‘கொரோனா டூட்டி இல்லையா.?’ என்று கேட்டவருக்கு ஜூலி கொடுத்த பதில் இதோ…

‘கொரோனா டூட்டி இல்லையா.?’ என்று கேட்டவருக்கு ஜூலி கொடுத்த பதில் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg Boss Julees reply to her fan in Corono Prevention duty கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியா முழுவரும் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது.

இதனால் திரைப்பட படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் நடிகை ஜூலி.

அவரிடம் ஒரு ரசிகர்கள் நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் உங்கள் நர்ஸ் பணிக்கு திரும்பவில்லையா என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த ஜூலி, “பெரும்பாலானோர் இதே கேள்வியை என்னிடம் கேட்கின்றனர். நான் இப்போது திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

நர்ஸ் பணி என்பது ஒரு புனிதமான வேலை. அதற்கு முழு அர்ப்பணிப்பு தேவை. பார்ட் டைம் வேலையாக அதை செய்ய முடியாது.

ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் (நர்ஸ் அண்ட் நடிப்பு) செய்வது மிகவும் கடினமானது.

படப்பிடிக்குச் செல்வதால் நர்ஸ் பணிக்கு செல்வதில் பிரச்சினை வரும் . நேரம் தாமதமாகலாம்.

அப்போது நோயாளிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை வரும். நோயாளிகளின் உயிரை என்னால் பணயம் வைக்க முடியாது என்று தன் பதிலை பதிவிட்டுள்ளார் ஜூலி.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்பு நர்ஸ் ஆக பணிபுரிந்தவர் ஜூலி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் வட இந்திய நடிகை ஷிகா மல்ஹோத்ரா என்பவர் சூட்டிங் இல்லாத சமயத்தில் நர்ஸ் ஆக பணி புரிந்து வருகிறார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Bigg Boss Julees reply to her fan in Corono Prevention duty

 

உன்ன மாதிரி அசிங்கப்புடிச்சவங்களால அஜித்துக்கே அசிங்கம்…- குஷ்பூ

உன்ன மாதிரி அசிங்கப்புடிச்சவங்களால அஜித்துக்கே அசிங்கம்…- குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Khushbu Sundar slams Thala Ajith fansகொரோனா வைரஸை தடுக்க இந்தியா நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒட்டு மொத்த இந்தியர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

மருத்துவர்கள், காவலர்கள், துப்புரவாளர்கள் கொரோனா தடுப்பு பணியில் தங்கள் உயிரை பணயம் வைத்து ஈடுப்பட்டு வருகின்றனர்.

சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பெஃப்சி தொழிலாளர்களுக்கு உதவ செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் தாராளமாக நிதியுதவி செய்கின்றனர்.

இதனையடுத்து குஷ்பு மற்றும் சுந்தர் சி இருவரும் இணைந்து ரூ.5 லட்சம் நிதிவழங்குவதாக அறிவித்தனர்.
இந்த தகவலை குஷ்பூ ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அஜித் ரசிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு நபர் இதற்கு பதிலளித்திருந்தார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு உதவாமல் , திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அந்தத் துறையினருக்கு மட்டும் தான் உதவுவீர்கள் என்று விமர்சித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக “உன்னைப் போன்ற ஒருவரை ரசிகர் என்று சொல்லிக் கொள்வதற்கு அஜித் வெட்கப்படுவார்” என்று கோபமாக பதிலளித்திருந்தார் குஷ்பூ.

உடனே அஜித் ரசிகர்கள் எல்லாம் ” அவன் கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்கனும் இப்டி அஜித் பேரை உள்ள
இழுக்க கூடாது என பதிலடி கொடுத்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன் கஸ்தூரிக்கும் அஜித் ரசிகர்களும் மோதிக் கொண்டனர்.

தற்போது இந்த வரிசையில் கஸ்தூரியை தொடர்ந்து குஷ்பூ இணைந்துள்ளார்.

இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள்.. “கஸ்தூரி கிட்டயும் அடி வாங்கியாச்சு குஷ்பூ கிட்டயும் அடி வாங்கியாச்சு” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது குஷ்பு மற்றும் அஜித் ரசிகர்கள் சண்டை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட்டாகி வருகிறது.

Actress Khushbu Sundar slams Thala Ajith fans

https://twitter.com/khushsundar/status/1244251516740833280

ரஜினி-ஜக்கி செய்திகள் அவசியமா.? எங்கள காப்பாத்துங்க.. – தங்கர் பச்சான்

ரஜினி-ஜக்கி செய்திகள் அவசியமா.? எங்கள காப்பாத்துங்க.. – தங்கர் பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thangar Bachan slam Media in Corona Virus alert கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்து ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான தங்கர் பச்சான் கூறியதாவது…

சீனாவிலுள்ள வுஹான் மாகாணத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி முதன் முதலாக கொரோனா ஆட்கொல்லி குறித்த செய்தி வெளியானாலும் ஜனவரி மூன்றாம் வாரத்தில் தான் ‘கொரோனா’ எனும் சொல் ஊடகங்களில் பரவலாக வெளிவரத்தொடங்கின.

பிப்ரவரி 1, 2 தேதிகளில் சீனாவின் வுஹான் நகரில் சிக்கியிருந்த 654 இந்தியர்களை இந்திய அரசு விமானங்கள் மூலம் மீட்டுகொண்டு வந்தது.

அதாவது இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்திய அரசு துரிதமான நடவடிக்கையை மேற்கொண்டது. இந்நிலையில் தான் பிப்ரவரி 24, 25 ஆம் தேதி இரண்டு நாட்கள் பயணமாக அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார் எனும் செய்தியையும் இந்திய அரசு அறிவித்தது.

மூன்று வாரங்கள் இரவு பகலாக பணியாற்றி அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை இந்திய அரசு செய்தது. இலட்சக்கணக்கான மக்களுடன் சேர்ந்து நம் இந்தியப் பிரதமர் அமெரிக்க அதிபரை வரவேற்று உலகே திரும்பிப்பார்க்கும் படி நிகழ்ச்சிகளை நடத்தினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வரும் முன்பிருந்த காலக்கட்டங்களில் நூற்றுக்கணக்கில் நாள்தோறும் கொரோனா நோய்க்கு சீனாவிலும் மற்ற நாடுகளிலும் பலியாகிக் கொண்டிருந்தனர்.

கேரளா போன்ற இன்னும் பிற மாநிலத்திலும் நோய் பரவத் தொடங்கியிருந்தது. உலகில் பல நாடுகளுக்கும் பரவத்தொடங்கியதில் அத்தனை நாடுகளும் தற்காப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு போராடிக்கொண்டிருந்தன.

கொரோனா வைரஸிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளச்சொல்லி அமெரிக்க அதிபர் எச்சரிக்கைச் செய்தியை அறிவித்தார்.

சில கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஈரான், இத்தாலி நாடுகளெல்லாம் தாக்குதலுக்குள்ளாகி கதறிக்கொண்டிருந்தபொழுது 130 கோடி மக்களுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நம் இந்தியாவில் அந்நேரத்தில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை அறிய அந்நாட்களில் வெளியான ஊடகச்செய்திகளை பின் நோக்கிப்பார்த்தால் புரியும்.

அமெரிக்க அதிபரை வரவேற்கும் ஏற்பாடு, ஜக்கி வாசுதேவ் நடத்தும் பக்தர்கள் வழிபாட்டை குடியரசு துணைத்தலைவர் தொடங்கி வைக்கும் மகா சிவராத்திரி விழா, நடிகர் ரஜினிகாந்த் அறிவிக்கப்போகும் அரசியல் கட்சி பற்றிய செய்திகள், விவாதங்கள் இவைகளில் மட்டுமே அனைவரும் கவனம் செலுத்தி செய்திகளை வெளியிட்டனர்.

இதனிடையில் அவ்வப்போது வெளிவரும் சின்னச்சின்ன செய்திகளைக் கண்டு நம் மக்களும் ‘கொரோனா வைரஸ் யாரையோ கொன்று கொண்டிருக்கிறது! நமக்கெல்லாம் அது வரவே வராது’ என நினைத்துக்கொண்டிருந்தனர்.

கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு விமானம் மூலமாகவும் மிகச்சிறிய அளவு கப்பலில் பயணம் செய்தவர்கள் மூலமாகவும் மட்டுமே பரவியது.

சீனாவின் வுஹான் நகரில் சிக்கியிருந்த மக்களை அழைத்து வந்த நாளான பிப்ரவரி 1, 2 ஆம் தேதிகளிலிருந்தே இந்தியாவுக்குள் நுழையும் அனைத்து விமானங்கள் மற்றும் கப்பல்களில் மிகத்தீவிரமான சோதனைக் கட்டுப்பாடுகளை விதித்து அத்தனைப்பேரையும் தனிமைப்படுத்தியிருக்க வேண்டும்.

50 நாட்கள் கழித்து இப்பொழுது 130 கோடி மக்களை வீட்டுக்குள் முடக்கிய அரசு, உடனடியாக கொரோனாவை இறக்குமதி செய்த விமான, கப்பல் போக்குவரத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட நடவடிக்கையைத்தான் அப்பொழுது சீன மேற்கொண்டது.

சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் மூலம் வைரஸ் பரவி விடும் என்பதால் அனைத்து போக்குவரத்தையும் தடைசெய்து 90 கோடி மக்களை வளையத்திற்குள் கொண்டு வந்தது.

இந்திய ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் நாடாளுமன்றம், சட்டமன்றம் நடத்துவதிலும், அவரவர்களுடைய கட்சியை வளர்ப்பதிலும் முனைப்போடு இருந்துவிட்டு இப்பொழுது வந்து ஆளாளுக்கு மக்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறனர்.

இப்பொழுது 24 மணி நேரமும் மக்களை உறங்க விடாமல் செய்துகொண்டிருக்கும் ஊடகங்கள் இதற்கான விழிப்புணர்வை அப்பொழுது அரசுக்கும், மக்களுக்கும் ஏற்படுத்தத் தவறி விட்டன!.

உலகம் முழுக்க நிகழ்ந்த கொரோனா பலிச்செய்திகளை வெளியிட்டுக்கொண்டே நேரலையில் அமெரிக்க அதிபரையும், இந்திய பிரமதரையும், ரஜினிகாந்தையும் துரத்திக்கொண்டிருந்தார்கள்.

அமெரிக்க அதிபரின் வரவால் இந்திய நாடு மாபெரும் வளர்ச்சியை அடையப்போகிறது எனவும் செய்தி வெளியிட்டார்கள்.

ஆனால், கொரோனாவை அலட்சியப்படுத்தியவர்களும், ஊடகங்களும் தான் கொரோனாவின் தீவிரத்தை மக்கள்தான் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என இப்பொழுது குறைபட்டுக் கொள்கிறார்கள்.

இருக்கப்பட்டவர்கள் மூன்று வாரம் என்ன, இன்னும் மூன்று மாதங்கள், மூன்று ஆண்டுகள் ஆனாலும் வீட்டுக்குள் இருந்தே உயிர் வாழ்ந்து விட முடியும்.

தினம் வெளியில் ஓடி உழைத்தால் மட்டுமே பிழைக்க முடியும் எனும் நிலையில் வெறும் கை கால்களை நம்பியுள்ள 75 கோடி மக்கள் நம்நாட்டில் இருக்கிறார்கள். இம்மக்களுக்கான உயிர் பாதுகாப்பு, மூன்று வேளை உணவு, அடிப்படைத் தேவைகளை எவ்வாறு எங்கிருந்து தரப்போகிறார்கள்?

ஏற்கனவே வேலையில்லாத்திண்டாட்டத்தில் அல்லல்பட்டு குடும்பம் நடத்தி வயிற்றைக் கழுவி வந்த மக்கள் இப்போது உயிரை எவ்வாறு காப்பாற்றிக்கொள்வது எனும் கூடுதலான மனச்சுமையால் இடிந்துபோய் கிடக்கிறார்கள்.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இம்மக்களால் பிழைப்பின்றி வீட்டுக்குள் முடங்கிக்கிடக்க முடியும் என்பது தெரியவில்லை.

நிலைமை மீறும்பொழுது தன் உயிர் போனாலும் பரவாயில்லை, பிள்ளைகள், மனைவி, தாய் தந்தையரைக் காப்பாற்ற வேறுவழி தெரியாமல் வீதிக்குள் இறங்குவார்கள். அதற்குள்ளாக அவர்களின் தேவைகள் தீர்க்கப்பட வேண்டும். இதற்காக என்னென்னத் திட்டங்கள் அரசிடம் இருக்கிறது எனத் தெரியவில்லை.

ஒருபக்கம் நோய் பரவுதலின் மின்னல் வேகத்தீவிரம்! மற்றொரு பக்கம் மக்களின் உயிர் காப்புப் போராட்டம்! இரண்டையும் அரசுதான் தீர்க்க வேண்டும். அரசு அறித்துள்ள உதவித்தொகையும், உணவுப்பண்டங்களும் கூடிய வரை அவரவர் வீடுகளுக்கே சென்றடைய உடனே ஏற்பாடு செய்ய வேண்டும்.

மூடியுள்ள மதுபானக்கடைகள் மீண்டும் திறக்கப்படலாம் எனும் செய்தி கசிகின்றது. தயவு செய்து உங்கள் கால்களில் விழுந்து கேட்கிறேன். அரசாங்கம் நடத்த பணம் போதவில்லை, அதனால்தான் மதுக்கடைகளை திறக்க வேண்டியிருக்கிறது எனும் காரணத்தைக்கூறி மீண்டும் திறந்து விடாதீர்கள். எங்களிடமிருந்து உயிரைத்தவிர எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்!

மதுக்கடைகளைத் திறந்தால் ஏற்படும் பாதிப்புகளை கற்பனையில் கூட நினைத்துப்பார்க்காத அளவுக்கு கொண்டு போய் விட்டு விடும். நீங்கள் சொல்கிறபடி இப்பொழுதே சொல்வதை கேட்காத மக்கள் குடித்து நிதானத்தை இழப்பார்கள்! வைரஸ் பரவ மேலும் மேலும் அது வழி வகுத்து விடும்!

உலகில் மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் அவ்வப்போது இப்படிப்பட்ட கொரோனா போன்ற நோய்களை சந்தித்துதான் மனித இனம் தப்பிப்பிழைத்து வந்திருக்கிறது. நம் நாட்டிலுள்ள வெப்பநிலை மக்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதில் உண்மையில்லாமல் இல்லை.

இதுதான் தற்போதைக்கு நமக்கெல்லாம் இருக்கின்ற ஒரே ஒரு சிறிய நம்பிக்கையும் ஆறுதலும்! அமெரிக்க வல்லாதிக்க அரசே ஏப்ரல் மாதத்திற்குள் செயற்கை மூச்சு தந்து உயிர்பிடித்து வைத்திருக்கும் வெண்டிலேட்டர் கருவிகளை 6 ஆயிரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என கூறியிருக்கிறது.

இத்தனை லட்சம் மக்களுக்கு நாம் எத்தனைக் கருவிகளை வைத்திருக்கிறோம் என்பது யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்.

நடந்து முடிந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதால் இந்த ஏழை எளிய மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை.

நீங்கள் கூறுவதையெல்லாம் நாங்கள் கேட்கிறோம்! நாங்கள் எதிர்பார்ப்பதை நீங்கள் ஒரு நொடிகூட தாமதிக்காமல் உடனே மேற்கொள்ளுங்கள். எங்களின் உயிரைக்காப்பாற்றுங்கள்!

தங்கர் பச்சான்
30.03.2020
சென்னை 600032

Thangar Bachan slam Media in Corona Virus alert

வேப்பிலை.. நிலவேம்பு நீர்… கொரோனா தடுப்பில் அம்மா உணவகம் தீவிரம்

வேப்பிலை.. நிலவேம்பு நீர்… கொரோனா தடுப்பில் அம்மா உணவகம் தீவிரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amma Unavagam in action to prevent from Corono Virusஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைச் செய்துவருகிறது ‘தமிழ் விஸ்வகர்மா சமுதாய தொழில் சேவா சங்கம்.’

அந்தவகையில், 30.3.2020 அன்று சென்னை நெற்குன்றம் பகுதிக்குட்பட்ட மேட்டுக்குப்பம் ‘அம்மா உணவகம்’ மூலம் எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கத் தீர்மானித்தனர்.

அதன்படி, அன்றைய தினம் மதியம் அம்மா உணவகத்துக்கு வந்தவர்கள் சாப்பிட்டதற்கான தொகையை மேற்குறிப்பிட்ட சங்கத்தினர் செலுத்தினார்கள்.

கொரோனா வைரஸ் பரவாமலிருப்பதற்கான தடுப்பு முயற்சியாக அம்மா உணவகத்துக்கு சாப்பிட வருபவர்கள், சாப்பிடும்முன் மஞ்சள் தூளும் வேப்பிலையும் கலந்த கரைசலில் கை கழுவிவிட்டு சாப்பிடும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டுமல்லாமல் ஒரு தட்டில் மிளகு, கல் உப்பு, வேப்பிலைக் கொழுந்து என மூன்றையும் கலந்து வைத்திருந்தார்கள்.

சிறிதளவு உப்பு, இரண்டு மூன்று மிளகு, ஒன்றிரண்டு வேப்பிலைக் கொழுந்து மூன்றையும் மென்று விழுங்குவது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் எனவும், கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் சூழலில் விழிப்புணர்வுக்காக அவற்றை வைத்திருப்பதாக சொன்னார்கள் அம்மா உணவக நிர்வாகிகள்.

அது தவிர, நிலவேம்புக் குடிநீரும் வைக்கப்பட்டிருந்தது. நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரிப்பதற்காக, உணவகத்திற்கு வருகிறவர்கள் நிலவேம்புக் குடிநீரைக் குடிக்கவும் தேவையெனில் பாட்டில்களில் எடுத்துச் செல்லவும் செய்யலாம் என்றும் தெரிவித்தார்கள்.

Amma Unavagam in action to prevent from Corono Virus

கொலைக்கார கொரோனா: முதல் கட்டம் முதல் முடிவு வரை ஒரு பார்வை

கொலைக்கார கொரோனா: முதல் கட்டம் முதல் முடிவு வரை ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Covid 19 Know about the four stages of Corona Virusஇந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது 2 கட்டங்களை எட்டியுள்ளது. 3 வது கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.

அது என்னங்க.. முதல் கட்டம். 2வது கட்டம் என்ற விழிப்புணர்வை நம்மிடையே பெரும்பாலானவர்களிடம் இல்லை. எனவே அதுபற்றிய ஒரு விரிவான விளக்கம் இதோ….

கொரோனா முதற்கட்டம் (Imported stage )

வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டு திரும்பி இந்தியர்கள் தங்களுக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியாமலே தாயகம் திரும்பி விடுகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

சோதனை மூலம் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படுகிறது. இந்தியாவுக்கு சுற்றுலா வந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு பணிகளுக்காக சென்றவர்கள் என விமான நிலைய சோதனைகளில் கண்டறியப்படுகிறது. இதுதான் முதற்கட்டம்.

கொரோனா 2வது கட்டம் உள்ளூர் பரவல் (Local transmission from infected)

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தங்களது உறவினர்களுடன் தொடர்பு கொள்வதால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது.

இவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதன் மூலம் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.

அதாவது வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் இந்த நோய் தொற்றுகிறது. இதுதான் 2வது கட்டம்.

தற்போது நம் நாடு இந்தியா 2 ஆம் கட்டத்தில் உள்ளது.

கொரோனா 3வது கட்டம் (Community transmission)

கொரோனா வைரஸ் பாதிப்புப்புக்குள்ளானவர்கள் தங்களது நிலையை உணராமல் பல இடங்களுக்கும் செல்வதால் இது மேலும் பரவுகிறது.

அதாவது பொது இடத்தில் செல்லும்போது அவர்கள் தொடும் பொருட்கள் மனிதர்கள் மூலம் இந்த வைரஸ் கிருமி மற்ற மனிதர்களுக்கும் பரவிவிடுகிறது.

கொரோனா 4வது கட்டம்.. (Epidemic)

எதன் மூலமாக வைரஸ் பரவியது என அறியமுடியாத அளவிற்கு உள்நாட்டில் அதீத தன்மையுடன் வைரஸ் தொற்று பரவுவது நான்காவது கட்டமாகும்.

வரையறுக்கப்பட்ட அளவைத் தாண்டி அனைவருக்கும் பரவும் ஆபாயம் ஏற்பட்டால் அது Epidemic என அழைக்கப்படுகிறது.

குறிப்பிட்ட அளவைத் தாண்டி அதாவது வெளிநாட்டு பயணிகள் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தாண்டி மற்றவர்களுக்கும் பரவும் கொள்ளைநோய் என்பதையே Epidemic எனக் குறிப்பிடுகிறோம்.

நாம் 3வது கட்டத்தை எட்டக்கூடாது என நம் அரசாங்கம் போராடி வருகிறது.

நாமும் அதை உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லையென்றால் நாம் நினைத்துக கூட பார்க்க முடியாத கட்டத்தை எட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

ஆகவே சமூக இடைவெளியை ஏற்படுத்த நம்மை தனிமைப்படுத்தி வீட்டிலேயே இருப்போம். கொரோனாவை நாம் கொல்வோம்.

Covid 19 Know about the four stages of Corona Virus

கொரோனா பாதித்தவர்கள் 66ஐ தாண்டியது.; எடப்பாடி பழனிச்சாமி வேதனை

கொரோனா பாதித்தவர்கள் 66ஐ தாண்டியது.; எடப்பாடி பழனிச்சாமி வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

CM Edappadi Palanisamy talks about Corono updates in Tamilnaduகோவிட் 19 என்றழைக்கப்படும் கொரோனா என்ற கொடிய நோயை கட்டுப்படுத்த இந்திய அரசு மற்றும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அதன்பின்னர் அவர் கூறியதாவது…

நேற்றுவரை கொரோனா பாதித்துள்ளவர் எண்ணிக்கை 50 ஆக இருந்தது.

தற்போது மேலும் 17 பேர் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 67ஆக உயர்ந்துள்ளது.

இதில் 5 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர்.

கொரோனா அறிகுறியுடன் 1,925 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அறிகுறியுடன் காணப்படும் நபர்களை மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்த முடியும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஊரடங்கு உத்தரவு சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவது மக்களை துன்புறுத்துவதற்காக அல்ல.

இது போன்ற ஒரு சவாலான நிலையை தமிழக அரசு எதிர்கொண்டது இல்லை.

கொரோனா தடுப்பு பணியில் ஒன்றரை கோடி முகக்கவசங்கள் வாங்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.”
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்

CM Edappadi Palanisamy talks about Corono updates in Tamilnadu

More Articles
Follows