கதிரேசன் தயாரிப்பில் இணைந்து நடிக்கும் லாரன்ஸ் & எல்வின்

கதிரேசன் தயாரிப்பில் இணைந்து நடிக்கும் லாரன்ஸ் & எல்வின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன், ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரித்து இயக்கிய ‘ருத்ரன்’ படம் சமீபத்தில் பெரும் வெற்றியை பெற்றது.

அதே போன்று கதிரேசன் தயாரித்து இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த ‘டைரி’யும் வெற்றிப் படமாகும். இவற்றைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் மற்றும் இன்னாசி பாண்டியன் ஆகியோருடன் தயாரிப்பாளர் கதிரேசன் மீண்டும் இணைந்துள்ளார்.

விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் ஆக உருவாக உள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் நாயகனாக நடிக்கிறார்.

மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் இத்திரைப்படம் தயாராகிறது.

பிரபல தெலுங்கு நடிகையான வைஷாலி ராஜ் இப்படத்தின் மூலம் நாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கிய நிலையில் சென்னை, தென்காசி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

லாரன்ஸ்

படத்தைப் பற்றி பேசிய இயக்குநர் இன்னாசி பாண்டியன்…

“இது ஒரு முழு நீள ஆக்ஷன் திரில்லர் திரைப்படம். இந்த கதையை தான் நான் எனது முதல் திரைப்படமாக இயக்க இருந்தேன்.

ஆனால் ஒரு சில காரணங்களால் அது இயலவில்லை. எனவே இதை எனது இரண்டாவது படமாக தற்போது இயக்குகிறேன்.

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தயாரிப்பாளர் கதிரேசன் அவர்களுக்கு நன்றி,” என்று கூறினார்.

ஆர். சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கே பி ஒய் வினோத், விஜே தணிகை, சென்றாயன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, ‘டிமான்டி காலனி’ & ‘டைரி’ உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவை கையாளுகிறார்.

படத்தொகுப்பை வடிவேலு விமல்ராஜ் மேற்கொள்ள, சண்டை பயிற்சிக்கு பேண்ட்டம் பிரதீப் பொறுப்பேற்றுள்ளார்.

பாடல்களை ஞானகரவேல் எழுத படத்தின் வசனங்களை ஞானகரவேல் மற்றும் இயக்குநர் இன்னாசி பாண்டியன் இணைந்து எழுதி உள்ளனர்.

கலை இயக்கத்திற்கு ராஜு பொறுப்பேற்க ஷேர் அலி உடைகளை வடிவமைக்கிறார்.

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

லாரன்ஸ்

Raghava Lawrence’s next with his brother Elviin to be directed by Innisai Pandiyan

ஒரு வழியாக சில வருடங்களுக்குப் பிறகு ‘துருவ நட்சத்திரம்’ பட செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்

ஒரு வழியாக சில வருடங்களுக்குப் பிறகு ‘துருவ நட்சத்திரம்’ பட செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி கொண்டிருந்த படம் ‘துருவ நட்சத்திரம்’.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா நடிக்க இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

கடந்த 2017-ம் ஆண்டு இப்பட டீசர் வெளியானது. மேலும் இதில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘ஒரு மனம்’ பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

இதனைத் தொடர்ந்து 2018 19 20 21 22 என 5 வருடங்களுக்கு மேலாக துருவ நட்சத்திரத்தின் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அவ்வப்போது ஏதாவது தகவல் வரும் ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

சில மாதங்களுக்கு முன் படத்தின் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் படத்தின் இசைக் கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் திரையில் சந்திப்போம் என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் படத்தின் 2-வது சிங்கிள் பாடல் ஜூலை 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிச்சயமாக இந்த அறிவிப்பு கௌதம் மேனன் மற்றும் விக்ரம் ஆகியோரது புதிய கூட்டணியை எதிர்பார்க்கும் சினிமா ரசிகர்களுக்கு புது உற்சாகத்தை கொடுக்கும் என நம்பலாம்

Heralding the arrival of DHRUVA NATCHATHIRAM with this song that’s releasing on the 19th..

நான் தான் கிங்.. நான் வச்சது தான் ரூல்ஸ்.; மிரட்டும் ஸ்டைலிஷ் ரஜினி பன்ச் டயலாக்

நான் தான் கிங்.. நான் வச்சது தான் ரூல்ஸ்.; மிரட்டும் ஸ்டைலிஷ் ரஜினி பன்ச் டயலாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

எனவே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தினம் தினம் எகிறி வருகிறது.

மேலும் தமன்னா ஆடி பாடிய ‘காவாலா..’ பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனதை தொடர்ந்து அடுத்த பாடலை ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்த பாடல் ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று ஜூலை 15ஆம் தேதி ஹ்க்கூம்.. டைகர் கட்டளை பாடலின் பிரிவியூ வீடியோ வெளியாகி உள்ளது.

இதில்.. “இங்க.. நான் தான் கிங்.. நான் வச்சதுதான் ரூல்ஸ்.. ரூல்ஸ் அடிக்கடி மாத்திக்கிட்டே இருப்பேன்.. அதை கேட்டுகிட்டு கப்சிப்ன்னு இருக்கணும் இல்லன்னா.. கண்ட துண்டமாக வெட்டி கரச்சிடுவேன் என ரஜினிகாந்த் அதிரடியாக பஞ்ச் டயலாக் பேசியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர்

Hukum Preview video from Jailer goes viral

EXCLUSIVE ஹீரோயின்ஸ் ட்ரீம்ஸை நினைவாக்கும் ட்ரீம் வாரியர்ஸ்.; ஜோதிகா – நயன்தாரா – ஐஸ்வர்யா வரிசையில் கீர்த்தி

EXCLUSIVE ஹீரோயின்ஸ் ட்ரீம்ஸை நினைவாக்கும் ட்ரீம் வாரியர்ஸ்.; ஜோதிகா – நயன்தாரா – ஐஸ்வர்யா வரிசையில் கீர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நாயகர்களை மாஸ் ஹீரோக்களாக காட்டி பல படங்கள் வந்து கொண்டுஇருக்கின்றன. இது எழுதப்படாத விதியோ? என்னவோ.?

எப்போதும் ஹீரோக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும் படங்களில் பிரபல நாயகி இருந்தாலும் அவருக்கு பெரிதாக ஸ்கோப் இருக்காது.

எனவே தங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் கிடைக்காதா? என பல நாயகிகள் கனவு கண்டு வருகின்றனர்.

1990களில் நடிகை விஜயசாந்திக்கு அதுபோல கதையம்ச படங்கள் பல கிடைத்தன. ஹீரோக்களை ஓரம் கட்டி விட்டு அதிரடியாக பல ஆக்ஷன் படங்களை கொடுத்தார்.

பி வாசு இயக்கிய ‘மன்னன்’ படத்தில் ரஜினிக்கு நிகராக விஜயசாந்திக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1980 – 90களில் மறைந்த இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கிய பல படங்களில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே தான் இவரது படங்களில் நடித்த ரேவதி சரிதா சுகாசினி உள்ளிட்ட பல நடிகைகளுக்கு இன்று வரை நல்ல பெயர் உண்டு.

அதுபோல ஏவிஎம் நிறுவனமும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்களை தயாரித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.

சமீபகாலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் படங்களை தயாரித்து வருகிறது ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ். இதன் தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரகாஷ் மற்றும் எஸ் ஆர் பிரபு ஆகியோர் தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து வருகின்றனர்.

இதுவரை 41 படங்களை தயாரித்த நிலையில் இன்று ஜூலை 15ஆம் தேதி இவர்களது 42வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இதற்கு முன்பு ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்த அதிதி பாலன் நடித்த ‘அருவி’, ஜோதிகா நடித்த ‘ராட்சஷி’, நயன்தாரா நடித்த ‘ஓ2’, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘ஃபர்ஹானா’ ஆகிய படங்களில் ஹீரோயின்கள் முதன்மையாக சித்தரிக்கப்பட்டிருந்தனர்.

இந்த படங்களை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

ட்ரீம் வாரியர்ஸ் இன்று ஜூலை 15ஆம் தேதி புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ‘கண்ணிவெடி’ என தலைப்பிட்டு இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

கணேஷ் ராஜ் என்பவர் இந்த படத்தை இயக்க விஜே ரக்க்ஷன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மற்றொரு முக்கிய வேடத்தில் நமிதா கிருஷ்ணமூர்த்தி நடிக்க மாதேஷ் மாணிக்கம் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார்.

கண்ணிவெடி

Dream Warriors Kannivedi starring Keerthy

நடிகர் ரவீந்திர மகாஜானி உடல் 3 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு.!

நடிகர் ரவீந்திர மகாஜானி உடல் 3 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் சினிமாவிலும், மராத்தி சினிமாவிலும் நடிகர், இயக்குநராக திகழ்ந்தவர் ரவீந்திர மஹாஜானி(77).

அவர், ‘மும்பை சா பாஜ்டார்’, ‘ஜூன்ஜ்’, ‘கலத் நகாலத்’ உள்ளிட்ட மராத்தி படங்களில் நடித்து உள்ளார்.

2019-ம் ஆண்டு வெளியான அஷுதோஷ் கவுரிகரின் ‘பானிபட்’ என்ற படத்திலும் அவர் நடித்து உள்ளார்.

இந்த நிலையில், நடிகர் ரவீந்திர மகாஜனி, புனேவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மர்மமான முறையில் மரணம் அடைந்து கிடந்து உள்ளார்.

போலீசாரின் தகவலின் படி, நேற்று மாலை 4.30 மணியளவில் அவரது குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்டு, அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரைத் தொடர்புகொண்டனர்.

இதனை தொடர்ந்து, போலீசார் உடனடியாக அவரது இல்லத்திற்கு சென்று, உடலை மீட்டெடுத்த போலீசார் அவர் இறந்து 3 நாட்கள் இருக்கும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

அதன்பின்னரே, அவரது மரணத்திற்கான காரணம் பற்றி கண்டறியப்படும். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும், நடிகர் ரவீந்திர மஹாஜானி, அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டது திரையுலகில் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bollywood actor ravindra mahajani passes away mysteriously

ஹரி – விஷால் இணையும் பட சூட்டிங் அப்டேட்.; இசையமைப்பாளர் இவரா.?

ஹரி – விஷால் இணையும் பட சூட்டிங் அப்டேட்.; இசையமைப்பாளர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இப்படம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு (செப்டம்பர் 15) அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விஷால் 34

இதைத்தொடர்ந்து விஷாலின் 34-வது இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார்.

இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஷால் 34

விஷாலின் 34-வது படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், இதன் படப்பிடிப்பு இன்று ஜூலை 15 முதல் தொடங்குகிறது எனவும் அறிவித்துள்ளனர்.

விஷால் 34

Devi Sri Prasad to compose music for Vishal’s film with Hari

More Articles
Follows