குடும்பத்தில் எல்லோருக்கும் கொரோனா..; சங்கடத்தில் சந்தானம் பட ஹீரோயின்

குடும்பத்தில் எல்லோருக்கும் கொரோனா..; சங்கடத்தில் சந்தானம் பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vaibhavi shandilyaதமிழகம் மற்றும் கேரளாவில் மட்டுமல்ல கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

மராட்டியத்தில் அதிகமானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மும்பையில் தங்கி உள்ள நடிகர்கள் கொரோனா தொற்றில் சிக்குகிறார்கள்.

கோலிவுட்டில் சூர்யா & மாதவன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

பாலிவுட்டில் நடிகர்கள் அமீர்கான், மிலிந்த் சோமன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழில் சந்தானத்துடன் சக்கபோடு போடு ராஜா, சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் நடித்த வைபவி ஷாண்டில்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாம்.

இவரது தாய், தந்தையரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் வசிக்கும் மும்பை பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகவும் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறும் வைபவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Santhanam heroine tests positive for COVID 19

கொரோனா 2வது அலை..: வழிபாட்டு தலங்கள் தியேட்டர்கள் டாஸ்மாக்கை மூடக்கோரி கோர்ட்டில் முறையீடு

கொரோனா 2வது அலை..: வழிபாட்டு தலங்கள் தியேட்டர்கள் டாஸ்மாக்கை மூடக்கோரி கோர்ட்டில் முறையீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

corona second wave in tamil nadu (2)உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தற்போது உருவாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் 3000க்கும் மேற்பட்டோர் தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதாவது கடந்த ஒரு மாதமாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

எனவே சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு ஊரடங்கில் சில தளர்வுகளுடன் கட்டுப்பாடு விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் டாஸ்மாக் பார்கள், திரையரங்குகள், வழிபாட்டு தலங்களை மூடக்கோரி மெட்ராஸ் ஐகோர்ட்டில் முறையிடப்பட்டுள்ளது.

A new petition has been filed on madras high court for corona second wave safety

விஜய் டிவி சீரியல்களில் இணையும் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி

விஜய் டிவி சீரியல்களில் இணையும் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

cooku with comali sivaangi (1)பாரதி கண்ணம்மா & ராஜா ராணி-2 சீரியல்களின் சங்கமம் பகுதி தற்போது விஜய் டிவியில் இரவு 9 முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகி வருவதை பார்த்திருக்கலாம்..

இன்று இரவு (மார்ச் 30,2021) 9 மணிக்கு இதனை காணலாம்.

இதில் சூப்பர் குடும்பத்தை தேர்ந்தெடுக்கும் விழாவில் இரண்டு தரப்பு குடும்பங்களும் பங்குபெறுகிறது.

இதில் இன்றைய (மார்ச் 30, 2021) எபிசோடில் சமைக்கும் போட்டி நடக்கவுள்ளது.

முதலில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் உணவை யார் சமைக்க வேண்டும் என்கிற செலக்‌ஷன் முதலில் நடைபெறும்.

இதில் கண்ணம்மாவும் சந்தியாவும் (ஆல்யா மானசா) சமைக்கிறார்கள் என தெரிகிறது.

இந்த நிகழ்ச்சி சமையல் போட்டியின் நடுவர்களாக சரத், பாலா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் குக் வித் கோமாளி சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.

Cooku with comali Sivaangi joins Vijay TV serial

நடிகை ரோஜா MLA எப்படி இருக்கிறார்.? ஆர்.கே.செல்வமணி ஆடியோவில் தகவல்

நடிகை ரோஜா MLA எப்படி இருக்கிறார்.? ஆர்.கே.செல்வமணி ஆடியோவில் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK Selvamani and Roja (2)பிரஷாந்த்தின் ஜோடியாக ‘செம்பருத்தி’ பட மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரோஜா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து முன்னணி நடிகையானார்.

தமிழில் கமலை தவிர (ரஜினி, அஜித், விஜய், சத்யராஜ், பிரபு, கார்த்திக்) பெரும்பாலான ஹீரோக்களுடன் நடித்தும் விட்டார்.

இயக்குனர் செல்வமணியை ரோஜா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள்.

சினிமாவுக்கு பிறகு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது ஆந்திரா மாநிலம் நகரி தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார்.

இந்த நிலையில் ரோஜாவுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டு அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

அவரது உடல் நிலை குறித்து ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி ஆடியோ ஒன்றில்.. “இப்போது ரோஜா நன்றாக இருக்கிறார். அவருக்கு இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகள் செய்துள்ளோம். தற்போது குணமடைந்து வருகிறார்.”

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

Director RK Selva Mani about Actress Roja health

கவின் சிவாங்கி தேஜூ அஸ்வினி இணைந்துள்ள Asku Maaro

கவின் சிவாங்கி தேஜூ அஸ்வினி இணைந்துள்ள Asku Maaro

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Asku Maaro (2)விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் கவின்.

இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

நட்புன்னா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது லிஃப்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார் கவின்.

இதனிடையில் சோனி மியூசிக் வெளியீட்டில் கவின், தேஜூ அஸ்வினி, சிவாங்கி நடித்துள்ள Asku Maaro எனும் பாடல் வெளியாக உள்ளது.

தரண் குமார் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை கு.கார்த்திக் எழுதியுள்ளார்.

சிவாங்கி, தரண்குமார் இணைந்து பாடியுள்ள இந்த பாடலை Dongil Jumbo இயக்கியுள்ளார்.

இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனப்பயிற்சி கொடுத்துள்ளார்.

இந்த பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில் சிவாங்கி கொடுக்கும் ஒரு ஷாக் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Peppy song Asku Maaro promo has been released

அஜித்தின் ‘வலிமை’ பட வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய 2 பிரபல நிறுவனங்கள்

அஜித்தின் ‘வலிமை’ பட வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய 2 பிரபல நிறுவனங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Valimai (1)‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து ‘வலிமை’ படத்திலும் அதே கூட்டணியே தொடர்கிறது.

அதாவது நடிகர் அஜித் + டைரக்டர் வினோத் + தயாரிப்பாளர் போனிகபூர் என இந்த கூட்டணி தொடர்கிறது.

வலிமை படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

‘வலிமை’ பட பர்ஸ்ட் லுக் வரும் மே 1ல் அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகவுள்ளது.

யுவன் இசையமைத்து வரும் ‘வலிமை’ படம் சூட்டிங் முடிவடையும் நிலையில் உள்ளது.

‘வலிமை’ அப்டேட் என்ன என்ன? என எவரைப் பார்த்தாலும் கேட்டு வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

இதனை தொடர்ந்து மே 1-ஆம் தேதி முதல் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வலிமை பட தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் சினிமாஸ் கைப்பற்றியுள்ளதாக போனி கபூரே தெரிவித்துள்ளார்.

Valimai TN theatrical rights has been sold

More Articles
Follows