன் நாசர், லிவிங்ஸ்டன், ஊர்வசி, பானு ப்ரியா மற்றும் சரண்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டேயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இணை தயாரிப்பு க்ரிஸ் பிக்சர்ஸ்.

1994ஆம் ஆண்டில் பெரும் வெற்றிப்பெற்ற மகளிர் மட்டும் படத்தலைப்பை விட்டுக்கொடுத்தற்காக கமல்ஹாசனுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

 

jo magalir

பைரவா டைட்டிலை கொடுத்துவிட்டு விஜய்யுடன் மோதும் லாரன்ஸ்

பைரவா டைட்டிலை கொடுத்துவிட்டு விஜய்யுடன் மோதும் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and raghava lawrenceபரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் வருகிற 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த டைட்டிலை விஜய்க்காக விட்டுக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ் என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில் இவர் நடித்துள்ள சிவலிங்கா படத்தையும் பொங்கல் தினத்தில் வெளியிடவிருக்கிறாராம்.

பி.வாசு இயக்கியுள்ள இப்படம் கன்னட படத்தின் ரீமேக்காகும்.

இதில் நாயகியாக ரித்திகா சிங் நடித்துள்ளார்.

விரைவில் இதன் இறுதிக் கட்டப் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

ரெமோவில் டபுள் க்ளைமாக்ஸ்…? சீக்ரெட்டை உடைத்த சிவகார்த்திகேயன்

ரெமோவில் டபுள் க்ளைமாக்ஸ்…? சீக்ரெட்டை உடைத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan new imagesரெமோ படத்தின் நன்றி விழா சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசியதாவது….

யோகிபாபு அண்ணாவுடன் நடித்தது நல்ல அனுபவம்.

இதுவரை நான் நடித்த படங்களில் ஒரு க்ளைமாக்ஸ்தான் இருக்கும்.

ஆனால் இப்படத்தில் இரண்டு க்ளைமாக்ஸ் எடுக்கப்பட்டது.

அதில் நான் கீர்த்திக்கு புடவை செலக்ட் செய்யும்போது, பிரவுன் கவுன் அணிந்திருப்பேன்.

அப்போது யோகிபாபும் அங்கே வந்து, நமக்கு எப்போ கல்யாண புடவை எடுக்கிறது என்று கேட்பார்.

உங்ககிட்ட ஒன்னு காட்டனும். நானும் உங்ககிட்ட பார்க்கனும் என்று கூடவே அவரும் என்னுடன் டிரையல் ரூம் வருவார்.

பின்னர் வியர்வையுடன் வெளியேறி வருவார்.

அப்போது கடைக்காரர்… சார்.. வேறு ஏதாச்சும் வெரைட்டி பார்க்குறீங்களா கேட்பார்?

இதுக்கு மேலே என்னய்யா வெரைட்டி வேனும் என்று நொந்தடிபயே போவார்.

இந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை. எனவே இப்போது சொல்லிவிட்டேன்.” என்று பேசினார்.

தேனாண்டாள் பிலிம்ஸ் உடன் இணைந்த தனுஷின் பட நிறுவனம்

தேனாண்டாள் பிலிம்ஸ் உடன் இணைந்த தனுஷின் பட நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kodi dhanush imagesவுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தனுஷ் பல படங்களை தயாரித்து வருகிறார்.

இந்நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட காக்கா முட்டை, விசாரணை உள்ளிட்ட படங்கள் தேசிய விருதுகளை வென்று உள்ளது.

இந்நிலையில் இந்நிறுவனமானது பிரபல நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைகிறது.

இதன் வழியாக வுண்டர்பார் ஆப்ஸ் என்ற APP தொடங்கவிருக்கிறார்களாம்.

இதன் மூலம் சினிமா செய்திகள், விமர்சனங்கள் உள்ளிட்ட சினிமா தொடர்பான செய்திகளை வெளியிடவிருக்கிறார்களாம்.

இதில் ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா ரஜினி ஆகியோரும் தனுஷ் உடன் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

‘எவ்ளோ பிரச்சினைதான் கொடுப்பீங்க…’ கண்ணீர் விட்ட சிவகார்த்திகேயன்

‘எவ்ளோ பிரச்சினைதான் கொடுப்பீங்க…’ கண்ணீர் விட்ட சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remo sivakarthikeyan24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ரெமோ கடந்த அக்டோபர் 7ஆம் தேதி வெளியானது.

இப்படம் தமிழகத்தில் மட்டுமல்லாது அமெரிக்கா, மலேசிய உள்ளிட்ட நாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எனவே, இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழா நடத்தப்பட்டது.

இதில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது சிவகார்த்திகேயன் பேசியதாவது….

ரஜினிமுருகன் படத்தின் ரிலீஸ் நாள் அன்று கூட அது ரிலீஸ் ஆகுமா? என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால் இந்த ரெமோ படத்தை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார் என் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.

நான் 18 மணி நேரம் உழைத்துவிட்டு வீட்டில் என் குழந்தையுடன் விளையாட சென்றுவிடுவேன்.

ஆனால் அவர் வீட்டிற்கு சென்றே பல நாட்கள் ஆகிவிட்டது. சரியான உறக்கம் அவருக்கு இல்லை.

நாங்கள் இணைந்து ஒரு நல்ல ஜாலியான படத்தை கொடுக்க நினைக்கிறோம்.

என் சினிமா வாழ்க்கையில் யாரும் பின்னால் இல்லை. என் முன்னால் இருக்கும் பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் காரணம்.

அவர்களால்தான் எனக்கு இந்த மேடை கிடைத்துள்ளது.

ஆனால் அதற்குள் எவ்வளவு பிரச்சினைகள். ராஜாவிடம் சொந்த வீடு இல்லை. கார் இல்லை.

எனக்கும் சரி அவருக்கும் சரி அவ்வளவு பிரச்சினைகளை கொடுக்கின்றனர்.

யார் பிரச்சினைகளை கொடுக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்.?

உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன். எங்களை வேலை செய்யவிடுங்கள்.

அவருக்கு ரூ. 20 கோடி லாபம் கிடைத்தவுடன் அவர் எங்கோ சென்று செட்டில் ஆகி விடலாம்.

ஆனால் என்றாவது ஒருநாள் பெரிதாக புதுசாக செய்துவிட எங்கள் குழு நினைக்கிறது. அதை செய்யவிடுங்கள்.

உதவியோ ஆதரவோ வேண்டாம். அது மக்கள் கொடுப்பார்கள்.

அவர்கள் குறை சொன்னால் திருத்திக் கொண்டு அடுத்த படத்தை கொடுக்கிறோம்.

எனக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள். அதற்காக உண்மையாக உழைக்க வேண்டும் என நினைக்கிறேன்.”

என்று கண்ணீர் மல்க பேசினார் சிவகார்த்திகேயன்.

More Articles
Follows