துபாயில் நடைபெற்ற 2.0 பட பிரஸ் மீட் ஹைலைட்ஸ்

துபாயில் நடைபெற்ற 2.0 பட பிரஸ் மீட் ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

High lights of 2point0 Press meet at Dubaiஷங்கர்-ரஜினி-ஏஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை துபாய் நாட்டில் நடைபெறவுள்ளது.

எனவே இன்று அங்குள்ள பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது….

ஏஆர். ரஹ்மான் பேசியதாவது…

இந்த படத்தில் 3 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. நாளை இரண்டு பாடல்கள் மட்டுமே வெளியிட இருக்கிறோம்.

மீதமுள்ள ஒரு பாடலை விரைவில் வெளியிட உள்ளோம்.

எமிஜாக்சன் பேசியதாவது…

இதற்கு முன் செய்த படங்களை விட முற்றிலும் புதிய அனுபவமாக இப்படம் இருந்தது.

படத்தின் முதல் நாள் சூட்டிங் முதல் அனைத்தும் ஒரு சவாலாக இருந்தது.

ஷங்கர் பேசியதாவது…

இது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் கிடையாது. உலக ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு இந்திய திரைப்படம் இது.

இப்படத்தின் கரு கிடைக்கவே ஒரு வருடத்திற்கு மேலானது.

இதில் சொல்லப்பட்டுள்ள ஒரு கருத்திற்கு உலகம் தெரிந்த ஒரு நடிகர் தேவைப்பட்டார். அதான் அர்னால்ட்டை அனுகினோம்.

ஆனால் சில காரணங்களால் அவரை ஒப்பந்தம் செய்ய முடியவில்லை. அதன்பின்னர் அக்‌ஷய்குமாரிடம் பேசி ஒப்பந்தம் செய்தோம்.

ரஜினியுடன் பணி புரிந்த அனுபவம் பற்றி அக்‌ஷய்குமார் பேசியதாவது…

ரஜினிகாந்த் மிகவும் ஜாலியான மனிதர். ஒரு யதார்த்தமான மனிதரும் கூட. அவருடன் பழகிய அனுபவம் புதுமை.

வாழ்க்கையில் புகழின் உச்சியை தொட்ட பின்பும் இவ்வளவு எளிமையாக இருக்கிறார். அவர் புகழை தன் தலையில் ஏற்றிக் கொள்வதில்லை. எனவேதான் எல்லாருக்கும் பிடித்த வகையில் இருக்கிறார்.

இன்னும் அவரிடம் 5 படங்களாவது பணி புரிய வேண்டும். அவரிடம் நிறைய கற்றுக் கொள்ள இருக்கிறது. என்றார்.

ரஜினிகாந்த் பேசும்போது…

இந்திய சினிமாவே பெருமைப்பட கூடிய படம் 2.0 படம். இது உலக சினிமா ரசிகர்களை கவரக்கூடிய படம்“ என்றார்.

2 Point 0 Press Meet Photos (12)

ஷங்கர் ஒரு டைரக்டரே கிடையாது… 2.0 பிரஸ்மீட்டில் அக்‌ஷய் ஓபன் டாக்

ஷங்கர் ஒரு டைரக்டரே கிடையாது… 2.0 பிரஸ்மீட்டில் அக்‌ஷய் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 Point 0 Press Meet Photos (20)ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏஆர். ரகுமான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவை கையாள, லைகா நிறுவனம் ரூ. 400 கோடியில் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை துபாய் நாட்டில் நடைபெறவுள்ள நிலையில் இன்று உலக பத்திரிகையாளர்களை துபாய் நாட்டில் படக்குழுவினர் சந்தித்தனர்.

பிரஸ்மீட்டில் அக்‌ஷய்குமார் பேசியதாவது….

இதில் நான் டாக்டர் ரிச்சர்ட் என்ற கேரக்டரில் நடிக்கிறேன். என் கேரக்டருக்கு மேக்அப் போட 3.30 மணி நேரம் ஆகும் என்றால் அந்த மேக் அப்பை எடுக்க 1.30 மணி நேரம் ஆகும்.

இதில் ஆன்ட்டி ஹீரோ கேரக்டரில் நடிப்பது புதிய அனுபவமாக இருந்தது.

என்னை பொறுத்தவரை ஷங்கர் ஒரு டைரக்டரே கிடையாது. அவர் ஒரு சயின்டிஸ்ட்.

அவர் இந்த படத்தில் சொல்ல வரும் விஷயத்தை நினைத்து கூட பார்க்க முடியாது.

இதற்கு மேல் படத்தை பற்றி நான் சொல்லக்கூடாது என கான்ட்ராக்டில் கையெழுத்து போட்டுள்ளேன். ஒருவேளை சொன்னால் சம்பளம் தரமாட்டர்கள் என நினைக்கிறேன்.” என்று பேசினார் அக்சய்குமார்.

Akshaykumar speech about his character in 2point0 movie

2 Point 0 Press Meet Photos (24)

நீங்கள் ஏன் எளிமையாக இருக்கிறீர்கள்..? 2.0 விழாவில் ரஜினியின் சூப்பர் பதில்

நீங்கள் ஏன் எளிமையாக இருக்கிறீர்கள்..? 2.0 விழாவில் ரஜினியின் சூப்பர் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth at 2 point 0 audio launchஇப்படி ஒரு எளிமையான சூப்பர் ஸ்டாரை இந்திய சினிமா பார்த்திருக்குமா? என்பது தெரியாது.

அந்த எளிமைக்கு சொந்தக்காரர் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் என்று சொன்னால் அது துளியளவும் மிகையாகாது.

ரஜினியை பற்றி உங்கள் அபிப்ராயம் என்று எந்த பிரபலத்திடம் கேட்டாலும் அவர்கள் கூறும் பதில் அவரது எளிமை என்னை கவர்ந்தது என்பார்கள்.

இதே கேள்வியை இன்று துபாயில் நடைபெற்ற 2.0 படத்தின் பிரஸ் மீட்டிலும் கேட்டுள்ளனர்.

நிஜ வாழ்க்கையில் நான் நடிப்பது இல்லை. வாழ்க்கையில் நடிப்பதற்கு நான் சம்பளம் எதையும் பெறுவதில்லை. என்று தனக்கே உரிய புன்னகையுடன் பதில் சொன்னாராம் சூப்பர் ஸ்டார்.

மெர்சல் ரிலீஸாக தயாரிப்பாளருக்கு பணம் கொடுத்து உதவிய விஜய்..?

மெர்சல் ரிலீஸாக தயாரிப்பாளருக்கு பணம் கொடுத்து உதவிய விஜய்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay with mersal producer hema rukmaniஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மெர்சல் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன் 100வது படைப்பாக தயாரித்தது.

இப்படம் வெளியாகும் சமயத்தில் பல பிரச்சினைகளை சந்தித்தது.

தலைப்பு பிரச்சினை, சென்சார் பிரச்சினை, விலங்குகள் நல வாரியம் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளால் படம் தீபாவளிக்கு வெளியாகுமா? என்ற சந்தேகமும் எழுந்தது.

இதனால் படத்தை வெளியிட முடியாத சூழ்நிலையில் தவித்து வந்தாராம் தயாரிப்பாளர் முரளி.

இதனையறிந்த விஜய் ரூ. 5 கோடி தொகையை கொடுத்து, படத்தை வெளியிட உதவி செய்தாராம்.

நவம்பர் 7-ல் கமல்ஹாசனின் அரசியல் அவதாரம் ஆரம்பம்

நவம்பர் 7-ல் கமல்ஹாசனின் அரசியல் அவதாரம் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kamal haasanநான் பல வருடங்களாக அரசியலில் இருக்கிறேன் என கமல் சொன்னாலும் அது அண்மைகாலமாகத்தான் உறுதியாகி வருகிறது.

ட்விட்டர் தளத்தில் கருத்து சொல்லும் கமல் அரசியல் களத்திற்கு வரட்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை அழைக்க ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் தன் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் தன் ரசிகர் மன்றத்தினருடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்நிலையில், ஆட்சியாளர்கள் மக்களுக்காக உழைப்பார்கள் என்று நாம் நம்பியது போதும், நாமே களத்தில் இறங்குவோம் என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில்… ’செயலில் ஈடுபடுவார்கள் என்று பொருத்தது போதும், நம்மால் முடியும்.

நவம்பர் 7 ம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிடுவேன்.

நம் இயக்கத்தார் என்னுடனும், மக்களுடனும் தொடர்பு கொள்ள வசதியாக ஏற்பாடுகள் நடக்கின்றன.

தமிழகத்திற்கு கடமையாற்ற நினைப்பவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.

தியாகமாக நினைத்து முன்வருபவர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் என்னை கடன்பட செய்வார்கள்.

இளைஞர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கடமையும் தேவையும் எனக்கு வந்து விட்டது.

நமது இயக்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோருடன் சேர்ந்து தமிழகத்துக்கு பலம் சேர்ப்போம். இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தன் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை வருகிற நவம்பர் 7ஆம் தேதி அவரது பிறந்தநாளில் வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.

நாளை ஆந்திராவை அதிர வைக்கும் விஜய்; பாஜக-வுக்கு ரகசிய கட்டளை

நாளை ஆந்திராவை அதிர வைக்கும் விஜய்; பாஜக-வுக்கு ரகசிய கட்டளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vijayகடந்த ஒரு வாரமாக (அதாவது தீபாவளி அக். 18) விஜய்யின் மெர்சல் புயல் தமிழக அரசியல் உலகை கலக்கியது.

மெர்சல் படம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த காரணம் பாஜக. தலைவர்கள்தான் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இதனால் டெல்லி கட்சி தலைமையில் சில பிரச்சினைகள் எழுந்ததாம்.

தற்போது அது தமிழகத்தில் தணிந்துள்ள நிலையில் இந்த புயல் #adirindhi அடிரிந்தி என்ற பெயரில் தெலுங்கில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாளை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரிலீஸ் ஆகிறது.

தமிழக பிரச்சினை ஆந்திராவில் தொடரக்கூடாது என்பதால், தெலுங்கு தேசத்தில் உள்ள பாஜக.வினரை எதுவும் பேச வேண்டாம் என கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளதாம்.

More Articles
Follows