அம்மா நிச்சயதார்த்த புடவையை 32 வருடத்திற்கு பிறகு நலங்குக்கு கட்டிய ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ பட நடிகை

அம்மா நிச்சயதார்த்த புடவையை 32 வருடத்திற்கு பிறகு நலங்குக்கு கட்டிய ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக் உடன் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் நடித்தவர் நிஹாரிகா கொனிடேலா.

இவர் சிரஞ்சீவியின் தம்பி நடிகர் நாகபாபுவின் மகள் .

நிஹாரிகா & காதலர் சைதன்யா ஜொன்னலகட்டா ஆகியோரது நதிருமண நிச்சயதார்த்தம் ஆகஸ்டில் நடைபெற்றது.

இவர்களது திருமணம் நாளை மறுநாள் டிசம்பர் 9-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடைபெற உள்ளது.

திருமணத்துக்கு முன் நலங்கு நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது.

அதில் 32 வருடங்களுக்கு முன்னர் தனது அம்மா நிச்சயதார்த்தத்துக்கு அணிந்த பட்டுப்புடவையை நிஹாரிகா அணிந்துள்ளார்.

அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து மணப்பெண்ணின் தந்தை நடிகர் நாகபாபு கூறுகையில்.

எனது மனைவி அழகாக இருக்கிறார்.. மகள் நிஹாரிகா தேவதையாக இருக்கிறார்.

நடிகர் சிரஞ்சீவி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

Niharika Konidela wears her mom’s engagement saree for a pre-wedding function

Niharika konidela

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் ‘மக்கள் செல்வன்’ படத்தில் இணைந்த சம்யுக்தா

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் ‘மக்கள் செல்வன்’ படத்தில் இணைந்த சம்யுக்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi Samyukthaடெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் ‘துக்ளக் தர்பார்’.

இவர்களுடன் பார்த்திபன், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திலிருந்து அதிதிராவ் விலகியதால் அவருக்கு பதிலாக ராஷி கண்ணா ஒப்பந்தம் ஆனார்.

இப்படத்துக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுத 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

96 பட புகழ் கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.

வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரித்து வருகிறது.

அரசியலை மையப்படுத்தி இப்படத்தை உருவாகி வருகின்றனர்.

இந்நிலையில் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா இணைந்துள்ளார்.

Bigg Boss Samyuktha is on board for Vijay Sethupathi’s tughlaq durbar

அறத்தின் பக்கம் நிற்பவனை சங்கி & பி டீம் என கூறுவதா..? கல்வியிலும் கறைவேட்டிகள் மூக்கை நுழைப்பது ஏன்.? கமல் கண்டனம்

அறத்தின் பக்கம் நிற்பவனை சங்கி & பி டீம் என கூறுவதா..? கல்வியிலும் கறைவேட்டிகள் மூக்கை நுழைப்பது ஏன்.? கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasanஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ 280 கோடி முறைகேடு் ஊழல் புகார் எழுந்தது.

எனவே தமிழக அரசு நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.

சூரப்பாவின் செயல்பாடுகளை அ.தி.மு.கவுடன் இணைந்து தி.மு.கவும் விமர்சனம் செய்து வருகின்றது.

இந்த நிலையில், சூரப்பாவுக்கு ஆதரவாக கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டார்.

அதில்… ‘எவனோ எழுதிய மொட்டைக் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணை குழு அமைத்துள்ளனர்.

அண்ணாப் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தவர்களையும், அண்ணாப் பல்கலைக்கழக வாகனங்களையும் பயன்படுத்தியவர்களையும் விசாரித்து விட்டீர்களா?

உயர் கல்வித்துறை அமைச்சர் 60 லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டுதான் பணி நியமனம் செய்கிறார் என்று ஜூனியர் விகடனில் செய்தி வந்ததே விசாரித்துவிட்டீர்களா?

தேர்வு தேர்ச்சி ஆகியவை கல்வியாளர்கள் கடமை. கறைவேட்டிகள் இங்கேயும் மூக்கை நுழைப்பது ஏன்?

இதுவரை காசு கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள், தற்போது மதிப்பெண் கொடுத்து ஓட்டு வாங்க முயற்சி செய்கிறீர்களா?

சூரப்பாவின் அரசியல் நிலைப்பாடுகள் மீது மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்.

ஆனால், ஒருவர் நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால் கமல்ஹாசன் நான் சும்மா இருக்க மாட்டேன்.

நேர்மையாளர்களின் கூடாரமான மக்கள் நீதி மய்யமும் சும்மா இருக்காது.

சூரப்பா இன்னொரு நம்பிநாராயணனா?’ என்று கடுமையாக பேசியிருந்தார் கமல்

சூரப்பாவும் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இதனால் கமல் மீது அரசியல்வாதிகளின் கண்டனம் எழுந்தது. கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

அவர், சங்கி, பா.ஜ.கவின் பிடீமாக செயல்படுகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன.

இதனையடுத்து தன் ட்விட்டரில் தன் கருத்தை தெரிவித்துள்ளார் கமல்.

அதில்… “அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது.

வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை.

திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?

தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம்.

ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்.

MNM leader Kamal Haasan clarifies his political stand over Soorappa issue

டிசம்பர் 8 பாரத் பந்த்..; மக்கள் நலனுக்காக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே கடையடைப்பு என அறிவிப்பு

டிசம்பர் 8 பாரத் பந்த்..; மக்கள் நலனுக்காக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே கடையடைப்பு என அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bharat Bandhடெல்லி சலோ என்ற அறவழிப் போராட்டத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர்

விவசாய சங்கங்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசு ஈடுபட்டும் உடன்பாடு ஏற்படவில்லை.

எனவே நாளை டிசம்பர் 8 பாரத் பந்த் (நாடு தழுவிய முழு அடைப்பு) நடக்கவுள்ளது.

அப்போது சாலை மறியல்களும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து பாரத் கிசான் அமைப்பு தெரிவித்துள்ளதாவது…

“நாங்கள் சாதாரண மனிதர்களுக்கு தொல்லை கொடுக்க விரும்பவில்லை.

எனவே காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறோம். 3 மணிக்கு முடிக்கவேண்டும் என திட்டமிட்டுள்ளோம்” என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Peaceful Bharat Bandh From 11 AM to 3 PM Tomorrow, Say Farmers

குழந்தைகள் உரிமை விழிப்புணர்வு..; த்ரிஷாவை போல மற்றவர்களும் முன்வர வேண்டும் என UNICEF வேண்டுகோள்

குழந்தைகள் உரிமை விழிப்புணர்வு..; த்ரிஷாவை போல மற்றவர்களும் முன்வர வேண்டும் என UNICEF வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

unicef trishaUNICEF யுனிசெப் அமைப்பின் குழந்தை உரிமைகளுக்கான நல்லெண்ண தூதராக இருந்து வருகிறார் நடிகை த்ரிஷா.

எனவே இந்த அமைப்பு தொடர்பான விழிப்புணர்வு செயல்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

கடந்த 2017ல் திருப்போரூர் அருகே திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழிக்கும் வகையில் நடைபெற்ற கழிப்பறை கட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தானே செங்கற்களை அடுக்கி கழிவறை கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்

இந்த நிலையில், திரிஷாவின் செயலை மேற்கோள்காட்டி மற்ற நடிகர், நடிகைகளுக்கும் UNICEF அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

தன் சமூக வலைத்தள பக்கத்தில் UNICEF அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி ஜாப் சக்காரியா பதிவிட்டுள்ளதாவது…

“கிராமங்களில் கழிப்பறையின் அவசியத்தை உணர்த்த திரிஷா, கழிப்பறை கட்டுமானத்தை அவரே தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு ரூபாய் கூட நடிகை திரிஷா சம்பளமாக வாங்கவில்லை.

திரிஷாவைப் போன்று குழந்தைகள் உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மற்ற நடிகர், நடிகைகள் முன் வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

UNICEF ceo praises actress Trisha

ஸ்டாலினை முதல்வராக்குவோம்..; கொரோனா காலத்தில் விவசாயிகள் போராட்டத்தை கண்டுக்காமல் புதிய நாடாளுமன்ற பூமி பூஜை தேவையா? – நடிகர் விஜய் வசந்த்

ஸ்டாலினை முதல்வராக்குவோம்..; கொரோனா காலத்தில் விவசாயிகள் போராட்டத்தை கண்டுக்காமல் புதிய நாடாளுமன்ற பூமி பூஜை தேவையா? – நடிகர் விஜய் வசந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay vasanth MK Stalinநாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கு அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு அவரது நினைவு நாளான இன்று மரியாதை செலுத்தினார் நடிகரும் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான விஜய் வசந்த்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார் அவர்.

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதை கண்டுகொள்ளாமல், புதிய நாடாளுமன்றத்திற்கு பூமி பூஜை போடுவதில் மத்திய அரசு குறியாக உள்ளது.

புதிய நாடாளுமன்றம் கட்ட ஒதுக்கப்பட்டுள்ள தொகையை கொரோனா தடுப்பு பணிக்கும், எம்பி நிதிக்கும் பயன்படுத்தலாம்.

ஆனால், மத்திய அரசு பூமி பூஜை போடுவது வேடிக்கையாக உள்ளது.

காங்கிரஸ்-திமுக கூட்டணி உறுதியாக உள்ளது.

முக. ஸ்டாலினை முதல்வராக்க காங்கிரஸ் தீவிரமாக பாடுபடும் என பேசினார்.

Vijay vasanth supports DMK leader MK Stalin

More Articles
Follows