பிக்பாஸை தடை செய்; கமலை கைது செய்; போலீசில் புகார்

பிக்பாஸை தடை செய்; கமலை கைது செய்; போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kamal Haasanவிருமாண்டி, விஸ்வரூபம் உள்ளிட்ட கமல் நடிக்கும் படங்களுக்கு மட்டும்தான் இதுவரை தடை கோரிய புகார் மனுக்களை பார்த்தோம்.

தற்போது அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தடை செய்ய வேண்டும் என புகார் மனு ஒன்றை காவல்துறை ஆணையரிடம் கொடுத்துள்ளனர் இந்து மக்கள் கட்சி.
அவர்கள் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது…

இந்திய மக்கள் மானமே முக்கியம் என்ற கொள்கை உடையவர்கள்.

இந்திய கலாச்சார பண்பாடுகளை கெடுக்கும் நோக்கில் தொடர்ந்து சினிமா, டி.வி. நிகழ்ச்சிகள் செயல்பட்டு வருகின்றன.

இதன் உச்சக்கட்டமாக பிக்பாஸ் எனும் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இதில் எவ்வித தொடர்பு இல்லாத ஏழு ஆண்களும், ஏழு பெண்களும் கலந்து கொண்டு ஆபாசமாக பேசியும், நடித்தும் வருகிறார்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொலைக்காட்சியை பார்த்து வரும் சூழலில் இது போன்ற நிகழ்ச்சிகள் சமூக சீர்கேடுகளை அதிகரிக்க செய்யும்.

தமிழர்கள் உயிரைவிட மேலாக மதித்து போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கூட கிண்டலடிக்கும் காட்சிகளும் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளது.

இது ஏழு கோடி தமிழர்களின் மனதையும் புண்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனையும், அந்நிகழ்ச்சியில் நடிக்கும் நமீதா, ஓவியா, காயத்ரி ரகுராம், ஜூலி, ஆர்த்தி, ரைசா, கஞ்சா கருப்பு, வையாபுரி, சக்தி, அருள், தரணி, சினேகன், கணேஷ் உள்ளிட்ட 14 பேரையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை காப்பாற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளது இந்து மக்கள் கட்சி.

சசிகுமாரின் ஆஸ்தான இசையமைப்பாளருக்கு வாய்ப்பளித்த உதயநிதி

சசிகுமாரின் ஆஸ்தான இசையமைப்பாளருக்கு வாய்ப்பளித்த உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

darbuka sivaதேசிய விருது பெற்ற பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கவுள்ள புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தில் உதயநிதியுடன் பார்வதி நாயர், நமீதா பிரமோத் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இதுவரை இப்படத்திற்கு பெயரிடப்படவில்லை.

வருகிற ஜீலை 19ஆம் தேதி முதல் இதன் சூட்டிங் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் சசிகுமாரின் ‘கிடாரி’ மற்றும் ‘பலே வெள்ளையத்தேவா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த தர்புகா சிவாவை இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘மகேஷிண்டே பிரத்திகரம்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Darkuba Shiva will compose music for Udhayanidhi Priyadarshan combo movie

மோகன்லால்-விஷாலுக்கே வில்லியான ஹன்சிகா

மோகன்லால்-விஷாலுக்கே வில்லியான ஹன்சிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mohanlal villainமோகன்லால் உடன் விஷால் இணைந்து நடிக்கும் படம் வில்லன்.

இப்படத்தில் ஹன்சிகா, முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டது.

தற்போது ஹன்சிகாவின் கேரக்டர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் இவர் நெகட்டிங் ரோலில் நடிக்கிறார்.

நீண்ட நாட்களாக மலையாள சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதும், அந்த கேரக்டர் தனக்கு நல்ல பெயரை வாங்கித் தர வேண்டும் என விரும்பினாராம்.

தற்போது அந்த ஆசை நிறைவேறியுள்ளதாக தெரிவித்துள்ளார் ஹன்சி

தமிழில் பிரபுதேவாவுடன் குலேபகாவலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா.

Hanshika becames baddie for Mohanlal and Vishal

பாலகிருஷ்ணா படத்திற்காக இணைந்த கேஎஸ் ரவிக்குமார்-கார்த்தி

பாலகிருஷ்ணா படத்திற்காக இணைந்த கேஎஸ் ரவிக்குமார்-கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KS Ravikumar Karthi joins Gautami Putra Satakarni tamil audio launchரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா நிறுவனம் சார்பாக, நரேந்தரா தயாரித்துள்ள படம், ’கெளதமி புத்ர சாதர்கணி’.

தெலுங்கில் வெளியான இந்தப் படம், டப் செய்யப்பட்டு தமிழில் ரிலீஸ் ஆகிறது. பாலகிருஷ்ணா, ஹேமாமாலினி, ஸ்ரேயா, கபீர்பேடி, தணிகலபரணி உட்பட பலர் நடித்துள்ளனர்.

வசனத்துடன் தமிழாக்கப் பொறுப்பேற்றிருப்பவர் மருதபரணி. கிரிஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

,இப்பட பாடல்களை கார்த்தி வெளியிட, கே.எஸ்.ரவிகுமார் பெற்றார்.

விழாவில் பாலகிருஷ்ணா பேசும்போது,

‘தமிழ்நாட்டு தண்ணி குடிச்சி, சென்னையில் வளர்ந்தவன் நான். இது நம்மளை ஆண்ட ஒரு மன்னனின் கதையை கொண்ட படம்.

இந்த கதையை கேட்டவுடனே எங்கப்பா என்.டி.ஆர், பெரியப்பா எம்.ஜி.ஆர், சித்தப்பா சிவாஜி… இவங்களை நினைச்சுக்கிட்டேன்.

இவங்க இன்ஸ்பிரேசன் இல்லாம எந்த படங்களும் பண்ண முடியாது.

இதன்பின்னர் கே.எஸ் ரவிகுமார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறேன். அதன் சூட்டிங் கும்பகோணத்தில் 40 நாட்கள் நடக்கிறது’ என்றார்.

KS Ravikumar Karthi joins Gautami Putra Satakarni tamil audio launch

Balakrishna KSR and karthi

என் அப்பாவே அவருடைய படத்தை பார்க்கவிட மாட்டார்… – அதர்வாமுரளி

என் அப்பாவே அவருடைய படத்தை பார்க்கவிட மாட்டார்… – அதர்வாமுரளி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

murali atharvaaரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நான்கு நாயகிகளுடன் அதர்வா மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள படம் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்.

இப்படம் வருகிற ஜீலை 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

எனவே இப்படம் பற்றி அதர்வா முரளி கூறியதாவது…

இதுவரை நான் வெவ்வேறு வித்யாசமான கதையில் நடித்துள்ளேன். ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் நடித்த பிறகு தான் எனக்கு காமெடி நன்றாக வரும், காமெடி எனக்கு பிடிக்கும் என்று எனக்கே தெரியும்.

நான் ஆக்சன் கதை ஒன்றில் நடித்தால் தொடர்ந்து அதே போன்று ஆக்சன் கதைகள் வந்து கொண்டே இருக்கும்.

பரதேசி போன்ற ஒரு படத்தில் நடித்தால் அதை போன்ற கதைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

எனக்கு ரொம்ப நாளாக காமெடி கலந்த ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்று ஆசை. நான் நிறைய காமெடி கதைகள் கேட்டுள்ளேன் அதை கேட்கும் போது எனக்கே சிரிப்பு வராது.முதலில் எனக்கு சிரிப்பு வந்தால் மற்றவர்களுக்கும் சிரிப்பு வரும்.

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தின் கதையை கேட்கும் போது முதல் பத்து நிமிடத்திலேயே எனக்கு தெரிந்து விட்டது இந்த படத்தில் நான் நடிக்க போறேன் என்பது.

இந்த கதையை கேட்கும் போது ஓபன் மைண்டாக தான் கேட்டேன், முதல் 10 நிமிடத்தை அவர் எனக்கு கூறியவுடன் முடிவு செய்துவிட்டேன் இந்த கதையில் நான் நடிக்க போகிறேன் என்பதை மற்றவை எல்லாம் எனக்கு போனஸ் தான்.

ஜெமினிகணேசன் சார் என்றால் ” லவர் பாய் ” ” என்று எல்லோரும் சொல்லுவார்கள் அவர் ஒரு ” காதல் மன்னன் “. அவருடைய பெயரை வைத்துக்கொண்டு நான் ஒரே ஒரு நாயகியுடன் நடிக்க முடியாது.

என்னுடைய தந்தை காதல் சொல்லாத மன்னன். என்னுடைய தந்தை நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற ” இதயமே இதயமே ” பாடலை ஊரு காட்சியில் வைத்தது இயக்குநரின் ஐடியா.

இதை நாங்கள் முதலேயே பிளான் செய்து எடுக்கவில்லை. அந்த காட்சியை படமாக்கும் போது இயக்குநர் கூறிய ஐடியா தான் இது. அதே போல் தான் ” நியாயமாரே ” என்று சூரி வார்த்தையை சூரி ஒரு காட்சியில் கூறுவார். நான் படத்தில் நடித்த 5 கதாநாயகிகளுடனும் மகிழ்ச்சியோடு தான் நடித்தேன்.

எனக்கு பெண்கள் ரசிகர்களாக இருப்பது மிகவும் சந்தோஷமான ஒன்றாகும். நான் சினிமாவுக்கு வரும் போது என்னுடைய தந்தையின் படங்களை பார்த்து வரவில்லை.

அப்பாவும் அவருடைய படங்களை பார்க்கவேண்டாம் என்று தான் கூறுவார். அப்பாவின் படங்களில் என்னால் நிச்சயம் நடிக்க முடியாது.

அவர் இருந்திருந்தால் என்னுடைய படங்களை பார்த்து என்னால் சொல்லி இருப்பார் என்று எனக்கு தெரியவில்லை.

எனக்கு இந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டும் , இதில் நடிக்க வேண்டாம் என்று சொல்லி தர யாருமில்லை.

நான் நடித்த ஒவ்வொரு படங்களும் புதுமையான படங்கள் தான். சூரி அண்ணாவோடு நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவம். அவர் நடித்த புஷ்பா புருஷன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

அதை போன்ற ஒரு காமெடி படத்தில் அவரோடு நடிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருந்தது அது எனக்கு இப்படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது என்றார் அதர்வா முரளி.​

Atharvaa talks about Murali and Gemini Ganeshanum Suruli Raajanum

ggsr atharvaa soori imman

 

எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா? தயாரிப்பாளரானார் மொட்டை ராஜேந்திரன்

எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா? தயாரிப்பாளரானார் மொட்டை ராஜேந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mottai Rajendranசினிமாவில் பைட் மாஸ்டராக இருந்து பாலா இயக்கிய நான் கடவுள் படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் மொட்டை ராஜேந்திரன்.

தற்போது வில்லன் ரோலை விட்டு காமெடிக்கு தாவிவிட்டார். இதுவும் கைகொடுக்கவே, இவரது காட்டில் பணமழைதான்.

இந்நிலையில் எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா? என்று பெயரிடப்பட்ட படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கிறார்.

கல்லூரி அகில் நாயகனாக நடிக்க, ’கமருகட்டு’ சஹானா நாயகியாக நடிக்கிறார்.

வர்ஷன் இயக்கியுள் இப்படத்தில் கிராமத்து பண்ணையாராக நடித்துள்ளார் ராஜேந்திரன்.

More Articles
Follows