கபாலி நெருப்புடா பாடல் டீசர்… விமர்சனம்.!

Kabali NeruppuDa Song Teaser Reviewரஜினிகாந்தின் கபாலி படத்தின் டீசர் வெளியாகி உலகளவில் பெரும் சாதனை படைத்துள்ளது.

இது வெளியாகி 45 நாட்களை கடந்த நிலையில், இப்படத்தின் மற்றொரு பாடல் டீசர் நேற்று இரவு வெளியானது.

இந்த டீசர் 35 நொடிகளை கொண்டுள்ளது.

முதல் டீசரில் ரஜினி மட்டுமே பிரதானமாக இருந்தார். இடையில் கிஷோர் மற்றும் ராதிகா ஆப்தே தென்பட்டனர்.

ஆனால் இந்த டீசரில் படத்தின் மெயின் வில்லனான தைவான் நடிகர் வின்ஸ்டன் சவோ இம்பெற்றுள்ளார்.

இவருடன் தினேஷ், கலையரசன், தன்ஷிகா, கிஷோர், ராதிகா ஆப்தே, ஜான்விஜய் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

ஆனால் இதுவரை ரித்விகா இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நெருப்புடா டீசர் நிஜமான நெருப்பு போலவே பரவி வருகிறது.

இது வெளியாகி 3 மணி நேரத்தில் இந்த டீசரை மட்டும் 1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இதில் மூன்று விதமான கெட்டப்புகளில் தோன்றியிருக்கிறார் ரஜினி.

முழுக்க நரைத்த தாடி மற்றும் தலை முடியுடன் ஒரு கெட்டப்.

தாடி இல்லாமல் க்ளீன் செய்த முகத்துடன் கொஞ்சம் நரைத்த மீசை மற்றும் தலைமுடியுடன் ஒரு கெட்டப்.

மற்றும் இளமைகால ரஜினி என படு அசத்தலாக உள்ளார்.

பயமா…? என கேட்டபடியே ரஜினியின் காந்த சிரிப்புடன் இந்த டீசர் ஆரம்பம் ஆகிறது.

அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக இந்த டீசர் செல்கிறது.

ரஜினியை சுற்றி பாதுகாவலர்கள் போல் ஜான்விஜய், தினேஷ், கலையரசன் வருகின்றனர்.

தன்ஷிகா வித்தியாசமான டாம்பாய் கெட்டப்பில் தோன்றி அசத்தியிருக்கிறார்.

மலேசியாவில் நடக்கும் ஊர்வல போராட்டக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

கபாலி என்ற மிகப்பெரிய டானிடம் மண்டியிட்டு ஒருவர் கதறி அழுவதும் உள்ளது.

ஒரு ஆக்சிடெண்ட் மற்றும் ஒரு அதிரடி டான்ஸ் காட்சியும் உள்ளது.

இடையில் வரும் “நான் வந்துட்டேன்னு சொல்லு… திரும்ப வந்துடேன்னு…” என்ற பன்ச் டயலாக் படு அசத்தல்.

இறுதியாக கால்மேல் கால் போட்டு அமரும் ரஜினிக்கு நிகராக இன்று வரை எவரும் இல்லை எனலாம். அப்படி ஒரு எனர்ஜி தற்போதும் அவரிடம் உள்ளது.

ஆக மொத்தம், இந்த டீசரில், ஆக்ஷன், பாட்டு, ஃபயர் என எதற்கும் பஞ்சமில்லை.

Overall Rating : Not available

Related News

“சூப்பர் ஸ்டார்” யாருன்னா கேட்டா சின்னக்…
...Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான…
...Read More

Latest Post