ஆர்யாவுக்கு வில்லனாக கௌதம் கார்த்திக்.; FIR டைரக்டரின் Mr X

ஆர்யாவுக்கு வில்லனாக கௌதம் கார்த்திக்.; FIR டைரக்டரின் Mr X

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரின்ஸ் பிக்சர்ஸ் ஆர்யா- கவுதம் கார்த்திக் நடிக்கும் *மிஸ்டர் எக்ஸ்* (Mr.X) என்ற படத்தை தங்களின் புதிய தயாரிப்பாக அறிவித்துள்ளது.

இப்படத்தின் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் ஆர்யா கதாநாயகனாகவும், கவுதம் கார்த்திக் வில்லனாகவும் நடிக்கின்றனர்.

எஃப்ஐஆர் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கிய மனு ஆனந்த் இப்படத்தின் கதையை எழுதி இயக்குகிறார்.

மிகப்பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் பல சண்டைக்காட்சிகளின்
படப்பிடிப்பு உகாண்டா மற்றும் செர்பியா போன்ற நாடுகளில் நடைபெற உள்ளது.

மரகத நாணயம், பேச்சிலர், கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார்.

தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு – பிரசன்னா GK.

தயாரிப்பு வடிவமைப்பு ராஜீவன். சண்டைப் பயிற்சி ஸ்டண்ட் சில்வா. கலை இந்துலால் கவீத்.

தயாரிப்பு மேற்பார்வை
A. P பால்பாண்டி. ஆடை வடிவமைப்பு உத்ரா மேனன்

நிர்வாகத் தயாரிப்பு ஷ்ரவந்தி சாய்நாத். இணை தயாரிப்பு
A. வெங்கடேஷ்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக S. லஷ்மன்குமார் தயாரிக்கிறார்.

படத்தில் பங்கேற்கும் மற்ற நடிகர் நடிகைகள் விபரம் விரைவில் வெளியாக உள்ளது.

Mr.X (Tamil) – Official Motion Poster

 Mr X

Arya’s Mr.X movie Motion Poster released

ரஜினிக்கு நடக்கும் ஆச்சர்யங்கள் இப்போ கார்த்திக்கு.! ‘ஜப்பான்’ நாயகனுக்கு ஜப்பான் ரசிகை

ரஜினிக்கு நடக்கும் ஆச்சர்யங்கள் இப்போ கார்த்திக்கு.! ‘ஜப்பான்’ நாயகனுக்கு ஜப்பான் ரசிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரைப்பிரமாண்டமாக, அனைத்து பக்கமும் பொன்னியின் செல்வன் பாகம் 2 வெற்றியை பெற்றுள்ளது. பாகம் 1 இன் எதிர்ப்பார்ப்பை கடந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது.

இப்படத்தினை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்காக தம்பதி சகிதமாக ஜப்பானிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறார் நடிகர் கார்த்தியின் ரசிகை.

பொதுவாக சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தின் முதல் நாள் ஷோவுக்கு தான் இம்மாதிரி ஆச்சர்யங்கள் நடக்கும். ஆனால் தற்போது நடிகர் கார்த்தியின் ரசிகை ஜப்பானிலிருந்து வருகை தந்திருப்பது கோடம்பாக்கத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கார்த்திக்

ஜப்பானிலிருந்து வருகை புரிந்த தெருமி ககுபரி ஃபுயுஜிடா ( Terumi Kakubari Fujieda ) வை நடிகர் கார்த்தி வீட்டுக்கு வரவைத்து அவருக்கு உணவு பரிமாறி உரையாடி மகிழ்ந்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து ரசிகை தெருமி ககுபரி ஃபுயுஜிடா ( Terumi Kakubari Fujieda ) கூறும்பொழுது..

“நான் வேலை நிமித்தமாக சில காலம் இந்தியவில் தங்கியிருந்தேன், அப்பொதிலிருந்து, நான் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகை. பொன்னியின் செல்வன் முதல் பாகம் புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. அதில் கார்த்தி நடிப்பு மிகவும் பிடித்திருந்தது.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஜப்பானில் வெளியாக காலமாகும் என்பதால் உடனே பார்த்தாக வேண்டும் என்று அங்கிருந்து கிளம்பி வந்தோம். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தை பார்த்து மிகவும் என்ஜாய் செய்தேன். மிக அட்டகாசமான படம் என்றார்.

கார்த்திக்

நடிகர் கார்த்தியை சந்தித்தது குறித்து கேட்டபோது ..

மிக சந்தோசமான அனுபவம், #ஜப்பான் படப்பிடிப்பில் மிக பிஸியான நேரத்தில் என்னை சந்திக்க ஒப்புக்கொண்டு என்னை வீட்டுக்கு அழைத்தார். அவர் மனைவி கேசரி பரிமாறினார். மிக எளிமையாக என்னிடம் பழகினார்.

அவருடன் பல விசயங்கள் உரையாடினேன். RRR படம் போல் இந்தப்படத்தையும் ஜப்பானில் பிரமாண்டமாக வெளியிடுமாறு கேட்டேன். ஜப்பானில் தமிழ்ப்படங்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது படக்குழுவை ஜப்பான் அழைத்து வரக் கோரிக்கை வைத்திருக்கிறேன்.

கார்த்தியின் அடுத்த படம் #ஜப்பான் என்ற போது ஆச்சர்யப்பட்டேன். ஆனால் அது ஜப்பான் பற்றிய படமல்ல ஜப்பான் எனும் பெயர் மட்டுமே என்ற போது கொஞ்சம் வருத்தம் தான். ஜப்பான் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளேன். ஜப்பானை வைத்து தமிழ் படங்கள் வர வேண்டும்” என்றார்.

கார்த்திக்

Karthi’s japan fans came to watch and celebrate PS2

மீண்டும் தங்கலான் ஷூட்டிங்கை ஆரம்பித்த இயக்குனர் ரஞ்சித். அனல் பறக்கும் அப்டேட் இதோ!

மீண்டும் தங்கலான் ஷூட்டிங்கை ஆரம்பித்த இயக்குனர் ரஞ்சித். அனல் பறக்கும் அப்டேட் இதோ!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ரஞ்சித் ‘தங்கலான்’ படப்பிடிப்பை மீண்டும் தொடங்க உள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன், விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை சென்னையில் இன்று மீண்டும் தொடங்க உள்ளதாக சமூக ஊடகங்களில் தெரிவித்தது . பொன்னியின் செல்வன் ரிலீஸில் பிஸியாக இருந்த விக்ரம் தற்போது தங்கலான் படப்பிடிப்பிற்காக சென்னை திரும்பியுள்ளார். இப்படத்தின் 80% படப்பிடிப்பை படக்குழுவினர் ஏற்கனவே எடுத்துள்ளனர்.

படம் முழுவதுமாக முடிவதற்குள் இன்னும் இரண்டு ஷெட்யூல்கள் பாக்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Pa Ranjith to resume Chiyaan Vikram’s ‘Thangalaan’ shooting on this date

எனக்கு யாரிடமும் இரக்கமில்லை.. அப்படித்தான் இருப்பேன் – விக்ரம் சுகுமாரன்

எனக்கு யாரிடமும் இரக்கமில்லை.. அப்படித்தான் இருப்பேன் – விக்ரம் சுகுமாரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி, சஞ்சய், இளவரசு, தீபா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘இராவணக் கோட்டம்’.

ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ள இந்த படத்தை கண்ணன் ரவி என்பவர் தயாரித்திருக்கிறார்.

மே 12ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

அப்போது இயக்குநர் விக்ரம் சுகுமாரன் பேசியதாவது..

இந்தப் படத்தில் நான் சிரித்துக் கூட பேசவில்லை, அது கொஞ்சம் குற்ற உணர்வாக இருக்கிறது, இருந்தும் யாரும் என்னை விட்டுக் கொடுக்காமல் பேசினார்கள் அனைவருக்கும் நன்றி.

இளவரசன் அண்ணனை 15 வருடங்களுக்கு முன்னதாகவே என் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்து விட்டேன், இந்தப் படத்தில் அவரை நடிக்க வைத்தது எனக்கு மிகப் பெருமையான விஷயம். நான் ஒரு பிடிவாதமான இயக்குநர், யாரிடமும் இரக்கம் காட்டவில்லை அதற்காக நன்றியும் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

ஆனால் இனிமேலும் அப்படித்தான் இருப்பேன் அதுதான் என் பாவனை. எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு அது , படக்குழுவினர் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன், இந்தப் படம் மிகப்பெரிய நெருக்கடியில் தான் உருவானது, அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி,.

இந்தப் படத்தில் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார் நடிகர் ஷாந்தனு, மிகப்பெரும் பாரத்தைத் தலையில் ஏற்றிக் கொண்டார், அவருக்கு இந்தப் படம் பெயர்ச் சொல்லும் படைப்பாக இருக்கும். கண்டிப்பாக இது மிகப்பெரிய வெற்றியாக அமையும், தயாரிப்பாளர் கண்ணன் சாருக்கு நன்றி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. பத்திரிக்கையாளர்கள் இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் நன்றி.

இந்தப் படத்தில் நாயகனாக ஷாந்தனு நடிக்க, நாயகியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். இயக்குநர் விக்ரம் சுகுமாரன் எழுதி இயக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். தயாரிப்பாளர் கண்ணன் ரவி, KRG Group Of Companies சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளார். “இராவண கோட்டம்” திரைப்படம் மே 12 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Director Vikram Sugumaran Speech at Raavana Kottam Press Meet

கிராமத்து பையன் வேஷம் எளிதல்ல.; தென் மாவட்ட அரசியலை பேசுவோம் – ஷாந்தனு

கிராமத்து பையன் வேஷம் எளிதல்ல.; தென் மாவட்ட அரசியலை பேசுவோம் – ஷாந்தனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி, சஞ்சய், இளவரசு, தீபா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘இராவணக் கோட்டம்’.

ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ள இந்த படத்தை கண்ணன் ரவி என்பவர் தயாரித்திருக்கிறார்.

மே 12ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

அப்போது ஷாந்தனு பேசியதாவது…

இப்படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் என் தந்தை எனக்கு என்ன செய்ய வேண்டும் நினைப்பாரோ அதே போல் நான் முன்னேறத் தேவையான அனைத்தையும் செய்தார். அவருக்கு மிகப்பெரும் நன்றி.

இந்தப்படம் சக்கரக்கட்டி படத்திற்குப் பிறகு மக்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிற படமாக இருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகரைத் தாண்டி, தயாரிப்பு பணிகளும் நான் பார்க்க வேண்டி இருந்தது, தயாரிப்பு மிகக் கடினமான வேலை மிகவும் சிரமப்பட்டேன், படக்குழுவிற்கு நிறைய அனுபவம் இருந்தது, அனைவரும் இப்படத்திற்காகப் பல நாட்கள் தூங்காமல் வேலை செய்தனர். அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நான்கு வருடங்கள் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன், படம் பார்த்த பிறகு எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது, கிராமத்துப் பையனாக நடிக்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக இருந்தேன்.

ஆனால் அது அவ்வளவு எளிதல்ல, காலில் இரத்தம் வர நடித்தேன் எந்த படத்திலும் நான் இதைச் செய்ததில்லை, நான் மட்டும் இல்லை அனைவரும் இது போல கஷ்டப்பட்டு தான் நடித்தனர்.

இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர், இது ஒரு தரமான படைப்பாக இருக்கும், அனைவரும் எங்கள் உழைப்பிற்கு ஆதரவு தர வேண்டும் நன்றி.

Shanthanu speech at Raavana Kottam press meet

ராம்நாடு மக்களின் வாழ்க்கை.. விட்டுக் கொடுக்காத நடிப்பு – ஆனந்தி

ராம்நாடு மக்களின் வாழ்க்கை.. விட்டுக் கொடுக்காத நடிப்பு – ஆனந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி, சஞ்சய், இளவரசு, தீபா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘இராவணக் கோட்டம்’.

ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ள இந்த படத்தை கண்ணன் ரவி என்பவர் தயாரித்திருக்கிறார்.

மே 12ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

அப்போது இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் பேசியதாவது..

மதயானைக் கூட்டம் ஒரு அற்புதமான படைப்பு , இயக்குநர் விக்ரம் சுகுமாரன் சாருடன் இணைந்து பணி செய்தது மிகவும் மகிழ்ச்சி, பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார், ஷாந்தனு மிகவும் கஷ்டப்பட்டு இந்தப் படத்தில் வேலை செய்துள்ளார் கண்டிப்பாக அது அனைவரிடமும் சேரும், தயாரிப்பாளர் கண்ணன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.

நடிகை கயல் ஆனந்தி பேசியதாவது….

3 வருட உழைப்பு. பல தடைகளைத் தாண்டி இந்தப் படம் இப்போது வெளியாகத் தயாராகி உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, யாரும் விட்டுக் கொடுக்காமல் இந்தப் படத்திற்கு உழைத்துள்ளோம்.

விக்ரம் சுகுமாரன் சார் சினிமாவை மிகவும் ரசித்து வேலை செய்பவர், அவருடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ஷாந்தனு உடன் இணைந்து நடித்தது மிகவும் சுலபமாக இருந்தது.

இந்தப் படம் ராம்நாடு மக்களின் வாழ்க்கை பற்றிப் பேசுவதாக இருக்கும். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி இந்த படத்தை அனைவரும் தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும் நன்றி.

anandhi speech at Raavana Kottam press meet

More Articles
Follows