‘பைரவா-சிங்கம்’ படத்திற்காக காத்திருக்கும் அஜித் படக்குழு.?

‘பைரவா-சிங்கம்’ படத்திற்காக காத்திருக்கும் அஜித் படக்குழு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Kajal Agarwal Akshara Hassanஇந்த புத்தாண்டு 2017 பிறந்ததினம் விஜய், சிம்பு உள்ளிட்டவர்களின் பட ட்ரைலர், டிரெண்ட் சாங் உள்ளிட்டவைகள் வெளியானது.

ஆனால் தல-57 படம் தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ போஸ்டர் கூட வெளியாகவில்லை.

இந்நிலையில் பொங்கல் தினத்திற்கு பிறகு அதாவது ஜனவரி 18ம் தேதி இறுதிக்கட்ட சூட்டிங்கை தொடங்கவிருக்கிறதாம் படக்குழு.

அதன்பின்னர் ஜனவரி இறுதியில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது பைரவா மற்றும் சிங்கம் 3 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அப்படங்கள் ரிலீஸ் ஆன பிறகு தல 57 பர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவை ஆளப் போகும் ரஜினி-தனுஷ் குடும்பத்தார்

தமிழ் சினிமாவை ஆளப் போகும் ரஜினி-தனுஷ் குடும்பத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Dhanush familyரஜினி குடும்பத்தை போன்றே தனுஷின் குடும்பமும் கலையுலகம் தொடர்பு உடையதே.

இந்த இரு குடும்பங்களின் சார்பாக நிறைய படங்கள் இந்தாண்டை (2017) கலக்கப் போகின்றன.

ரஜினி நடித்துள்ள 2.0 படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

மேலும் இந்தாண்டிலேயே ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பார்.

இவை இந்தாண்டில் வந்தாலும் ஆச்சரியமில்லை.

தனுஷ் முதன் முதலாக இயக்கி வரும் பவர் பாண்டி படமும் இந்தாண்டு திரைக்கு வரும்.

மேலும் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் சௌந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் விஐபி 2 படமும் இந்தாண்டு வெளியாகும்.

இவர்களைத் தொடர்ந்து, பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் வாழ்க்கையை படமாக்குகிறார் ஐஸ்வர்யா தனுஷ்.

மேலும் சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தை இயக்குகிறார்.

செல்வராவன் இயக்கியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தற்போது சந்தானம் நடிக்கும் மன்னவன் வந்தானடி படத்தை இயக்கி வருகிறார் செல்வா.

இதனைத் தொடர்ந்து, சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார்.

‘பைரவா’வில் விஜய்யின் செல்லப் பெயர் இதுவா.?

‘பைரவா’வில் விஜய்யின் செல்லப் பெயர் இதுவா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bairavaa vijayபரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பைரவா.

இப்படத்தை தவிர படத்தின் பாடல்கள், டீசர், ட்ரைலர், போஸ்டர்கள் என அனைத்தும் வெளியாகிவிட்டன.

நேற்று முன்தினம் இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. அதில் இரண்டு சீன்களில் விஜய்யை டார்லிங் என்று அழைக்கின்றனர்.

தெறி நைனிகா குழந்தை விஜய்யை டார்லிங் என்று அழைப்பார்.

அதுபோல் மற்றொரு காட்சியில், விஜய்யிடம் சதீஷ் பேசும்போது…

“லவ்ல என்ன ‘டார்லிங்’ பெரிய டிரெண்ட்டு… அன்னைக்கு முரளி லெட்டர்ல சொன்ன காதல, அவர் பையன் அதர்வா இன்னைக்கு ட்விட்டர்ல சொல்றாரு. அவ்வளவுதான்” என்பார்.

‘தெறி பேபி’யை போன்று இந்த வார்த்தையும் ட்ரெண்ட் அடிக்கும் என கூறப்படுகிறது.

Vijay’s Pet name in Bairavaa movie

லைக்ஸில் பட்டைய கிளப்பும் ‘பைரவா’ ட்ரைலர்

லைக்ஸில் பட்டைய கிளப்பும் ‘பைரவா’ ட்ரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bairavaa Vijayபரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள, பைரவா படத்தின் ட்ரைலர் 2017 புத்தாண்டை முன்னிட்டு, நேற்று இரவு (டிசம்பர் 31)ஆம் தேதி வெளியானது.

இதனை பார்த்த ரசிகர்கள் அதிகளவில் லைக்ஸ் செய்து வருகின்றனர்.

மேலும் இதனை ரசித்த ரசிகர்களும்  சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

யுடியூப்பில் பட்டைய கிளப்பி வரும் பைரவா படத்தின் சாதனை பட்டியல் இதோ… (மணிக்கணக்கில் ட்ரைலரை பார்த்தவர்கள் விவரம்…)

  • 25K – 13 mins
  • 50K – 25 mins
  • 75K – 50 mins
  • 100K – 100 mins
  • 1.25M – 6 hrs
  • 1.50M – 13 hrs
  • 3.1M – 20 hrs
  • 3.5 M – 24 hrs

 

தனுஷ்-கௌதம் மேனன் படத்தின் மியூசிக் டைரக்டர் முடிவானது

தனுஷ்-கௌதம் மேனன் படத்தின் மியூசிக் டைரக்டர் முடிவானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Gautam Menonகௌதம் மேனன் இயக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதுமே திரையுலகம் பரபரப்பானது.

இது புதுக்கூட்டணி என்றாலும், தொழில்நுட்ப கலைஞர்களை வழக்கம்போலவே பயன்படுத்துவார் கௌதம் மேனன் என்று பலரும் நினைத்தனர்.

இதனிடையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானது.

ஆனால் அதில் இசையைமைப்பாளர் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஏதோ ஒரு அறையில் என்ற பாடல் சிங்கிளை வெளியிட்டுள்ளனர்.

அதில் இசையமைப்பாளர் கௌதம் மேனன் என்று பெயரிட்டுள்ளனர்.

Gautam Menon confirmed music composer for Dhanush movie

enpt gautam

‘கபாலி’ இயக்குநர் ரஞ்சித்துடன் இணையும் கதிர்-ஆனந்தி

‘கபாலி’ இயக்குநர் ரஞ்சித்துடன் இணையும் கதிர்-ஆனந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ranjithகபாலி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விரைவில் மீண்டும் ரஜினியை இயக்கவிருக்கிறார் ரஞ்சித்

இந்நிலையில் தனது அடுத்த அவதாரமாக தயாரிப்பாளர் ஆகிறார் ரஞ்சித்.

தயாரிப்பு நிறுவனத்திற்கு நீலம் புரொடக்சன் என பெயரிட்டு, ‘பரியேறும் பெருமாள்’ (PARIYERUM PERUMAL) என்ற படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்

இயக்குநர் ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கவிருக்கிறார்.

‘கிருமி’ பட நாயகன் கதிர் நாயகனாக நடிக்க, ஆனந்தி நாயகியாக நடிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறாராம்.

ஜனவரி மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

படப்பிடிப்பு முழுவதும் நெல்லையில் நடைபெறுவதால் அந்த மாவட்ட மக்களை நடிக்க வைப்பதிற்கான தேர்வு இப்பொழுது நடைபெற்று வருகிறது.

More Articles
Follows