‘பத்து தல’ சிலம்பரசனுக்கு வில்லனாகும் கௌதம் மேனன்

‘பத்து தல’ சிலம்பரசனுக்கு வில்லனாகும் கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu gautham menonசில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் முஃப்தி ரீமேக் தமிழில் உருவாகி வருகிறது.

ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்

‘பத்து தல’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், டீஜே அருணாச்சலம், மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்பட பர்ஸ்ட் லுக் செம வைரலாகி அனைத்து தரப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்பட வில்லன் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

‘பத்து தல’ திரைப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக கவுதம் மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து அசத்தியிருந்த கவுதம் மேனன் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது..

சிம்பு – கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Gautham Menon plays baddie in STR’s film

‘அண்ணாத்த’ படத்தை முடித்துவிட்டு ‘ராணா’வை கையில் எடுக்கும் ரஜினி

‘அண்ணாத்த’ படத்தை முடித்துவிட்டு ‘ராணா’வை கையில் எடுக்கும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rana rajiniமலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.

தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘கூகுள் குட்டப்பன்’ என்று பெயரிடப்பட்டடுள்ளது.

இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது கே.எஸ்.ரவிக்குமாரிடம் மீண்டும் எப்போது ரஜினியுடன் படம் பண்ணுவீர்கள்? என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த KSR.. “மாதம் ஒருமுறையாவது ரஜினியுடன் நட்பு ரீதியாக பேசி வருகிறேன்.

சமீபத்தில் ‘ராணா’ படத்தின் கதையை மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் என கேட்டார்.

நானும் சொல்லிவிட்டு வந்தேன். மிகவும் நல்ல கதை என்று பாராட்டிவிட்டு இப்போது இருக்கும் உடல்நிலையில் என்னால் அதை செய்ய முடியாது. விரைவில் செய்யலாம் என்று ரஜினி சொல்லி இருக்கிறார்” என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.

KS Ravikumar about Rajinikanth’s Raana

சிலம்பரசன் படத்தை தொடர்ந்து நாவலை படமாக்கும் சுரேஷ் காமாட்சி

சிலம்பரசன் படத்தை தொடர்ந்து நாவலை படமாக்கும் சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி..

இதில் ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்ததுடன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் வெற்றி பெற்றார்..

இந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் TR நடிக்கும் ‘மாநாடு’ என்கிற படத்தைத் தயாரித்து வருகிறார் சுரேஷ் காமாட்சி.

அரசியல் கதைக்கள பின்னணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது..

இதைத் தொடர்ந்து தனது தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தை தானே இயக்கவுள்ளார் சுரேஷ் காமாட்சி.

ஒரு இளம் பெண் காவலர் தனது பணியில் அன்றாடம் சந்திக்கும் அவலங்களை நெற்றிப்பொட்டில் அறைந்தது போல ‘மிக மிக அவசரம்’ படத்தை இயக்கிய, சுரேஷ் காமாட்சி, தனது அடுத்த படத்திலும் அதேபோன்ற யதார்த்த வாழ்வியல் ஒன்றையே படமாக்க இருக்கிறார்.

கிராமத்துப் பின்னணியில், வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியலை மையமாக வைத்து, உணர்வுப்பூர்வமான கதைகளை எழுதிவருபவர் பிரபல எழுத்தாளர் ம. காமுத்துரை. இவர் எழுதிய ‘முற்றாத இரவொன்றில்’ என்கிற நாவலை தழுவி இப்படம் உருவாக இருக்கிறது.

இந் நாவலைப் படமாக்கும் உரிமையை மா.காமுத்துரையிடம் இருந்து முறைப்படி பெற்றுள்ளார் சுரேஷ் காமட்சி..விரைவில் தொழில் நுட்பக் கலைஞர்கள் விபரம் தெரிவிக்கப்படும்.

Maanaadu producer Suresh Kamatchi next film announced
IMG-20210128-WA0054

ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்

ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhruv Vikramஇயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குனர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார்.

அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு’ ஆகிய திரைப்படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இந்த வெற்றியைத்தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புதிதாக ஐந்து திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக, கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி அறிவித்திருந்தார்.

இதில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி, மற்றும் அறிமுக இயக்குனர்கள் சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஆகிய ஐந்து இயக்குனர்களும் புதிதாக தயாரிக்க உள்ள ஐந்து திரைப்படங்களையும் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் ’ரைட்டர்’ என்ற படத்தில் சமுத்திரகனி நடிப்பில் அதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

Maari Selvaraj and Dhruv Vikram joins for new film

குடியரசு தினத்தில் செங்கோட்டையில் வன்முறை..; விவசாய சங்க தலைவருக்கு போலீஸ் நோட்டீஸ்

குடியரசு தினத்தில் செங்கோட்டையில் வன்முறை..; விவசாய சங்க தலைவருக்கு போலீஸ் நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

red fort violence (1)ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தில் செங்கோட்டையில் நடைபெற்ற வன்முறையில், விவசாய சங்க தலைவர்களுக்கு பங்கு உள்ளதாக, டெல்லி காவல்துறை நேற்று அறிவித்தது.

இதில் போராட்டத்திற்கு தலைமை தாங்குபவர்களில் ஒருவரும், கிரந்திகாரி விவசாய சங்க தலைவருமான தர்ஷன் பாலிற்கு, மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செங்கோட்டையில் நடைபெற்ற வன்முறை இழிவான மற்றும் தேச விரோத செயல் எனவும், அதுதொடர்பாக உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், தங்கள் அமைப்பில் இருந்து வன்முறையில் ஈடுபட்டவர்களின் விவரங்களை சமர்பிக்க தர்ஷன் பாலிற்கு காவல்துறை கேட்டுக்கொண்டது.

Police issued notice to farmers head due to violence at red fort

‘வாய்தா’ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய்சேதுபதி…!

‘வாய்தா’ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய்சேதுபதி…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா லாக்டவுனால் திண்டாடிய திரையுலகம் தற்போது தான் மெல்ல தளைக்க ஆரம்பித்துள்ளது. இந்த சமயத்தில் தயாரிப்பாளர் முதல் இசையமைப்பாளர் வரை முற்றிலும் புதுமுகங்களின் முயற்சியாக தயாராகி உள்ளது “வாய்தா” திரைப்படம். அறிமுக இயக்குநர் மகிவர்மன் C.S. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் வாய்தா படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகிறார்.

‘ஜோக்கர்’, ‘கே.டி. என்கிற கருப்பத்துரை’ படம் மூலம் பிரபலமான நடிகர் மு.ராமசாமி, நாசர், அறிமுக நாயகி ஜெசிகா பவுலின், ‘நக்கலைட்ஸ்’ புகழ் பிரசன்னா மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனிடம் நீண்ட காலமாக உதவியாளராக பணியாற்றிய சேது முருகவேல் அங்காரகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘அசுரன்’, ‘வடசென்னை’, ‘சூரரைப்போற்று’ உள்ளிட்ட படங்களில் பிரம்மாண்ட செட் அமைத்த கலை இயக்குநர் ஜாக்சன் இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். வராஹா சுவாமி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கே.வினோத்குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சி.லோகேஷ்வரன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை இன்று காலை 11 மணி அளவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். போஸ்டரில் கழுதையுடன் மு.ராமசாமி கோர்ட் கூண்டுக்குள் இருப்பது போன்ற காட்சியும், சாமானியர்கள் மேல் நடத்தப்படும் வன்முறை என்ற வாசகமும் கவனம் ஈர்த்துள்ளது. மோஷன் போஸ்டரின் இறுதியில் சட்டம் குறித்து நாசர் பேசும் வசனம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ‘வாய்தா’ திரைப்படம் இதுவரை 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vaaitha

Vijay Sethupathi launched Vaaithaa first look and motion poster

More Articles
Follows