அஜித் 57வது படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் வெளியானது

அஜித் 57வது படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ak 57 vivegamவேதாளம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இதுநாள்வரை தல 57 என்று தலைப்பிட்டு அழைத்து வருகின்றனர்.

இதன் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டாலும் இப்படத்திற்கு தற்போதுதான் பெயர் வைத்துள்ளனர்.

அதன்படி விவேகம் என்று பெயரிடப்பட்டு இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இதில் அஜித்துடன் காஜல், அக்ஷராஹாசன், கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்க, சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இசை அனிருத்.

Ajith 57 movie titled Vivegam and first look released

ஹிட் கொடுக்கல.. ஆனாலும் விஜய் போல் வாய்ப்பளித்த அர்விந்த் சாமி

ஹிட் கொடுக்கல.. ஆனாலும் விஜய் போல் வாய்ப்பளித்த அர்விந்த் சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arvind swamy stillsவிஜய் நடிப்பில் பரதன் இயக்கிய அழகிய தமிழ் மகன் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

ஆனாலும் அதே இயக்குனரை நம்பி பைரவா படத்தை இயக்கும் வாய்ப்பளித்தார் விஜய்.

இதே பாணியில் தற்போது அர்விந்த் சாமியும் இயக்குனர் செல்வாவுக்கு வாய்ப்பளித்துள்ளார்.

அரவிந்த் சாமி நடிப்பில் உருவான ‘புதையல்’ படத்தை செல்வா இயக்கியிருந்தார்.

1997-ஆம் ஆண்டு வெளியான இப்படம், அரவிந்த் சாமியின் மார்க்கெட் சரிவுக்கு காரணமாய் அமைந்தது.

இந்நிலையில், மீண்டும் அதே இயக்குனர் செல்வாவுக்கு தன்னுடைய வணங்காமுடி என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கும் வாய்ப்பளித்துள்ளார் அர்விந்த் சாமி.

இதில் ரித்திகா சிங் மற்றும் நந்திதா ஆகியோர் நாயகிகளாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இமான் இசையமைக்க, இதன் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

_______________________________

ஜிவி. பிரகாஷுடன் இணையும் அருண் விஜய்யின் நாயகி

ஜிவி. பிரகாஷுடன் இணையும் அருண் விஜய்யின் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor GV Prakashஜிவி. பிரகாஷ் நடித்துள்ள புரூஸ் லீ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து அடங்காதே, ஐங்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ஐங்கரன் படத்தை ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு இயக்கி வருகிறார்.

இதில் நாயகியாக மஹிமா நம்பியார் நடிக்கவிருக்கிறாராம்.

இவர் சாட்டை, குற்றம் 23 ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்-விமல்

மீண்டும் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்-விமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and vimalகேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் விமல் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்தனர்.

அதன்பின்னர் விமல் நடித்த மாப்ள சிங்கம் படத்தில் எதுக்கு மச்சான் காதலு என்ற பாடலை சிவகார்த்திகேயன் பாடியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் விமலுக்காக ஒரு பாடலை சிவகார்த்திகேயன் பாடவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது பூபதி பாண்டியன் இயக்கும் `மன்னர் வகையறா’ படத்தில் நடித்து வருகிறார் விமல்.

இதில் கயல் ஆனந்தி, சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

`துருவங்கள் 16′ படத்திற்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜோய் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

இப்படத்தில்தான் அந்த பாடல் இடம் பெற உள்ளதாம்.

சூர்யாவுடன் படையப்பா கூட்டம்… படம் வெளியானதால் பரபரப்பு

சூர்யாவுடன் படையப்பா கூட்டம்… படம் வெளியானதால் பரபரப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya ramya krishnan senthilசூர்யா நடித்துள்ள சி3 படத்தின் ரிலீஸ் தேதி பல முறை மாற்றப்பட்டு தற்போது ஒருவழியாக பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் ஒத்திவைப்பு ரசிகர்களுக்கு சின்ன வருத்தத்தை அளித்துள்ளது.

இந்நிலையில், விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனையறிந்த சூர்யா ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த படத்தில் சூர்யாவுடன் ரம்யா கிருஷ்ணன், செந்தில் ஆகிய இருவரும் உள்ளனர்.

இவர்கள் இருவரும் படையப்பா படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Suriyas Thaana Serndha Kootam picture leaked

விஜய் 61 படத்தை ராசியான இடத்தில் தொடங்கிய அட்லி

விஜய் 61 படத்தை ராசியான இடத்தில் தொடங்கிய அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay jothika samantha kajal atleeதெறியை தொடர்ந்து மீண்டும் அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய்.

இவருடன் ஜோதிகா, சமந்தா, காஜல், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதை பார்த்தோம்.

இதன் சூட்டிங் இன்று பூஜையுடன் சென்னை, ஈசிஆர் சாலையில் தொடங்கியுள்ளது.

தெறி படத்தின் பூஜையும் அதே பகுதியில்தான் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay 61 movie Pooja happened today at ECR

More Articles
Follows