பாலியல் கொடுமைகளை தடுக்க சொந்த கையில் சொர்க்கம்; இருட்டு அறையில் முரட்டு குத்து டைரக்டர் ஐடியா

பாலியல் கொடுமைகளை தடுக்க சொந்த கையில் சொர்க்கம்; இருட்டு அறையில் முரட்டு குத்து டைரக்டர் ஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IAMK director santhosh p jeya kumar‘ஹரஹர மஹாதேவகி’ படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி இருக்கும் படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

இதில் கவுதம் கார்த்திக் நாயகனாகவும், வைபவி சாண்டில்யா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.

அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இப்படம் மே 4ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் பேசும்போது, ‘இப்படம் முழுக்க முழுக்க அடல்ட் படம். ஏ சான்றிதழ் பெற்று முற்றிலும் இளைஞர்களுக்காக உருவாக்கி இருக்கிறேன்.

இப்படத்தின் கதையை உருவாக்கிய பிறகு, கவுதம் கார்த்திக்கிடம் சொன்னேன். ஒரு கட்டத்தில் அவரிடம் என்ன சொன்னேன் என்றே எனக்கு தெரியவில்லை.

அவருக்கும் என்ன கேட்டார் என்றே தெரியவில்லை. அப்படியே சூட்டிங் போய் படத்தை எடுத்து முடித்து விட்டோம்’ என்றார்.

இந்த மாதிரி படங்களில் கவுதம் கார்த்திக் நடித்தால் அவருடைய இமேஜ் பாதிக்காதா என்று இயக்குனரிடம் கேட்டதற்கு, கவுதம் கார்த்திக்கு இது போன்ற படங்கள் வருவதில்லை. வித்தியாசமான கதையம்சம் படங்கள்தான் அவரைத் தேடி வருகிறது’ என்றார்.

தற்போது இருக்கும் சூழ்நிலையில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடந்து வரும் நிலையில் இதுபோன்ற படத்தை எடுத்தால் அதை அதிகப் படுத்துவதுபோல் இருக்காதா என்று கேட்டதற்கு, இந்தப் படத்தில் சொந்த கையில் சொர்க்கம் காணுங்கள், அதாவது தன் கையே தனக்கு உதவி என்ற மெசேஜை சொல்லி இருக்கிறோம்’ என்றார்.

மீண்டும் மன்சூரலிகான் உடன் இணைந்த கே.ஆர்.விஜயா

மீண்டும் மன்சூரலிகான் உடன் இணைந்த கே.ஆர்.விஜயா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mansoor Alikhan again teams up with KR Vijaya for Kadamaan Paaraiதனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார் மன்சூரலிகான்.

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார்.

மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் மன்சூரலிகானிடம் கேட்டோம்…

இந்த படத்தில் ஒரு கண்ணியமான அம்மா வேடம் ஒன்று இருந்தது அந்த வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த போது, கே.ஆர்.விஜயா நினைவுக்கு வந்தார்.

ஏற்கனவே நான் தயாரித்த வாழ்க ஜனநாயகம் படத்தின் போது நான் வளந்து வரும் நடிகன் நான் கேட்ட உடனே கே.ஆர்.விஜயா எனக்கு நடித்துக் கொடுத்தார்.

இப்போதும் கடமான் பாறை படத்திலும் திருப்புமுனை கதாபாத்திரத்தில் கண்ணியமான எளிமையான அம்மாவாக நடித்துக் கொடுத்தார். பெரிய நடிகை என்ற எந்த ஒரு கர்வமும் இல்லாமல் அப்போது போல இப்போதும் இருக்கிறார்.” என்றார்.

இந்த படத்தில் மன்சூரலிகான் ஜோடியாக ருக்க்ஷா என்ற கேரள பெண் மிரட்டலான கேரக்டரில் நடித்துள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.

ஒளிப்பதிவு – மகேஷ்.T / இசை ரவிவர்மா பாடல்கள் – விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான்
ஸ்டன்ட் – ராக்கி ராஜேஷ்,
தயாரிப்பு நிர்வாகம் J.அன்வர் ஆக்கம், இயக்கம் மன்சூரலிகான்.

Mansoor Alikhan again teams up with KR Vijaya for Kadamaan Paarai

சிவகார்த்திகேயன் சொன்ன அந்த வார்த்தையை இழந்து நிற்கும் மைம் கோபி

சிவகார்த்திகேயன் சொன்ன அந்த வார்த்தையை இழந்து நிற்கும் மைம் கோபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Mime Gopi missed out Seyal movie chanceவேலைக்காரன் படத்தில் உலகின் தலை சிறந்த சொல் செயல் என அடிக்கடி சொல்வார் சிவகார்த்திகேயன்.

தற்போது அந்த செயல் என்ற பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது. அந்த படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தவற விட்டதை எண்ணி வருந்தி நிற்கிறார் நடிகர் மைம் கோபி.

அது பற்றிய செய்தி பின் வருமாறு…

பிரசன்னா நடிப்பில் மாரிமுத்து இயக்கத்தில் உருவான “கண்ணும் கண்ணும்“ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானேன்.

அதை தொடர்ந்து மெட்ராஸ், மாரி, கபாலி, மாயா, கெத்து, பைரவா, உறியடி, கதகளி, விஜயகாந்த் மகன் நடித்த மதுரைவீரன் போன்ற படங்களில் நடித்திருக்கிறேன்.

வளர்ந்து வரும் நடிகனான எனக்கு எனது வாழ்கையில் இழந்த மிகபெரிய இழப்பாக நினைப்பது “செயல்“ படத்தில் நடிக்க முடியாமல் போனது தான்.

செயல் படத்தில் தண்டபாணி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக என்னிடம் பேசினார்கள்.

அருமையான வேடம் அது அனால் அவர்கள் சொன்ன தேதியில் நான் வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன் அதனால் நடிக்க முடியாமல் போனது அதற்காக அவர்களிடம் வருத்தம் தெரிவித்தேன்.

படம் ரெடியாகி ரிலீசுக்கு தயாராக உள்ளதை தெரிந்து கொண்டு நான் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடமும், இயக்குனரிடமும் கேட்டேன். போய் படம் பார்த்தேன்..நான் தவற விட்ட அந்த தண்டபாணி கேரக்டர் மிக மிக அருமையான கேரக்டர்.

நான் நடிக்க முடியாமல் போன அந்த கேரக்டரில் சந்திரன் என்பவர் நடித்திருந்தார். அவரும் சிறப்பாக நடித்திருந்தார் இருந்தாலும் நான் தவறவிட்ட மிகபெரிய வாய்ப்பு இது.

எல்லா படத்திலும் ஹீரோவுக்குதான் அறிமுகம் பில்டப்பாக இருக்கும் ஆனால் இந்த படத்தில் மாறுபட்டு வில்லன்னுக்குதான் பில்டப் அதிகமாக இருந்தது.

அதனால் இனி எந்த வாய்ப்பும் என் கைநழுவி போகாமல் கவனமாக பார்த்துக் கொள்வேன்” என்றார் மைம் கோபி.

Actor Mime Gopi missed out Seyal movie chance

sivakarthieyan seyal

அடுத்த வாரம் இருட்டு அறையில் முரட்டு குத்து பாக்க ரெடியா.?

அடுத்த வாரம் இருட்டு அறையில் முரட்டு குத்து பாக்க ரெடியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Adult Horror movie Iruttu Araiyil Murattu Kuththu release on 4th May 2018‘ஹரஹர மஹாதேவகி’ படம் எந்த மாதிரியான படம் என்பது தங்களுக்னு நினைவிருக்கலாம்.

அந்த படம் வெற்றியை தொடர்ந்து டைரக்டர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதில் நாயகன், நாயகியாக கவுதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா நடித்துள்ளனர்.

அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இதில் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தை மே 4ம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

என்ன ரசிகர்களே இருட்டு அறையில் முரட்டு குத்து பார்க்க தயாராக இருக்கீங்களா?

ஹரஹர மஹாதேவகி படம் பிடிக்கலேன்னா இந்த படமும் நிச்சயம் பிடிக்காது என கவுதம் கார்த்திக் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Adult Horror movie Iruttu Araiyil Murattu Kuththu release on 4th May 2018

விஷாலுடன் மோத தேதியை அறிவித்தார் அருள்நிதி

விஷாலுடன் மோத தேதியை அறிவித்தார் அருள்நிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishals Irumbu Thirai and Arulnithis Iravukku Aayiram Kangal clash on 11th May 2018கோலிவுட் தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 50 நாட்களாக (மார்ச் 1 முதல் ஏப்ரல் 19 வரை) புதுப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.

தற்போது ஸ்டிரைக் முடிவுக்கு வந்துவிட்டதாலும் கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டதாலும் படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

வருகிற மே 11ஆம் தேதி விஷால் தயாரித்து நடித்துள்ள இரும்புத்திரை படம் வெளியாகிறது.

இது தேதியில் மாற்றம் இருக்கும் என சில தினங்களுக்கு அறிவித்திருந்தார் விஷால். ஆனால் தற்போது இந்த தேதியிலேயே படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர்.

மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுடன் நாயகியாக சமந்தா நடிக்க, வில்லனாக அர்ஜீன் நடித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ளார்.

இதே நாளில் மு. மாறன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள `இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படமும் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அருள்நிதியுடன் மஹிமா நம்பியார், அஜ்மல், வித்யா பிரதீப், சாயா சிங், சுஜா வருணி, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இப்படமானது ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது.

ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் டில்லி பாபு இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

ரெமா மற்றும் வேலைக்காரன் படங்களை தயாரித்த 24 ஏஎம் ஸ்டூடீயோஸ் நிறுவனத்தின் வெளியீட்டு நிறுவனமான 24 பிஎம் என்ற நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Vishals Irumbu Thirai and Arulnithis Iravukku Aayiram Kangal clash on 11th May 2018

ஹாரர் ஆர்வமில்லை; அரசியல்ன்னா அலர்ஜி; அலறும் அரவிந்த்சாமி!

ஹாரர் ஆர்வமில்லை; அரசியல்ன்னா அலர்ஜி; அலறும் அரவிந்த்சாமி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arvind swamy speechஅரவிந்த் சாமி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. சித்திக் இயக்கியுள்ள இப்படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார்.

மேலும் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார்.

இப்படம் மே 11ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது அரவிந்த்சாமி பேசியதாவது…

‘இப்படம் ஏற்கனவே மலையாளத்தில் வெளியாகியுள்ளது. அதில் சில மாற்றங்கள் செய்து தமிழில் படம் உருவாகி இருக்கிறது. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கிறது.

வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்தேன். அப்படத்தை தொடர்ந்து அந்த கதாபாத்திரம் போல் 15 படங்கள் வந்தது. ஆனால், நான் நடிக்க வில்லை.

ஹீரோ, வில்லன் என்று இல்லாமல், நல்ல கதாபாத்திரம் அமைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான். அதில் நடிக்க மாட்டேன். பார்க்கவும் மாட்டேன்.

பேய் இருக்கா, இல்லையா என்ற கேள்விக்கு முதலில் மனிதர்கள் இருக்கிறார்களா? முதலில் நல்ல மனிதரை தேடுவோம். அதன் பின் பேய்யை இருக்கா இல்லையா என்று தேடுவோம்.

அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்கிறார்கள். எனக்கு அரசியல் பற்றி தெரியாது. ஆனால் மக்கள் பிரச்சினை என்றால் குரல் கொடுக்காமல் இருக்க மாட்டேன்’ என்றார்.

இப்படத்தின் தயாரிப்பாளர் முருகன் பேசும்போது…

‘மற்ற ஹீரோக்கள் போல் அரவிந்த் சாமி கிடையாது. அவர் முன் பணம் வாங்காமல் நடித்து கொடுத்துள்ளார். மேலும் மற்ற நடிகர்கள் படத்தில் நடித்து முடித்து விட்டால், தன்னுடைய வேலை முடிந்தது என்று நினைப்பார்கள்.

ஆனால், அரவிந்த் சாமி, படத்தின் பின்னணி வேலைகள் நடக்கும்போது எப்போது முடியும் என்று மிகவும் ஆர்வமாக தெரிந்துக் கொண்டு இப்படம் வெளிவருவதற்கு பெரும் உதவி செய்து வருகிறார்’ என்றார்.

I am not interested in Horror movies and Current Politics says Arvind Swamy

baskar oru rascal meet

More Articles
Follows