24 மணி நேரத்தில் 38 விதமான தோற்றம்.; ஜூலியை பாராட்டிய விஜய்ஸ்ரீ

24 மணி நேரத்தில் 38 விதமான தோற்றம்.; ஜூலியை பாராட்டிய விஜய்ஸ்ரீ

julie and vijay sri gஜல்லிக்கட்டு போராட்டமே ஜூலிக்கு மீடியா களத்தில் பிள்ளையார் சுழி போட்டது.

அதன்பின்னர் ஒரு சில படங்களில் நடித்தார். தற்போது விஜய்ஸ்ரீ இயக்கத்தில் பப்ஜி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் 24 மணி நேரத்தில் 38 விதமான தோற்றங்களில் ‘போட்டோ ஷூட்’ நடத்தியுள்ளார் ஜூலி.

அவருக்கு இயக்குனர் விஜய்ஸ்ரீ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘கடின உழைப்பும், தன்னம்பிக்கையும், எதிர் விமர்சனங்களை அடியோடு சாய்க்கும். உன்னை வெல்ல, உலகில் யாரும் இல்லை என்ற உணர்வை தரும்’ என கூறியுள்ளார்.

சூப்பர் ஹிட் ‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக்கில் பார்த்திபன்..?

சூப்பர் ஹிட் ‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக்கில் பார்த்திபன்..?

parthibanசச்சி இயக்கத்தில் பிரித்விராஜ், பிஜூ மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

இப்படத்தின் இயக்குனர் சில மாதங்களுக்கு முன் காலமானார்.

இப்படம் கேரளாவில் வசூல் வேட்டையாடியது.

ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனால் மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலத்த போட்டி உருவானது.

‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் கார்த்தியும் பார்த்திபனும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அந்த தகவலைக் குறிப்பிட்டு பார்த்திபன் விளக்கமளித்துள்ளார்.

“இந்த செய்தி நற்செய்தி ஆகலாம்!ஆனால் இதுவரை தயாரிப்பாளர் திரு கதிரேசனை தவிர அனைவரும் என்னிடம் பேசிவிட்டார்கள். எனவே…” என்று கூறியுள்ளார்.

இதனால் ‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக்கில் பார்த்திபன் இதுவரை நடிக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

ஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவான திரில்லர் ‘எக்கோ’

ஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவான திரில்லர் ‘எக்கோ’

srikanth vidya pradeepஇன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’.

அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் மற்றும் வித்யா பிரதீப் நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஆசிஷ் வித்யார்த்தி நடிக்கிறார்.

தடம், தூள், கில்லி படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இசை: ஜான் பீட்டர்
எடிட்டிங்: சுதர்ஷன்
கலை: மைக்கேல் ராஜ்
நடனம்: ராதிகா
சண்டை பயிற்சி: டேஞ்சர் மணி
ஒப்பனை: ராமச்சந்திரன்
ஆடை வடிவமைப்பு: பாரதி
பாடல்கள் : ஏக்நாத்

செப்டம்பர் இரண்டாம் வாரம் முதல் சென்னையில் படப்பிடிப்பு துவங்குகிறது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது.

Echo 01

பிரபலங்கள் பாராட்டிய ‘குருடனின் நண்பன்’ குறும்படம் !

பிரபலங்கள் பாராட்டிய ‘குருடனின் நண்பன்’ குறும்படம் !

kurudanin nanbanமுகவரி இயக்குனர் வி இசட் துரை அவர்களின் அசோசியேட் இயக்குனரின் குறும்படம் ‘குருடனின் நண்பன்’ நேற்று திரையுலக பிரபலங்களால் யூடியுபில் வெளியிடப்பட்டது.

நடிகர்கள் பிரேம்ஜி, டேனியல் பாலாஜி , கன்னிமாடம் ஶ்ரீராம் கார்த்திக், வெற்றி சுடலை, தயாரிப்பாளர்கள் பிக் பிரிண்ட் கார்த்திக், லிப்ரா ரவீந்தர் சந்திரசேகர் அவர்கள் படத்தை வெளியிட்டு பாராட்டினர்.

“கமர்சியல் குறும்படத்துக்கு நடுவுல கன்டென்டோட ஒரு சிறுகதை போல ‘குருடனின் நண்பன்’ இருந்ததாக நடிகர் டேனியல் பாலாஜி பாராட்டினார்.

கடந்த வாரம் இந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு இந்த குழுவினரை வெகுவாக பாராட்டினார் வி இசட் துரை. குழுவினருக்கு தன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

டாய்னா பிக்சர்ஸ் (Diana Pictures) இதனை தன் யுடியுப் சேனலில் வெளியிட்டது.

நடிகர்கள்: மனோ, மில்லர்

இயக்கம்: முரளி K

ஒளிப்பதிவு: K.கார்த்திக்

இசை: SPURUGEN பால்

படத்தொகுப்பு: AVS பிரேம்

தயாரிப்பு: ஒளி நாடா
Attachments area
Preview YouTube video Kurudanin Nanban Tamil Short Film (2020) | Murali K | VZ Dhorai | DAINA PICTURES

டெங்குக்கு சங்கு ஊத ஐடியா.; பெண் கொசுக்களை காதலித்து உறவாடி மலடாக்கும் ஆண் கொசுக்கள்

டெங்குக்கு சங்கு ஊத ஐடியா.; பெண் கொசுக்களை காதலித்து உறவாடி மலடாக்கும் ஆண் கொசுக்கள்

dengue mosquitoமக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகும்.

இங்கு மொத்தம் 60 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு ஆண்டுக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் டெங்கு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம்.

ஆண் கொசுக்கள் மனிதர்களைக் கடிக்காது என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். பூக்களிலுள்ள தேனை மட்டுமே அருந்துவது தான் ஆண் கொசுக்கள்.

முட்டைகளை உற்பத்தி செய்ய இரத்தம் தேவை என்பதால் பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களைக் கடித்து தனக்கு தேவையான ரத்தத்தை குடிக்கிறது.

எனவே தான் டெங்கு, ஜிகா போன்ற வைரஸ் கிருமிகள் மனிதர்களுக்கு பரவுகிறது.

அண்மையில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு, 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், கொசு தொல்லை தாங்க முடியாமல் அதை கட்டுப்படுத்த சூப்பர் ப்ளானில் முயற்சியில் இறங்கியுள்ளது சிங்கப்பூர் அரசு.

இந்தக் கொசுக்களை வோல்பாசியா என்ற பாக்டீரியாவால் தாக்கி அதனை அடைத்து மரபணு மாற்றப்பட்டு, மலட்டுத் தன்மையுள்ளதாக மாற்றம் செய்கின்றனர்.

அதன்பின்னர் ஆண் கொசுக்கள் மரபணு மாற்றப்பட்டு பெண் கொசுக்களுடன் பழக விடுகின்றனர்.

ஆண் கொசு உறவில் ஈடுபட்டாலும் பெண் கொசுவால் முட்டை பொரிக்க முடியாது.

அப்படியே முட்டையிட்டாலும் அந்த முட்டைகள் குஞ்சு பொரிக்காதாம்.

அதோடு, பெண் கொசுக்களை வாழவிடாது கொன்றுவிடும் என்கின்றனர்.

ஆனால், தொடர்ந்து வாழ்ந்து அதன் மரபணுக்களைப் பரப்பிக்கொண்டே இருக்கும்.

இதன் மூலம், காலப்போக்கில் ஆபத்தை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்களின் அளவு குறைந்து நோய்ப் பாதிப்பு கட்டுப்படுத்தப்படும்.

கொரோனா அலர்ட்..: புதுச்சேரியில் 32 பகுதிகளில் செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு

கொரோனா அலர்ட்..: புதுச்சேரியில் 32 பகுதிகளில் செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு

lockdown in puducherryயூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கொரோனா தொற்று தினம் தினம் அதிகரித்து வருகிறது.

ஏற்கெனவே ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருந்தாலும் கடந்த 2 வாரங்களாக செவ்வாய்கிழமை தளர்வு இல்லாத ஊரடங்கு அமலில் இருந்தது.

தற்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று 12 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிகிச்சை படுக்கை வசதிகள் இல்லாததால் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் வெளியே செல்வதாக முதல்வர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனையடுத்து புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிவேகமாகப் பரவும் 32 பகுதிகளில் வரும் 31ம் தேதி முதல் செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:-

”புதுச்சேரியில் கொரோனா தொற்று இரண்டு மடங்காக அதிகரிக்கும் பகுதிகள், பரவுதல் விகிதம் ஆகியவை கண்காணிக்கப்பட்டுள்ளன..

அதில் கொரோனா தொற்று படுவேகமாகப் பரவும் 32 பகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம்.

இங்கு வரும் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இங்குள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், தனியார் அலுவலங்கள் மூடப்பட்டிருக்கும்.

இப்பகுதி மக்களின் வசதிக்காக அங்குள்ள காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் காலை 6 முதல் 12 மணி வரை திறந்திருக்கும். மருத்துவத் தேவையைத் தவிர வேறு எதற்கும் வெளியே வரக்கூடாது.

முழு ஊரடங்கு பகுதிகளில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், மருந்தகங்கள் மற்றும் பால் பூத் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு உண்டு.

இப்பகுதியைச் சாராதோர் ஊரடங்கு பகுதிகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இப்பகுதிகளில் மருத்துவக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

இப்பகுதி எல்லையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். விதிகளை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு பகுதிகளின் பெயர்கள்:-

புதுச்சேரி சண்முகாபுரம், தட்டாஞ்சாவடி, குண்டுபாளையம், திலாசுபேட், தென்றல் நகர், ஐயப்பன் நகர், சக்தி நகர், குமரகுருபள்ளம், பொறையூர்பேட் -புதுநகர், பங்கார்பேட், கோவிந்தசாலை, செந்தாமரை நகர், சோலை நகர், வைத்திக்குப்பம், முத்தியால்பேட்டில் முத்தைய முதலியார் தெரு, செயின் ரொசாரியோ தெரு, காட்டாமணிக்குப்பம் தெரு, உளவாய்க்கால், தருமபுரி தெரு, அனிதா நகர், ஓ.கே.பாளையம் அய்யனார் கோயில் தெரு, தியாகமுதலியார் நகர், முல்லை நகர், பெரியார் நகர், கங்கையம்மன் கோயில் தெரு, குறிஞ்சி நகர், மடுவுபேட், பெத்துசெட்டிபேட், தில்லைநகர் முதல் வசந்தம் நகர் வரை, கணுவாபேட் சாலை ஜங்ஷனிலுள்ள புதுநகர், ஆர்.கே. நகர், பிச்சவீராம்பேட் 1,2,3,4 வாய்க்கால் தெரு, ஜெ.ஜெ. நகர், ரெயின்போ நகர், மற்றும் பெருமாள் கோவில் தெரு.

More Articles
Follows