அஜித்-57 படத்தின் பட்ஜெட் எகிறியதா..?

அஜித்-57 படத்தின் பட்ஜெட் எகிறியதா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thala 57சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

சிவா இயக்கி வரும் இப்படத்தில் அஜித்துடன் காஜல், அக்ஷராஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டினாலும் இன்னும் இப்படத்திற்கு பெயரிடப்படவில்லை.

இப்படம் தொடங்கப்படும்போது ரூ 65 கோடி வரைதான் பட்ஜெட் ஒதுக்கினாராம் தயாரிப்பாளர்.

ஆனால் இதுவரை எடுத்த காட்சிகளை பார்த்தபோது தயாரிப்பாளர் மிகவும் சந்தோஷப்பட்டுள்ளாராம்.

எனவே, இன்னும் கூடுதல் செலவு ஆனாலும் பரவாயில்லை. நன்றாக முடிந்து தாருங்கள் என்று இயக்குனரிடம் கூறியதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Ajith 57 movie budget updates

தமிழ் சினிமாவுக்கு பெருமை தேடித்தரும் ‘பைரவா’

தமிழ் சினிமாவுக்கு பெருமை தேடித்தரும் ‘பைரவா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay stillsவிஜய் நடித்துள்ள பைரவா படம் ஜனவரி 12ல் வெளியாகவுள்ள நிலையில், இதன் முன்பதிவு இன்றே தொடங்கியுள்ளது.

இப்படத்திற்கு பெருமளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால், தமிழகத்தின் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

மேலும் வெளிநாடுகளில் இதன் பிரிமீயர் ஷோ ஜனவரி 11ஆம் தேதியே தொடங்கப்படுகிறது.

இதுவரை இல்லாத அளவில் புதிதாக சில நாடுகளிலும் பைரவா படம் வெளியாகவிருக்கிறதாம்.

நைஜீரியா, கானா, கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமின்றி ரஷ்யா, போலந்து போன்ற நாடுகளோடு சேர்த்து மொத்தம் 55 நாடுகளில் பைரவா வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது.

இதன்மூலம் தமிழ் சினிமாவுக்கு பெருமைத் தேடி தருகிறார் பைரவா என்றே கூறலாம்.

Bairavaa releasing in around 55 countries

‘சினிமா விமர்சனத்த நிறுத்திட்டு கல்விய பத்தி பேசுங்க..’ – சூர்யா

‘சினிமா விமர்சனத்த நிறுத்திட்டு கல்விய பத்தி பேசுங்க..’ – சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya“நீட்” என்ற மருத்துவ நுழைவு தேர்வுக்கான புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா கலந்துக் கொண்டு பேசினார். அதில்…

மாண்புமிகு ரவிக்குமார் ஐயா அவர்கள் முதலாவதாக NEET பற்றியும் கல்வி முறையை பற்றியும் விரிவாக பேசியதை நாங்கள் ஏற்று கொள்கிறோம்.

எங்கள் அகரம் மூலம் நிச்சயமாக அதற்கான வேலைகளை தொடங்கவிருக்கிறோம் என்பதை முதலில் கூறிகொள்கிறேன்.

அதற்கான மொழிபெயர்பாளர்கள் அறிஞர்கள் தயாராக இருந்தார்கள் என்றால் வேலை இன்னும் வேகமாக நடக்கும். அதற்கான வேலைகளிலும் அகரம் ஈடுபட உள்ளது என்பதை அகரம் சார்பாக மற்றும் அனைவரது சார்பாகவும் நான் தெரிவித்துகொள்கிறேன்.

கல்வி சூழல் எப்படி உள்ளது என்று விரிவாகவும் தெளிவாகவும் அனைவரும் பேசியதற்கு என் நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்.

இதை பற்றி தெரியாதவர்களுக்கு இந்த ஊடகங்கள் முலமாக இன்னும் அதிகமா தெரியவரும். இந்த மேடையை மிக முக்கியமான மேடையாக நான் பார்க்கிறேன்.

அதற்கு முன்பாக அகரம் எப்படி ஆரம்பித்தது என்பதை நான் கூற விரும்புகிறேன்.

இதேபோல் தான் 36 வருடங்களுக்கு முன்பு சிவகுமார் அறகட்டளை என்ற பெயரில் மாநில அளவில் இடம் பிடித்த மாணவர்கள் அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாக வீட்டிற்கு அழைத்து காசோலை செலுத்தி மரியாதை செய்துவந்தோம்.

இந்தச் செயல் சரியானதா என்ற கேள்வி தோன்றியது. அனைவரயும் சமமாக பார்கிறோமா என்று கேள்வி ஞானவேலிடம் இருந்து வந்தது பின்பு பார்க்கும்போது மாநில அளவில் இடம் பிடித்த மாணவர்களில் 75% மேல் IAS அதிகாரியோட மகனாகவோ மகளாகவோ இருக்கலாம், ஒரு பொறியாளரின் அல்லது மருத்துவரின் மகனாகவோ மகளாகவோ இருக்கலாம்.

நகரத்தில் படித்து வந்த மாணவர்களையும் கிராமத்தில் படித்து வந்த மாணவர்களையும் சமமாக பார்க்க வேண்டும் என்றும் இதற்கும் மேல் முதல் தலைமுறை மாணவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு என்ன பண்ண போகிறோம் என்று தோன்றியது.

அதற்கு இந்த கல்வி சூழல் எப்படியுள்ளது என்று 10 வருடங்களுக்கு முன்பாகத்தான் இன்னும் அழமாக யோசிக்க தொடங்கினோம்.

நன்றி ஞானவேல். அகரம் மூலமாக அரசு பள்ளி மற்றும் அதை சார்ந்த உதவிகள் பெற்றுள்ள 1500 பள்ளி மாணவர்களுக்கு பக்கபலமாக அகரம் அமைய அந்த ஒரு உரையாடல் முக்கியகாரணமாக அமைந்தது.

அதில் இருந்து ஒரு அழகான பயணம் இன்று 10 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.
இந்த ஒரு உரையாடலும் மற்றும் இதை போன்ற ஒரு விழிப்புணர்வும் அவசியம் அடிக்கடி தேவை என்று நான் நினைக்கின்றேன்.

“அயன் “ படம் 2007 வந்து நான் டான்ஷிபார் என்ற இடத்திருக்கு சென்றேன் அங்கே படபிடிப்பு நடந்து கொண்டு இருந்தது.

அது ஒரு தீவு. அங்குள்ளவர்கள் எனக்கு அவர்களுடய பாரம்பரிய நடனத்தை கற்றுகொடுத்து வந்தார்கள்.
அங்குள்ள மக்களுக்கு மற்ற மொழி தெரியவில்லை ஆனாலும் 70 வயதுடைய ஒரு மனிதர் மிக அற்புதமாக ஆங்கிலத்தில் பேசினார்.

அவருடைய உடை, நடவடிக்கை, செயல் எல்லாம் வித்தியாசமாக இருந்தது. பின்பு தான் , அங்கு ஒரு போர் ஒன்று நடைபெற்றிருக்கிறது என்றும், அதில் அனைத்து கல்விக்கூடங்களும் அழிக்கப்பட்டுள்ளது.

அதனால் அங்கு நல்ல கல்விக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் என்று எதுவும் கிடையாது.
டான்ஷிபாரில் உள்ளவர்கள் சாராய கடைகள் வைத்துள்ளனர். இல்லையென்றால் சாதாரண கூலி வேலை பார்த்துக்கொண்டிருப்பார்கள். இருந்தாலும் 60, 70 வயதான அனைவருக்கும் நல்ல அறிவும், திறமையும் இருந்தது.

ஒரு நல்ல கல்விக்கூடம் இல்லை என்றால் ஒரு அணுஆயுதம் என்ன விளைவை எற்படுத்துமோ அதை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

குறையுள்ள பள்ளிகளும் குறையுள்ள கல்லூரிகளும் இருந்தது என்றால் அங்கு அதன் பாதிப்பு பலமடங்காக இருக்கும்.

ரவிக்குமார் கூறியது போன்று கடந்த 10 வருடங்களாக கல்வி முறையில் நிறைய கேள்விகள் இருக்கிறது.

அதை அலசி ஆராயும் விஷயமாக தான் கல்யாணி ஐயா – வோட இந்த புத்தகத்தை நான் பார்க்கிறேன்.
இதை அகரம் மூலமாக வெளியிட நங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம் .

தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்கள் படித்து முடித்த பின்பு கல்லூரிகளில் சேரும்போது அவர்கள் படுகின்ற கஷடங்களை நாங்கள் கண்கூடாக பார்க்கிறோம்.

தமிழ்வழி கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதற்கும் நகர்புற வாழ்க்கையை வாழ படும் கஷடங்கள் மிகவும் கடினமான ஒன்று. ராமசாமி என்கிற மாணவன் கிட்டதட்ட 3 கிலோமீட்டர் நடந்துவந்து பள்ளியில் படிக்கிறார்.

நல்ல மதிப்பெண்கள் வாங்குகின்றார். அவருக்கு PSG பொறியியல் கல்லூரியில் இலவசமாக இடம் கிடைக்கின்றது.
அனைத்து பொருளாதார உதவிகளும் கிடைக்கிறது . ஆனாலும் அழுத்தம் காரணமாக படிக்காமல் பாதியிலேயே சென்றுவிட்டார்.

வருடா வருடம் கிட்டதட்ட 200, 300 மாணவர்களில் 2 மாணவர்களாவது எவ்வளவு உதவி, பாதுகாப்பு அளித்தாலும் அழுத்தம் காரணமாக திரும்பி சென்றுவிடுகிறார்கள்.

இதை கண்காணிக்க வேண்டியவர்கள் இதை பற்றி பேசுவதில்லை. இதற்கான எந்த உரையாடலும் எங்கேயும் இல்லை என்பதை என்னால் பார்க்கமுடிகிறது.

இன்னும் சொல்ல போனால் ஒரு IAS அதிகாரி அவர்கள், அகரத்தை தொடர்பு கொண்டு விடுதியில் நிறைய தற்கொலைகள் நடக்கின்றன வெறும் மதிப்பெண்கள் குறைந்தால் அந்த அழுத்தம் , தாங்காமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்றார்.

2 வருடங்களுக்கு முன்பு நிறைய நடந்தது. அதை பற்றிய உரையாடல் நடந்தது. அதன் பின்பு என்ன நடக்கின்றது என்பது எனக்கு தெரியவில்லை.

எந்த அளவிற்கு மாற்றம் நிகழ்துள்ளது என்பது எனக்கு தெரியவில்லை. ஐயா சொன்னது போல் கால்களை கட்டி போடவில்லை. கட்டிபோட்டு ஓட்டபந்தயம் வைத்து முதலில் வந்தவருக்கு பரிசு கொடுக்கவில்லை.

கிட்டதட்ட கால்களை வெட்டி போட்டு முதலில் வந்த மாணவர்களுக்கு பரிசு கொடுத்து வருகின்றோம். இது சரியா, இல்லையா என்பதை அலசி ஆராய்ந்து நிறைய தொகுப்புகளை கல்யாணி ஐயா இந்த புத்தகத்தில் வைத்துள்ளார்.

ஒரு படத்தை பார்த்து அதற்கு விமர்சனம் கொடுக்கிறோம் . அதை இப்படி பண்ணிருக்கலாம் அப்படி பண்ணிருக்கலாம் என்று படத்தின் இடைவேளை காட்சியை கொஞ்சம் மாற்றியமைத்திருக்கலாம் என்று உரையாடுகின்றோம்.
கிட்டதட்ட 25 லட்சம் மாணவர்கள் தொடக்க கல்வியில் சேருகிறார்கள். பின்பு பள்ளி முடித்து கல்லூரியில் சேர்ந்து படிக்கின்றவர்கள் 1 ½ லட்சம் மாணவர்கள் கூட கிடையாது.

நிறைய மாணவர்கள் பின்தள்ளப்படுகிறார்கள். இப்போ கல்யாணி ஐயா சொன்னது போல் 2800 இடங்கள் அரசு பள்ளியில் உள்ளது அதில் படிப்பவர்கள் 6௦ % மாணவர்கள் தான்.

இதுதான் நமது தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை. ஆனால் அவர்கள் மருத்துவ துறையில் நுழைய நிறைய கஷ்டங்களை எதிர் கொள்ளவேண்டியதாக உள்ளது. 2,3 இடங்கள் மட்டுமே ஒரு வருடத்திற்கு அவர்களுக்கு கிடைக்கின்றது.

மாணவர்கள் நீங்கள் ஒரு படத்தை பற்றி விமர்சனம் செய்கிறீர்கள்.

டோனால்டு ட்ரம்பை அமெரிக்க எப்படி பிரதமராக அறிவித்தது என்பதை பற்றி அலசி ஆராய்ந்து பார்க்கும் நீங்கள் நமது கல்விமுறையை பற்றி பேசுவதில்லை.

இந்த மாதிரி விஷயங்கள் அடிக்கடி நிகழாது. இப்பொழுது இந்த உலகம் இணையதள உலகமாக உள்ளது. ஒரு நிகழ்வு அனைவரிடமும் விரைவாக போய் சென்றுவிடுகின்றது.

ஆனாலும் கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவர்கள் ஒரு பெரிய வீரியம் இருந்தால் மட்டுமே நகரத்தில் பயணிக்க முடியும். மேலும் தமிழ்நாட்டையும் தாண்டி வேறு மாநிலத்துக்கும் போக முடியும் என்பது மிகபெரிய கேள்விகுறி. அத்தனை கோடி மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு பண்ணுவது கல்வி மட்டுமே.

எங்கேயாவது டிசைன் இன் இந்தியா என்ற வாசகத்தை பார்க்கின்றோமா ?? எப்போதாவது மேட் இன் இந்தியா என்ற வாசகத்தை பார்க்கின்றோம்.

தயவு செய்து இந்த புத்தகத்த்தில் நேரத்தை செலவிடுங்கள். அதை போல் இப்புத்தகத்தில் இருந்து வரும் ஒவ்வொரு தொகையும் கல்யாணி ஐயாவோட பள்ளிக்கு போய் சேரும். அகரம் இதேபோல் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும்” என்றார் சூர்யா.

Suriya speech about Education at Neat Book launch

suriya at Neat book launch

சிம்பு மீண்டும் இளமையாக காரணமான அஸ்வின் தாத்தா

சிம்பு மீண்டும் இளமையாக காரணமான அஸ்வின் தாத்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu from AAA movieஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு 3 வேடங்களில் நடித்து வரும் படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன்.

யுவன் இசையமைத்து வரும் இப்படத்தில் இடம் பெற்ற டிரெண்ட் சாங்கை 2017 புத்தாண்டு தினத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில் இப்பாடலுக்கு நடனம் ஆடியது குறித்து, தன் ட்விட்டர் பக்கத்தில் சிம்பு கூறியுள்ளதாவது….

“டிரெண்ட் பாட்டுக்கு ஆடியபோது மீண்டும் இளமையாக உணர்தேன்.

வயது ஒரு நம்பர் மட்டும்தான் என்பதை உணர்ந்தேன்.

அஸ்வின் தாத்தா என்ற வயதான வேடத்தில் இப்பாடலுக்கு ஆடினேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Simbu feels young again becasue of Ashwin Thatha

தமிழக தியேட்டர்களை தாக்கப் போகும் ‘பைரவா’ புயல்

தமிழக தியேட்டர்களை தாக்கப் போகும் ‘பைரவா’ புயல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bairavaa movie tamilnadu theatre listவிஜய் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதியே ரிலீஸ் ஆகிறது.

விஜய் ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸை கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

மதுரை மற்றும் நெல்லை மாவட்ட ரசிகர்கள், ஒருபடி மேலே சென்று பிரம்மாண்ட கட்-அவுட்களை வைத்து அசத்தி வருகின்றனர்.

மேலும் சேலத்தில் உள்ள ஏஆர்ஆர்எஸ் சினிமாஸ் வளாகத்தில் உள்ள 5 தியேட்டர்களிலும் இப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதாம்.

தமிழகம் முழுவதும் கிட்டதட்ட 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது. அதன் விவரம்…

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்த்தில் 150 தியேட்டர்களிலும், கோவை மாவட்டம் 90 தியேட்டர்களிலும், மதுரையில் 53 தியேட்டர்களிலும், திருச்சி ஏரியாவில் 48 தியேட்டர்களிலும், வேலுர் 44 தியேட்டர்களிலும், புதுச்சேரி ஏரியாவில் 36 தியேட்டர்களிலும் நெல்லையில் 24 தியேட்டர்களிலும் வெளியாகவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

‘சுல்தான்-பிகே’ படங்களின் வசூலை காலி செய்த ‘தங்கல்’

‘சுல்தான்-பிகே’ படங்களின் வசூலை காலி செய்த ‘தங்கல்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dangal first look posterகடந்த டிசம்பர் மாத இறுதியில் அமீர்கான் நடித்த தங்கல் படம் வெளியானது.

அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவை பெற்ற இப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

சல்மான்கான் நடித்த சுல்தான் பட வசூலை இப்படம் முறியடித்துள்ளது.

மேலும் அமீர்கானின் பி.கே. படத்தின் வாழ்நாள் வசூலான ரூ. 340 கோடியை இரண்டே வாரங்களில் (17 நாட்களில்)  ரூ. 375 கோடியை பெற்று முறியடித்துள்ளது.

ரூபாய் நோட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையிலும் தங்கல் படம் இந்த வசூலை பெற்றிருப்பது இந்திய சினிமாவை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

More Articles
Follows